எனதுள் ளடக்கம் ஆதியாம் நிச்சயம்
சுயம்பு சற்குரு சரணம்
எனதுள் ளடக்கம் போதியாம் நித்தியம்
சுயம்பு சற்குரு சரணம்
எனதுள் ளடக்கம் ஜோதியாம் சத்தியம்
சுயம்பு சற்குரு சரணம்
எனதுள் ளடக்கம் வரைய வொணாததாம்
சுயம்பு சற்குரு சரணம்
எனதுள் ளடக்கம் வரையரை யற்றதாம்
சுயம்பு சற்குரு சரணம்
எனதுள் ளடக்கம் ஏக தேவம்
சுயம்பு சற்குரு சரணம்
எனதுள் ளடக்கம் ஆதி மூலம்
சுயம்பு சற்குரு சரணம்
எனதுள் ளடக்கம் எந்தை தாயாம்
சுயம்பு சற்குரு சரணம்
எனதுள் ளடக்கம் எம்குல தெய்வம்
சுயம்பு சற்குரு சரணம்
எனதுள் ளடக்கம் எம்முயிர்க் குயிராம்
சுயம்பு சற்குரு சரணம்
எனதுள் ளடக்கம் எம்மெய்க் குமெய்யாம்
சுயம்பு சற்குரு சரணம்
எனதுள் ளடக்கம் பேருப தேசம்
சுயம்பு சற்குரு சரணம்
No comments:
Post a Comment