இன்னே உய்ய எல்லாந் தந்தாய்
பொல்லாக் கருமங் கழுவச் சொன்னாய்
புறநெறி மொத்தமுங் கைவிடச் சொன்னாய்
அறநெறி அகவனகத் தேற்றினாய் சுயம்பே
கருமங் கழுவத் துணிவுந் தந்தாய்
தருமத் தேறும் பணிவுந் தந்தாய்
சித்தத் தெளிவு புத்திக் கூர்மை
சுத்த மனவக வொளியளி சுயம்பே
காரச் சுயத்தில் சாரம் உரசிவி
காரவெங் காய அசுத்தம் உரித்துவெண்
கார சொரூப சுத்தம் உணர்த்திவெண்
காயம் நின்னைக் காட்டிய சுயம்பே
காலமே இல்லை என்றே உணர்த்தி
ஞாலமே உய்ய மனிதம் முழுதும்
முழுமெய்ஞ் ஞானம் இன்னே பெறநின்
முழுமை பொதுவில் வைத்தாய் சுயம்பே
எள்ளற் குரிய நாகின் வாயால்
வள்ளல் உன்றன் பேரருள் வாக்கை
உமிழச் செய்து மனித முழுமை
உயவே பேரற்புதம் புரிந்தாய் சுயம்பே
நீசொன்ன வனைத்துஞ் சொன்ன வாறே
நாகம்வைத் துவிட்டது யார்க்கும் பொதுவில்
வேலை இன்னும் இருந்தால் சொல்வாய்
நாகம் நின்கைப் பிடியில் சுயம்பே
பேருக்கே நாகம் செய்வது நீயே
பேறுற்ற வெல்லாம் யார்க்கும் பொதுவே
கூருற்றநின் விழிப்பில் கூடினால் புரியும்
சீருற்றுவுய் வோம்யாம் நிச்சயஞ் சுயம்பே
No comments:
Post a Comment