துச்சன் என்னை வேண்டிய சுயம்பே
எச்சம் இன்றித் தந்தேன் என்சுயம்
உச்சம் நீயே இனியென் புகலிடம்
நச்சி னேன்செய் சுயம்பு ஆயிரம்
பித்தன் என்னை வேண்டிய சுயம்பே
பித்தந் தெளிந்தேன் உச்சம் நினக்கு
மொத்த மாயென் சுயமிது தந்தேன்
சுத்த முந்நிலை அருளுக இன்னே
எத்தன் என்னை வேண்டிய சுயம்பே
சித்தக் கலக்கம் நீங்கப் பெற்றேன்
என்றன் சுயமினி முழுதாய் நினக்கே
என்று முள்ள நிலைதா எனக்கே
அற்பன் என்னை வேண்டிய சுயம்பே
அன்பு உனதால் திருத்தப் பட்டேன்
இன்னே விழுங்கு என்சுயம் எல்லாம்
மன்னும் முத்தே கந்தரு வாயே
இல்லான் என்னை வேண்டிய சுயம்பே
வல்லான் உன்னால் செல்வ னானேன்
நில்லா என்சுயம் எல்லாம் நினக்கே
நின்முச் சுயம்பு நிலைதரு வாயே
பொல்லான் என்னை வேண்டிய சுயம்பே
பொல்லாப் பெல்லாம் மொத்தமுங் கழிந்தேன்
சுழிய மென்சுயம் சொந்தம் நினக்கே
அழியாச் சுயம்பு ஆயிரம் ஆக்கே
கன்மனன் என்னை வேண்டிய சுயம்பே
கன்மனங் கரைய இருதயங் கண்டேன்
சிறுதுக ளென்சுயம் ஈர்ப்பாய் இன்னே
பெருஞ்சுக வாழ்வில் சேர்ப்பாய் என்னை
சுயமென் வாக்கு மூல மிதனை
உயவென் சம்மதம் எனக்கொள் சுயம்பே
தயவாய் என்னை முழுதாய்த் தழுவி
எயநான் முந்நிலை அருள்வாய் இன்னே
No comments:
Post a Comment