விழித்திருக்கும் சுயம்புவொடு நீ விழித்திருக்க vertical bypass என்னுஞ் செங்குத்து நேரடித் தொடர்பு உடனடிச் செயல்பாட்டுக்கு வந்து, உனக்குத் தொடர்பான 15 உலகங்களும் சரி சீர் செய்யப்பட்டு 16வது ஷோடச சித்தி சத்தியப் பேருலகத்தில் ஈர்க்கப்படும்
சுயம்பு இருதய வாயினின்று மாகாரண சரீரமாய் வெளிப்பட்டு, 16ம் சத்தியப்பேருலகை, 15 உலகங்களோடும் இணைத்து, அவ்வுலகங்களுக்குப் பேராதாரமாகிக் குறைந்த பட்ச சத்தியை அளித்து வாழ வைக்கிறது
இம்மாகாரண சரீரம் மூலம் ஆதி சுயம்பு நம் மெய்க்கு மெய்யாகவும் உயிருக்கு உயிராகவும் இருக்கிறது
மூடிய அமைப்பாய் இருக்கும் 15 உலகங்களையும், திறந்த அமைப்பாய் மாற்றி 16ம் பேருலகில் ஈர்க்கச் செய்ய வல்லதாக மனிதம் 8ம் உலகாக ஈரேழு உலகங்கட்கிடையில் ஆதி சுயம்பு அமைத்துள்ளது
அந்நடுவின் செங்குத்து நடுவில் இருதய நடுவில் ஆதி சுயம்பு நிச்சயமாய் வாழ்கிறது
ஆதி சுயம்பு உன் ஜீவாதார உரிமையான பரிபூரண மெய்ஞ்ஞானத்தை உனக்களித்து, உன் உயிரை நித்திய போதி சுயம்புவாக முதலில் இரசவாதஞ் செய்யும்
அடுத்து உன் மெய்யின் ஒவ்வோர் அணுவும் படிப்படியாக சத்திய ஜோதி சுயம்புவாகும் பெரும் இரசவாதம் நிகழும்
இதுவே முத்தேக சித்தி என்ற வள்ளல் பிரான் அடைந்த பேரின்பப் பெரு வாழ்வு நிலை
நிச்சய ஆதி சுயம்பு தேகம், நித்திய போதி சுயம்பு தேகம் மற்றும் சத்திய ஜோதி சுயம்பு தேகம்
ஆறாதாரம் எனப்படும் மூலாதார சஹஸ்ரார ஒரு சக்கரமும் மற்ற 5 சக்கரங்களும் கருமச்சிறுநெறி விட்டு தருமப் பெரு நெறி பற்றி, ஆறு ஆழிகளாகும், தரும சக்கரங்களாகும், ஆழியாறு தலத்தின் சூக்குமம் இது
உயிரெடுத்த உடம்பெடுத்த நாம் அனைவருமே முத்தேக சித்தி பெறத் தகுதியுள்ளவர்கள்
சத்தியம் நிச்சயம்
நித்தியம் என்றே
உள்ளதைக் காட்டுஞ்
சற்குரு சரணம்
No comments:
Post a Comment