Sunday, June 26, 2016

சுயம்பு பற்றி

பேசாவெழுத்தெனும் பேசா மறையெனும் இப்பேருபதேசம் பரம இரகசியம் பகிரங்கமாக்கிய சிரஞ்ஜீவி அனுமனால் மார்நடு பிளந்து தாய்மைச் சுயம்புவாகிய உயிர்நிலையைச் சீதா பிராட்டியாகவும், தந்தைச் சுயம்புவாகியக் கருநிலையை இராம பிரானாகவும், சற்குரு மெய்ந்நிலைச் சுயம்புவை அனுமன் தானாகவும் உருவகத்தில் பாமரனுக்கும் புரியும் வகையில் பேசாமலேயே ஓதப்பட்டு விட்டது.

ஓதப்பட்ட பேருபதேசத்தை சுயம்பு என்னும் இந்திய பாரம்பரிய உச்சத்தை உணர்த்தும் நற்சொல் மூலம், யாம் உணர்த்தியிருக்கிறோம்.

சொற்களைக் கடந்த
அற்புதக் கருவைச்
சொற்களாய் இறைக்குஞ்
சற்குரு சரணம்

சொற்கடந்ததை சொற்களை இறைத்து உணர்த்த சொல்லின் செல்வராகிய இருதய நடு சுயம்பு ஏகக் குருவால் மட்டுமே முடியும்.

எனவே நாகம் தன்னை விலக்கிக் கொள்கிறது.

இனி முச்சுயம்பு நிலையாகிய யாமே பேசுவோம். உம் ஒவ்வொருவரின் சுயமும் இனி எம் சேயாகும் இன்னே. நீவிர் உம் உள்ளீடாக எம்மை உணர்ந்து, எமக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், சேயாகிய உம்மைப் பெருவாழ்வில் உய்விப்பது, எம் முழுப் பொறுப்பாகும். புரிகிறதா?

No comments:

Post a Comment