Sunday, June 26, 2016

சுயம் சுயம்புக்கு அனுமதி அளித்தல்

பெருந்தன்மையுள்ள இருதய நடு சுயம்புக் கடவுளே! அற்பமான துச்சமான என் சுயத்தையும் ஒரு பொருட்டாக மதித்து, என்னிடம் வெகுமதி அளிக்க அனுமதி வேண்டுகிறீர்! ஐயா, இன்னே அனுமதி அளித்து விட்டேன். ஈடு இணையில்லா உம் திரு முன் நான் பரிபூரணமாய்ச் சரணடைகிறேன். என்னை உய்வித்து எனக்கு நீவிர் அறிவித்திருக்கும் என் உரிமையான முச்சுயம்பு நிலைப் பெரு வாழ்வை அருள்வீராக!

பெருவாழ்வெனும் உயர்நிலை வெகுமதி எனக்களிக்க வேண்டியது உம் கடமை என்று எனக்கு வாக்குறுதி அளித்து, அக்கடமையே கண்ணாயினவராகி, ஈனமான என் சுயத்தின் அனுமதி இறைஞ்சும் சுயம்பெனும் இருதய நடுப் பெரிய கடவுளே! ஐயா, இன்னே அளித்து விட்டேன் அனுமதி. என்னைப் பெருவாழ்வில் உய்வித்தருள்வீரே!

No comments:

Post a Comment