Sunday, June 26, 2016

பரிபூரண சரணாகதி

உயிர்த்துள்ள நின் புறவுரு மெய்யுள் இருதய நடுவுள் இறவாப் பிறவாப் பெருவாழ்வின் கலையாம் பரிபூரண மெய்ஞ்ஞானம் நினக்கருள சுயம்புத் தந்தை-தாய்மை-குருமெய் அகண்டு விழித்திருக்கிறது. நின் சிதறியச் சிறு விழிப்பை அவ்வகண்ட விழிப்பு ஈர்க்க முழு மனதுடன் இருதய பூர்வமாய் சுயம்பு மும்மூலத்துக்கு அனுமதி அளித்தால், முத்தேக சித்தியை நீ நிச்சயமாய் நித்தியமாய் சத்தியமாய்ப் பெறுவாய். ஞாபகமிருக்கட்டும், மும்மூல சுயம்புவின் அகண்ட விழிப்பு எல்லாம் வல்லது, உன் தனித்தன்மையின் அனுமதி கிடைத்ததும், சகச நிலையில் அதன் பேரற்புத இரசவாதம் நிகழத் தொடங்கும். உன் உள்ளடக்கமான மும்மூல சுயம்பு அல்லாத எப்புறவுருவாலும் இப்பேரற்புதம் சாத்தியமில்லை, இவ்வக தீக்கையல்லாத எப்புற தீக்கைகளாலும் இப்பேரற்புதம் நிகழாது. எனவே உயிர்த்திருக்கும் நின் புறவுரு மெய்தன் உள்ளடக்கமான நின் உயிர்க்குயிரான மெய்க்கு மெய்யான மும்மூல சுயம்புவிடம் பரிபூரணமாகச் சரணடைவாயாக, பிறந்திறந்து பிழைக்குங் கருமச் சுழலிலிருந்து விடுபட்டு, இறவாப் பிறவாப் பெருவாழ்வருளும் மும்மூல சுயம்புவின் தரும நிலையுறுவாயாக!

No comments:

Post a Comment