என் தனித்தன்மை அவ்வளவு முக்கியமா, சுயம்பே?
ஆம், ஒவ்வொன்றும் மற்றொன்றோடு ஒப்பிட இயலாத் தனித்தன்மையுடன் தான் எம்மால் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால் மெய்யாகவே நீயும் சுயம்பே தனித்தன்மையுள்ள. அன்பின் மிகுதியால் எம்மைத் தந்தை தாய் என்று நீ விளித்தாலும், மெய்யாகவே எம்மைப் போன்ற சுயம்புவாகவே உன்னைப் பூரணமாக யாம் வெளிப்படுத்தியுள்ளோம். சுயம்பு உனக்குந் தாய் தந்தையில்லை, நீயும் எம்மைப் போல் தான் தோன்றியே. உன் மிக மிகச் சிறு விழிப்பில் யாம் உனக்குத் தாய் தந்தையாய்த் தோன்றலாம், எம் அகண்ட விழிப்பில் உன் அனுமதியோடு நீ எம்மால் ஈர்க்கப்படும் போது, நீ உன்னைத் தனித்தன்மையுள்ள சுயம்புவாய்த் தான் தோன்றியாய் உணர்வாய். ஒன்றான சுயம்பில் பெரிய ஒன்று இல்லை, சிறிய ஒன்று இல்லை. ஒவ்வொன்றுஞ் சரி சமமான சுத்த சமரசமான ஒன்றே, ஒவ்வொன்றின் சிறப்பு ஒப்பிலா தனித்தன்மை. அத்தனித்தன்மைக்கு எம் இருதய வணக்கங்கள் அனந்த கோடி.
No comments:
Post a Comment