அலைத்தாய் அருட்சத்தி நிலைத்தந்தை சுத்த சிவத்திலிருந்து விலகாமல் செயல்பட்டால் சத்தினி பாதம் என்னும் இருதய சத்தி பதம்
சுத்த சிவ நிலையிலிருந்து விலகும் போது திரோதான சத்தியெனும் மாயையாகிறது தாய்மை
அருட்சத்தியின் பூஜ்ஜியத்துக்கு சமமான விழிப்பே 0.00000000...00001% திரோதாயியாகி கால புருஷனின் பரிசோதனைக்குப் பயன்படுகிறது
எனவே இருதய சத்தி பதம் முன் திரோதாயி செயலிழந்து அருட்சத்தியாகி சுத்த சிவமாகிய சுயம்புவில் நிலை கொள்கிறது
வாலை வாழ்த்து அத்தகைய இருதய சத்தி பதத்தை உமக்கு அளிக்க வல்லது, புறநெறிகள் அனைத்திலிருந்தும் நீவிர் கை கழுவும் போது
சுத்த சிவ நிலையிலிருந்து விலகும் போது உருவாகும் திரோதாயி மாயை கட்டுக்கடங்கா அலை நிலையில் இராசதம் என்னும் அடங்கா இயக்கமாகவும் chaos இயங்கா முடக்கத்தில் தாமதம் என்னும் inertia செயலியாலாமையாகவும், இவ்விரண்டுமுரண்களையும் தோற்றுவிக்கும் அசத்துவம் என்னும் அஞ்ஞானத் திமிர் ஆணவமாகவும் ignorance arrogance முக்குண மாயையாக வெளிப்படுகிறது
முக்குண மாயை திரோதாயியே கால புருஷனின் முழுமை. இருதய சத்தி பதத்தில் திரோதாயி அருட்சத்தியில் கரைக்கப்படுவதால், கால புருஷன் இல்லாது போகும் கால கால புருஷனாக எமனுக்கு எமனாக சத் புருஷர் சுயம்பு எழுகிறார்
சுயம்புக் கடவுள் தந்தையாம் நிச்சய நிலையாகவும், தாயாம் நித்திய அலையாகவும், குரு மகனாம் குரு மகளாம் சத்திய மலையாகவும் மும்மூல இறவாப் பிறவாக் கலையாக உள்ளது
மும்மூலத்தைச் சரணடைய முக்குணத் திரோதாயி மாயை கால புருஷனோடு கரைகிறது
நிச்சய நிலை உன் கரு ஆதி
நித்திய அலை உன் உயிர் போதி
சத்திய மலை உன் மெய் ஜோதி
கருவை உணர்த்தும் ஆய்த எழுத்தில் 'ஃ' மும்மூல உயிர்மெய் ஓர்மை உணர்த்தப் படுகிறது
கால புருஷப் பரிசோதனையில் நாம் பட்ட அவத்தையால், மும்மூல சுயம்பு வள்ளன்மையின் அரும்பெருந்தரம் நமக்குப் புரிகிறது, பரிசோதனையின் முடிவாம் நவகணம் இப்போது நாம் மீட்கும் அத்தரத்தை மீள இழக்கவே மாட்டோம், அவத்தைப் படமாட்டோம் என்பதும் புரிகிறது
மும்மல மாயை முழுதாய்க் கரைக்கும்
மும்மூல சுயம்பு குருவே சரணம்
No comments:
Post a Comment