Sunday, June 26, 2016

கட! உள்

கட! உள்
வெங்காயத் தோல்களும்
அவ்வத்தோல்களின் அவ்வவ்வாடைகளும்
முழுமையாய்த் தீரும் வரை
எத்தோல்களிலும்
எவ்வாடைகளிலும்
மயங்கி நில்லாமல்
அயராமல்
கட! உள்
எத்தோலுமின்றி
எவ்வாடையுமின்றி
வெட்டவெளியதுவே சுத்தமாய் நிற்கத்
தோன்றும் வெண்காயம்
கடவுள்

No comments:

Post a Comment