Sunday, June 26, 2016

நேரடித் தொடர்பெனும் vertical bypass

நேரடித் தொடர்பெனும் vertical bypass இருதய நடுவினின்று செங்குத்தாய்க் கிளம்பி மேலுங் கீழுமுள்ள எல்லாக் கால-ஞாலங்களையும் ஒன்றுவித்துச் சரி செய்கிறது. இது இருதய நடுச் சுயம்புவின் அரும்பெருந் தந்திரம்.

இந்த நேரடித் தொடர்பெனும் verical bypassல் கால புருஷனால் நுழைய முடியாது. கால கால சத் புருஷர் சுயம்பு வள்ளலின் அற்புத ஏற்பாடு இது.

அண்டத் தில்துரி
சண்டா திருக்குமோர்
மந்திர மண்டலஞ்
சற்குரு சரணம்

துரிசு =  மாசு, அசுத்தம், குற்றம்

கால புருஷனின் மாசும் அசுத்தமும் குற்றமும் மறைப்புச் சதியும் கருமாந்திர விதியும் அண்ட முடியா மந்திர மண்டலம் vertical bypass.

மந்திர மண்டலமாகிய vertical bypass அல்லது spiritual heart bypass ஆகிய சுயம்புக் கடவுளோடு நேரடித் தொடர்புக்குக் கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ தற்காலத்திலோ எந்த ஒரு குறிப்பிட்ட கணம் இடம் அடைந்து அதைச் சரி செய்ய எவ்விதத் தடைகளும் இல்லை, எவரது எவ்வொன்றினது எதிர்ப்பும் இல்லை, உம் அனுமதி தவிர அதற்கு வேறெதுவும் அவசியமில்லை, உம் தன்னிச்சையை மீறி அது செயல்பட இயலாது, சுயம்பு உம் தனித்தன்மைக்குக் கொடுத்திருக்கும் அவராலும் தள்ளி விட இயலாத சுதந்திரம் காரணமாக உம் அனுமதி அத்தியாவசியமாகிறது.

நீவிர் pass ஆக வேண்டுமென்றால் vertical bypassக்குள் எப்போதும் இருக்க வேண்டும். அல்லது காலனால் விழுங்கப் பட்டு நீவிர் fail ஆகி விடுவீர்கள்

இருதய நடு சுயம்புக் கடவுள் ஒரு ஒப்பற்ற surgeon. கால புருஷனால் வீழ்வோம் என்றறிந்து, முன் கூட்டியே நம்மிலும் ஒவ்வொன்றிலும் Spiritial Heart Bypass அல்லது Vertical Bypass என்னும் surgery செய்து விட்டார் அச்சத் புருஷர். இந்நேரடித் தொடர்பிலிருந்து அகண்டாகார ஆல மரமாய் சுயம்புத் தாய்மையின் மா காரண சரீரம் படர்ந்து எக்காலத்திலும் உள்ள எவ்வொன்றையும் எக்கணமுந் தொட்டுக் கொண்டிருக்கிறது. நாம் அனுமதி அளித்ததும் கலைக்கப்பட்ட நம்மை சரி செய்யும் அற்புத ஏற்பாடு இது.

No comments:

Post a Comment