Sunday, June 26, 2016

சுயம்பு அருள்வாக்கு 2

பரிணாம மில்லாப் பாய்ச்சலும் உண்டு
பரிவாய்யாம் சொல்லியும் கேளாய் உணராய்
சுயம்புஎமக் கில்லை பரிணாம மாற்றம்
சுயம்புஎம தம்சம் நினக்குமஃ தில்லை

பரிணாமச் சதியில் காலனால் சிக்குண்டும்
பரிபூர்ணச் சுயம்புயாம் காலகா லனாய்நின்னகம்
உள்ளோம் நிச்சயமாய்! எம்நேரடித் தொடர்பினைக்
கொள்வாய்! பாய்ச்சலிலெழு வாய்ஆதி மனிதமாய்

ஆதி மனிதம் = சுயம்புவால் ஆதியில் வெளிப்படுத்தப்பட்ட சுயம்புவின் முழு அம்சம்

அந்த ஆதி மனிதப் புருஷோத்தமனே மெய்யான நீ

தகரத் தேடல் தகர்த்தால் சரியாவாய்
தங்க ஞானந் தங்கும் இருதயம்பார்
உங்குல தேவம் சுயம்புயாம் உளோம்துணிவாய்
உள்ளிரு தயவாய் சத்தியநிலை பெறுவாய்

ஆதி மனிதமாய் நீயேற எல்லாங் கொடுத்தோம்
ஆதி மூலச் சுயம்புயாம்நின் ஊழையுங் கெடுத்தோம்
ஓதி விட்டோம் எல்லாம்பேய்த் தனம்போக
ஊதி விட்டோம் இன்னேநீ எழுகசேயே

No comments:

Post a Comment