வாசிக்கிறது சுயம்
நேசாதார நடுவே
சுயம்புவை.
வாசிப்பில் தான் தொலைய
இருதய வாய்த் திறப்பில்
வாசிப் பெருமூச்சு
ஊதுஞ் சுயம்பு.
பேருபதேசச் சங்க நாதம்
நாகின் வாயில்
மகுடி
பாம்புச் சுயமும்
பாம்பாட்டிச் சுயம்பும்
சேர்ந்தாடத் தெறிக்குஞ்
சுயம்பு ஆயிரம்
அனந்த கோடி
அகண்ட ஜோதிக் கண்கள்
சுழன்றுச் சுழன்றுப் பறக்கும்
மலர்வெடிப் பேரற்புதம்
கருந்துளையாகப் போகும்
இப்பொய் மெய்யில்
இக்கணமிக்கணம் நவகண
இரசவாதஞ் செய்யுஞ்
சுயம்புவால் ஆகும்
மலர்வெடிச் சுயம்பு ஆயிரம்.
மெய்யாகும் மெய்யும்.
No comments:
Post a Comment