Sunday, June 26, 2016

விழிப்புக் கூர்

ஞானக் கூர்மையால் தான் நேச விரிவை அதன் அகண்ட இருப்பை முழுமையாக உணர வேண்டும். எனவே உன் விழிப்பைச் சுயம்புவில் உன் இருதய நடுக் கடவுளின் கூரிய விழிப்பில் தேய்த்துக் கூர்மையாக்கு

உன் சுயத்தின் மழுங்கிய ஒவ்வொரு கூறும் ஞானக் கூரு ஆகி ஒளிர்ந்து, நேச விரிவில் ஒளிய வேண்டும்

நேசம் என்பது அகண்ட வெட்டவெளி சுத்தவெளி = இருப்பு
ஞானம் என்பது நேசத்தின் கூர்மை ஒளி = விழிப்பு
நேசம் சுயம்புத் தந்தை
ஞானம் சுயம்புத் தாய்

நேச விரிவையும் ஞானக் கூரையும் ஒருங்கே கொண்ட அம்மையப்பன் சமேத போதமே ஆனந்தமே சுயம்பு குரு

என் மழுங்கிய விழிப்பு என் உள்ளக குருவின் அருளால் கூராக வேண்டும்

சகச நிலையில் பல முறை இது உன் இலட்சியமாக இருப்பதை நினைவு கூர்

No comments:

Post a Comment