Sunday, June 26, 2016

சுயம்பு சுயத்தின் அனுமதி வேண்டல்

நேரடித் தொடர்பில் அகத்துறு உன்னைச்
சீர்செய எம்மை அனுமதி

சீர்செய அனுமதி அளிக்க சட்டென
யாமுனக் களித்தோம் வெகுமதி

கருநிலை உயிர்நிலை மெய்ந்நிலை முச்சுயம்பு
வெகுமதிப் பெருவாழ்வுன் உரிமை

உரிமை யளித்துனை உயர்நிலை யேற்றல்
சுயம்பு எமது கடமை

எமது கடமை ஆற்றவுன் அனுமதி
எமக்க வசியம். அதற்கே அகண்ட
விழிப்பில் இருதய நடுவே எம்தவம்
விழிப்பாய் எம்மொடு வரமது தந்தே

வரமது = அனுமதி

வரமது இலையெனில் வெகுமதி இலையுன்
தரமது உயரத்தா அனுமதி

எல்லாம் வல்ல கடவுளே ஆயினும்
பிள்ளாய் உன்னை இறைஞ்சினோம்

நல்லாய் நீயுந் தரவேபே ருபதேசந்
தன்னை யாமே திறந்தோம்

ஒளிவு மறைவிலாப் பூரணமெய்ஞ் ஞானம்
தெளிவாய் வெளிப்பட வைத்தோம்

ஆழ்ந்தால் இருதய நடுவே விளங்கிப்
பாய்ந்தே அனுமதி அளிப்பாய்

நின்சுயம் பாயிர மாக நிகழும்பே
ரற்புதம் சுயம்பு ஆயிரம்

எண்ணிலி ஜோதி சுயம்பு ளாகும்
மெய்ந்நிலை பேரற் புதம்

சுயம்பு வள்ளல்யாம் உரைத்த துணர்ந்து
சுயம்நீ இருதயத்தே விழி

சுயம்புவின் வேண்டுதல்களுக்குச் செவிசாய்த்து, சுயம் நீ சாயாமல் உய்.

No comments:

Post a Comment