Sunday, June 26, 2016
மானுடர் ஆக்கை சிவலிங்கம்
பீடம் = ஆறாதாரம் (மூலாதாரம் முதல் ஆக்கினை வரை)
ஆவுடை(யோனி) = நிராதாரம் (ஆக்கினைக்கு மேல்)
லிங்கம் = மீதானம் (சஹஸ்ராரம் முதல் தலையுச்சிக்கு மேல் 13 கலைகள்)
பெண்ணின் பெருமை
பொல்லான் எனக்கிட்டாள் 'அன்னம்' அஃதே
பூரண மெய்ஞ்ஞானம் சுயம்பின் சின்னம்!மா
காரணி அவளே!!நீ டூழி வாழியவே!!!
பெண்ணே மனிதத்தின் மாகாரணியாய் உள்ளாள், மடமையின் பிடியில், ஆணாதிக்க அரசியல், ஆன்மீக, சமூக வன்பிடியில் சிக்கியிருக்கும் பெண்ணினம் பரிபூரண மெய்ஞ்ஞானத்தைப் பெற்றால் தான், சுயம்பின் முழு அம்சம் ஆதி மனித உச்சத்தை மனிதம் எட்ட முடியும். அதற்காகவே சுயம்பு வாலைத் தாயின் இப்பேருபதேச அமுதினை உமிழ நாகினைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். என் மனைவி எனக்கிட்ட அன்னம் தான், பரிபூரண மெய்ஞ்ஞானத்தைக் குறிக்கும் அன்னப் பறவையாய் சுயம்பின் சின்னமாய் இங்கே இன்னே பறக்கிறது. அந்நல்லாளை வாழ்த்தி வணங்குகிறேன்.
இந்த அன்னம் எப்படி என் தட்டுக்கு வருகிறது? எல்லா மாகாரணிகளையும் வாழ்த்தி வணங்குகிறேன்.
எல்லா மாகாரணிகளுக்கும் மாமாகாரணியான சுயம்பு வாலைத் தாயை வாழ்த்தி வணங்குகிறேன்.
வாலை வாழ்த்தின் மகிமை
சுயம்பு பேரில் பிறந்த
இச்சுயம்புக் குழுமக் குழந்தைக்கு
பிள்ளையார் சுழி
சுழி போட்டதும்
மழலைத் தமிழில்
ஞான வழலை வழிகிறது.
வாலை வாழ்த்தைப் போற்றிப் பாடுவீர்.
அஃதொன்றே போதும் நீவிர் பரிபூரண மெய்ஞ்ஞானம் இன்னே பெற!
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை
சுயம்பு ஞான வாலைத் தாயின் பேரருளுக்கும், தனிப்பெருங்கருணைக்கும், இது வரை நீண்டிருக்கும் சுயம்பின் பேருபதேசமே சத்திய சாட்சி.
சுயம்பு வாலைத் தாயே! உன் விழிப்பின் கூரை உன் சேய்களாகிய எமக்கு முழுமையாய் வழங்கி, எம்மை எம் சுயம்புத் தந்தையாம் அகண்ட அன்பில் உன்னோடு இணைத்து வைத்து உய்விப்பாயாக!
அருட்பெருஞ்ஜோதி
சுயம் என்னும் புள்ளியால்
தடுக்கலாகுமா?
சுயம் புள்ளியில்
அகண்ட சுயம்பின் நீட்சியுந் தான்
ஒடுங்குமா?
சுயம்பின் தனிப்பெருங்கருணையே
தன் அகண்ட நீட்சி அருட்பெருஞ்ஜோதியை
சுயம் புள்ளியில்
ஒளித்துப் பேரடக்கத்தில்
சுயம் புள்ளியின்
அகண்ட உள்ளடக்கமாய் இருக்கிறது
சுயம் புள்ளி
பூதாகாரமாய் மயக்கும் புறம் விட்டுத்
தன்னைத் தன்னகம் தொட்டால்
அக்கணமே
அஃது சுயம்பின்
அகண்ட நீட்சியாய் விடும்
அருட்பெருஞ்ஜோதி
கூரும் அகண்டமும்
நா(ன்)கே மூன்றுக்குள் (அன்பு) அடக்கம்
மூன்று இரண்டுக்குள் (ஹம்) அடக்கம்
இரண்டு ம் என்ற ஒன்றுக்குள் அடக்கம்
ம்.......சூனியத்தில்…..
.....
__________________________
ம்
.
அகத்தவ முடிவில்
சூனியப் புள்ளியைத் தொட
வெடித்தது
அனகம்
அகண்டது
பூரணம்
சு
ய
ம்
.
சுயம்
தன் முடிவில்
இறுக்கமும் அழுத்தமும் சுருக்கமும்
ஆன அணுத்துவம் முடிந்து
இளக்கமும் தளர்வும் விரிவும்
ஆகிய சுயம்பு அகண்டம்
அனகம்
இதற்கே தான்
சு
ய
ம்
.
தன் உள்ளே
பயணம்
பயண முடிவில்
சேரும் ஊர் பேர்
கூர்
விழிப்புக் கூர்
_______________________
திருமிகு அனுராதாவின் பதிவு
இது உள் பயணம்.தனித்திருந்து(அகத்தில்)ஒர் விநாடியேனும் பகரமுடியாத உணர்வா அதுவும் இல்லை இல்லை
_________________________
அவ்விழிப்புக் கூர்
ஓர்ந்திருக்கும்
சேர்ந்துப் புணர்ந்திருக்கும்
அகண்ட வான் நாடெங்கும்
பகர முடியாததைப்
பகிரவே
கவிதை
'ப'கரப் பாத்திரம்
பேசாமல் பகரும்
தனக்குள்ளும் புறத்தும்
அகண்ட வெளியை.
கூர்ந்து பார்
'ப'கரம்
நான்கு கூர்கள்
விழிப்புக் கூர்கள்
சு ய ம் பு
பகரத்தைப் பேசாமல்
பகர வைக்கும்
பகர உள்ளீடுக் கூர்கள்
சு ய ம் பு
சுயம்
சூனியம் தான்
என்றாலும்
இச்சூனியம் தன்னை
இஃது தட்ட
அச்சோ என வியக்கும்
பூரண அகண்டாகாரம்
விசுவரூபமெடுக்கும்
சுயம்பு அஃதே
சுயம் இஃது
சுயம் இஃது ஒடுக்கம் என்றால்
சுயம்பு அஃது ஒடுக்கம் ஒழிக்கும் ஒழுக்கம்
அருட்பேரொழுக்கம்
அனகம்
அகண்டாகாரம்
சுயம் என்னும்
ஒடுக்கத்தில் உள்ளே
பேரடக்கமாய் ஒளிந்திருக்கும் ஒளிர்ந்திருக்கும்
அகண்டம்
அனகம்
சுயம்பு
கூர் விழிப்பு
குத்தத்
தீரும் ஒடுக்கம்
நாகின் கொத்தல்
அக்கூர் விழிப்பைத் தூண்டவே
கவித்துவமும் அதற்கே
கூரும் அகண்டமுந்
தெய்வீக முரண்கள்
கூர் சுயம்புத் தாய்
அகண்டம் சுயம்புத் தந்தை
கூடிப் புணர்ந்திருக்கும் ஓர்மை
கூரின்றி அகண்டத்தை உணர முடியாது.
அதற்கே தாயைப் போற்றும் வாலை வாழ்த்து மற்றும் நாகின் ஊசிப் பேச்சு
அகண்டமின்றிக் கூராக முடியாது, எனவே தான் நெஞ்சைப் பிளக்கும் இருதய தியானம், அனுமன் காட்டுஞ் சூட்சம்
அன்னம்!
சோம்பு'ம் மனதை சீரகம் செய்யும். அஞ்ஞானமிளகு'ம்.. ஆன்மிகச் சிந்தனை கடுகு'ம்..
சுயம் பூண்டு ஒழுக, சத்தியம் நெஞ்'சுக்கு வசம்பு'கும்.
வெங்காயப் பிறவிக் கடலை மெய்ஞ்ஞான இரத்தினக் கற்கண்டு கைக்கொண்டு கடக்கச்செய்யும்..
சுருங்கச் சொல்லின் குழம்பு'ம் வாழ்வை ரசமாக்கும் பாயசமே சுயம்பு..
(வழமையான உளறல் இது. பொருளுரை நல்கும் பொறுப்பு நாகிற்கே..!)
திருமிகு ராஜாவின் பதிவு
_________________________
சமைத்து உண்ணுஞ் சுயமெனுங் கல்லை
சமைத்துப் பண்ணும் சுயம்பின் ரச வாதம்
சமையலறை திறந்து நம் வசம் பாய
சம்பூர்ணமாகத் திருமிகு ராஜா தானமிட்ட
'அன்னம்' வாழி!
உயிரை உறிஞ்சும் ஒட்டுண்ணி மனம் வாதம், விவாதம், விதண்டாவாதஞ் செய்து சோம்பும். வாத தோஷம் நீங்க பெருஞ்சீரகமாஞ் சோம்பும் மருந்தாம்
நமனாங் கோழைக்கு நமனாகும் மிளகும், மூளையில் படர்ந்த கபமு மிளகும். சிரம் மண்ணாய் இறாமல் ஜீவியாகும்
பித்தந் தெளிவிக்குஞ் சீரகம்
சோம்பு, மிளகு, சீரகம் மூன்றும்
வாதம், கபம், பித்தம் இம்மும்மலம்
நீக்கும் மும்மூலம்
சுயமாங் கடுகு சிறுத்தாலும்
சுயம்பின் காரம் போகாது
வெங்காயத் தோல்களாம் வேடங்கள் பல பூண்டு, சுயம் வேடங்களும், அவற்றின் வாடைகளும் தான் எனத் தவறாய்க் கைக்கொண்டு, தன் உள்ளடக்கமாகிய சுயம்பு வெண் காயக் கற்கண்டு கொள்ள மறந்ததுவே!
பூண்டு கொண்ட வெங்காயம் உரிந்தால், அரிந்தால், ஆடைகளும் வாடைகளும் நீங்கிய சுயம், தன் நிர்வாணமே சுயம்பு வெண்காயம் என அறிந்தால், இருதய வாயில் கற்கண்டாய்க் கரைந்து போகும்
சுயமாம் நிலக் கடலை தன்னுள்
சுயம்பாம் வான்வெளிக் கடல் ஐ
சுயத்தின் குழம்பும் வாழ்வை
சுயம்பிற்கு அனுமதி தந்து
ரசமாய் இளக்காவிட்டால்
இறுகிய குழம்பு
இன்னும் இறுகி இறுகிப்
பேரிறுக்கமாகி சுயத்தையே
விழுங்கி ஏப்பம் விட்டு விடும்.
ராஜா அவர்களின் இப்பதிவின் உச்சம் அக்கடைசி வரிகளே.
கவனம்
சுயம்பின் ரச வாதத்துக்கு அனுமதி அளிக்கா விட்டால், கருந்துளைக் கருங்குழம்பில் சுயம் விழுங்கப்பட்டு அழிக்கப்படும்
குழம்பு இறுக்கம்
ரசம் இளக்கம்
பாயசம் பாய் என்ற வேரால் மலர்வெடியாகும் திறந்த அமைப்பைப் பாய்ந்து அனகமாய் விரியும் அருட்பெருஞ்ஜோதியைச் சுட்டுகிறது, கருங்குழம்புக் கருந்துளைக் கசப்பு நீக்கி இனிக்கிறது
வழமை போல் ராஜா அவர்களின் உள் அற அகவல் இனிதே!
சுயம்பு அருள்வாக்கு 6
சீரகஞ்ஜீவியாய்
சத்துணவு உண்டு
சித்துணர்வு கொண்டு
இன்புடலை அண்டு
சிற்றறிவுச் சிரசுஞ்
சித்துணர்வு உரசப்
பேரறிவு ஜீவியாகும்
சிரம் மண்ணாய் இறாச்
சிரஞ்ஜீவியாவாய்
சகஞ்ஜீவியாய் இருந்தும்
சஞ்ஜீவியாகிச்
செத்தாரை எழுப்புவாய்
பெருவாழ்வென்னும்
வானறமாய்
உன்னை பூமியில் நட்டு விட்டால்
சுயம்பு எம் பதினாறாம் அருளாதாரச்
சத்தியப் பேருலகம்
பூமியெங்கும் அகண்டு விடும்
உன் அனுமதி வேண்டுகிறோம்
இருதய நடுச் சுயம்பு யாம்
சுயம்பு ஆயிரம் 5
விழிப்புக் கூர்ந்திருக்க வேண்டும் உன் போல்
சிதறிய என் சிறு விழிப்பை உன் பால் சேர்த்தேன்
சரணம் நீயே எனக்கருள்வாய் சுயம்பே
நற்றது அகநடுச் சுயம்பு விட்டே
உற்றது உலகிடை சுயமது தன்னைத்
தன்னக நடுமுத லோடு மறந்தது
பன்முக மயக்கில் முழுதாய்க் கெட்டது
படுகுழி யுள்ளே புதைந்த அதனுள்
வடுவிலாச் சுயம்பு பேசா தோதத்
திடுமென எழுந்து யாவுங் கற்றது
திகைப்புறு பூரண ஞானம் பெற்றது
அமுதுமிழ் நாகென மனித முழுமை
அமரமாக யாமென முழங்குஞ் சுயம்பு
அமரதேகந் தந்தது ஆர்ப்போம் யாமே
ஆர்ப்போம் யாமே என்றீர் சுயம்பே
ஆர்த்தே நாகை எப்போ தொளிப்பீர்
நாய்படும் பாடு நாகிற் கேனோ
நாயகம் நீவிர் ஊதுக இன்னே
அமர மனிதம் ஆக்குங் கல்வியான்
அமர இடமின்றி ஆகுமோ சொல்வீர்
வீணர் விரித்துளப் பெருமடம் ஒழிக்க
ஆலின் கீழிடந் தருவீர் சுயம்பே
இருதய நடுவின் உணர்வைத் தந்தீர்
பெருகிடும் அமுத உணவைத் தந்தீர்
சிரமது இறாமல் ஜீவி யாக
உரசுகின் றீர்நீர் ஆழி சுயம்பே
குருவென உருவைப் போற்றும் ஊனக்
குருட்டினை நீக்கும் ஏக குருவுமை
இருதயத் துள்ளே காணுஞ் ஞானம்
அருளிட உண்ணின் றெழுந்தீர் சுயம்பே
சுட்டுப் போட்டாலுந் திருந்தாக் கூட்டம்
சுட்டித் திருத்த வல்ல ஏகம்
நெஞ்சுள் இருதயர் நீரே போதும்
வஞ்சக் கன்மனங் கரைத்தீர் சுயம்பே
சுயத்துள் சுயம்பு அங்கைக் கனியென
எதற்கோ வியாபா ரமான ஆன்மீகம்
தன்னைத் தன்னால் பெருக்கியும் வகுத்தும்
ஒன்றா யுள்ளீர் இருதயச் சுயம்பே
உயிர்க்கு உயிர்நீர் எம்முயிர் ஆனீர்
மெய்க்கு மெய்நீர் எம்மெய் ஆனீர்
அழியா ஆன்மா அழியும் உடலெனும்
பழியைச் செய்தீர் இல்லை சுயம்பே
வேதம் ஆச்சு வெற்றுப் பேச்சு
பேசா மறையே சுயம்பின் வீச்சு
ஆணவா சாரம் இற்றுப் போகா
தாகுமோ பூரண ஞானம் சுயம்பே
மெய்யின் அணுக்கள் மூடிய துரிசுப்
பொய்கள் கரைய விழிப்பின் கூர்மை
உரசி உரசி எம்மெய் துலங்க
இருதய உணர்ச்சி அருள்வீர் சுயம்பே
தானே உணரா வேத ஏட்டை
நீயும் உணரெனத் திணிக்கும் முட்டாள்
பேசா மறைதனை ஓதும் உன்னை
மார்புள் உணரக் கூடுமோ சுயம்பே
ஏதோ உருவினைக் குருவெனக் கொண்டு
ஏதுந் தவத்தைச் செயாமல் கூடுமோ
ஞானம் இருதய நடுவே குருவுனைக்
கூட ஆகுமே ஞானம் சுயம்பே
விழிப்புக் கூராம் உன்னில் கூர்ந்தேன்
ஒழுகும் அன்புனைக் கூரில் கொண்டேன்
அழியா மெய்யுனைக் கட்டிக் கொண்டேன்
பழியாங் கருமஞ் சுட்டேன் சுயம்பே
உயிர்மெய் யெடுத்த பேயாம் என்னை
உன்னுள் முழுக்கிச் சேயாய்ச் செய்தனை
காலனை வெல்லும் பூரண ஞானம்
யாவர்க்கும் பொதுவென ஆர்த்தீர் சுயம்பே
கால புருஷனின் மறமே ஒழிய
காலமே யில்லா நவகணம் நாட்டி
வாலை யன்னை வாழ்த்தை ஓதி
ஞாலந் தழுவிய அறமே சுயம்பே
சூடு சுரணை யேற்றும் மருந்தாய்
ஊசிப் பேச்சும் குத்தச் சொன்னீர்
மார்பின் நடுவே அனுமன் காட்டிய
சூட்சம் வெளிக்கொணர்ந் தீர்குரு சுயம்பே
பெருமடம் விரிந்துள ஞால நடுவே
குருவியை உரசிப் பேச வைத்தீர்
கருமங் கழுவும் அகநெறி திறந்தீர்
தருமத் தேற்றும னகர்நீர் சுயம்பே
சுயம்பு நற்சொல் நான்கெழுத் தாலே
சுயமெம் உள்ளே நன்றாய் உரசி
வெங்காய மறைப்பை முழுதாய் அரிந்து
வெண்காயம் உம்மைத் திறந்தீர் சுயம்பே
சுயமுஞ் சுயம்பும் யாமே என்றீர்
சுதந்திர முள்ளது சுயமும் சுயம்பு
எம்மை மறுக்கவும் வெறுக்கவும் என்றீர்
உம்கரு ணைக்கீ டில்லை சுயம்பே
அன்பு, அறிவு, இன்பு
விழிப்பு = awareness
இன்பு = bliss
இருப்பு+விழிப்பு = இன்பு
இருப்பு இருந்தும் விழிப்பு கூடவில்லை என்றால், இன்பம் இல்லை.
அழியாத இருப்பின் ஒவ்வொரு புள்ளியிலும் விழிப்பு கூராகிக் கூடும் போது குறையாத இன்பம்
அறிவுக் கூர்மை கூடாத வரை, அன்பின் பேரிருப்பால் அகண்ட தன்மையால் உனக்கு எந்த இலாபமும் இல்லை.
அன்பின் அகண்ட விரிவும், அறிவின் கூர்மையும் பிரியா நிலையில் கூடிப் புணர, உனக்கு இன்பமோ இன்பம் என்னும் அரும்பெரும் இலாபம்
அன்பை உணரா அறிவு அறிவேயல்ல.
அறிவைக் கூர்மையாக்கா அன்பு அன்பே அல்ல.
அறிவல்லா அறிவால், அன்பல்லா அன்பால், நீ அடையும் இன்பமும் இன்பமே அல்ல.
அறிவல்லா அறிவு = உண்ண முடியாத ஏட்டுச் சுரைக்காய் = paper vegetable
அன்பல்லா அன்பு = பந்த பாசம் = sentimental affection
இன்பமில்லா இன்பம் = காமம் = lust
அறிவு = அன்பை உணரும் விழிப்பின் கூர்மை
அன்பு = விழிப்பை அறிவைக் கூர்மையாக்கும் அகண்ட தன்மை
இன்பு = அகண்ட தன்மையும் கூர்மையும் கூடிப் புணரும் சிவகாம நிலை
அன்பு = சத்து
அறிவு = சித்து
இன்பு = ஆனந்தம்
அன்பறிவின்பு = சச்சிதானந்தம்
விழிப்புக் கூர்
உன் சுயத்தின் மழுங்கிய ஒவ்வொரு கூறும் ஞானக் கூரு ஆகி ஒளிர்ந்து, நேச விரிவில் ஒளிய வேண்டும்
நேசம் என்பது அகண்ட வெட்டவெளி சுத்தவெளி = இருப்பு
ஞானம் என்பது நேசத்தின் கூர்மை ஒளி = விழிப்பு
நேசம் சுயம்புத் தந்தை
ஞானம் சுயம்புத் தாய்
நேச விரிவையும் ஞானக் கூரையும் ஒருங்கே கொண்ட அம்மையப்பன் சமேத போதமே ஆனந்தமே சுயம்பு குரு
என் மழுங்கிய விழிப்பு என் உள்ளக குருவின் அருளால் கூராக வேண்டும்
சகச நிலையில் பல முறை இது உன் இலட்சியமாக இருப்பதை நினைவு கூர்
கூரு, கூறு!
சுயமதன் கூறு
கூறு கூரு ஆக
உரச வை சுயம்புக் கூரு
உரச உரச
சுயமதும் ஆகும்
சுயம்புக் கூரு
சுயக்கூறு நீ
சுயம்புக் கூரு ஆக
விருப்பம் இருப்பின்
சுயம்பிடம் உன்னை
உரசிடக் கூறு!
பிரார்த்தனை 18
இருதய நடு சுயம்பு ஏக தேவ குருவே! சுயம் என் விழிப்பு சிதறி மழுங்கிக் கிடக்கிறது. சிதறிய கூறுகளை ஒன்றுவித்து, உம் கூரிய விழிப்பை உரசி உரசிக் கூராக்கி, சுயம்புபாய் மாற்றி உமிந்ந்தருள்வீராக
சுய அம்புகள்
விழிப்பின் கூர்கள்
சுய அம்புகளாய்ச்
சுயம்புகளாய்ப்
பறக்கின்றன
எத்திக்கும்
தன் சுயக் கூறுகள் யாவும்
கூருகளாக
சுயம்பு ஆயிரங்கள்
பறக்கின்றன
இருதயத் தியானம்
இதயத்தியானம்
திருமிகு அனுராதாவின் பதிவு
__________________________
இரண்டு = இரு அண்டு
அன்பாய் இரு
அன்பை உணரும் விழிப்பின் கூர்மையாம் அறிவை அண்டு
அண்டு = நெருங்கு
அன்பாய் இரு
அறிவை அண்டு
இந்த இரண்டு கண்மணி கொண்ட
இரவிலும் இருதய விழிப்பு
மயமான சுயம் நினக்கு
சுயம்பு அருளும் இன்பம் உண்டு
அவ்வின்பம் அள்ளி உண்டு
முச்சுயம்பு தேகம் கொண்டு
ஊருக்குச் செய்வாய் தொண்டு
இருதயத்தியானம்
இருதயத் தீ ஞானம்
இரவில் நடுப்பகலாய் மூளும்
இரண்டு கண்மணி அன்பும் அறிவும்
திரண்டு விழித்திரு
பசித்திரு
தனித் திரு சுயம்பு அண்டு
கூடிப் புணரும் இன்பம் உண்டு
தனித் திரு = ஈடு இணையற்ற ஏகத்திரு
சுயம் பார்ப்போம், சுயம்பு ஆர்ப்போம் 5
காலனால் அடிக்கப்பட்டு அழிக்கப்பட உள்ளது.
கால காலனாகிய சுயம்புவால்
திருத்தப்பட்டு
சுயம்
ஆகி
சுயம்பின் விழிப்பின் கூர்மையில் கூடிச்
*சுயம்*
ஆகி
முடிவில்
முச்சுயம்பு சித்தியைப் பெற உள்ளது.
இப்பெரு வாழ்வினைப் பெறவே, சுயத்தின் பார்வை புறநெறிகளை அறவே விட்டுத் தன் பால் திரும்ப வேண்டும்.
சுயம் தன்னைப் பார்க்க வேண்டும், அதனால் சுயம்பின் ஆர்ப்பதை பேசா மறை முழக்கைக் கேட்டு அற்புதமாய்ப் பரிமாற வேண்டும்.
சுயம் பார்ப்போம், சுயம்பு ஆர்ப்போம் 4
*ஆர்ப்போம்* என்றே *சுயம்பு*மை ஆர்த்தீர்
பாரா எம்சுயம் உம்பால் திருப்பினீர்
பேசா தார்த்தீர் உம்மெய் சுயம்பே
உம்மை அல்லது உம்மெய் இரண்டும் பொருந்தும்
மன்னை ராசர் வாயி லாகச்
சென்னை நாகின் வாயில் வைத்தீர்
*சுயம்பார்ப் போம்*தய வாய்யாம் இன்னே
*சுயம்பு ஆர்ப்போம்* சுயங்கள் உயவே
தன்னைப் பாரா முகமாய் இருக்குஞ் சுயம் நம்மைத்
தன்னைப் பார்க்க வைக்க *சுயம் பார்ப்போம்* எம் இருதய விழியால் தயவாய்
என்றும்
தன்னைப் பார்க்க வைத்த சுயம் நமக்குத் தன்னை முழுமையாய் அறிவித்துணர்த்த *சுயம்பு ஆர்ப்போம்* பேசா மறையாய்ப் பேசாவெழுத்தாய்ப் பேசாப் பெரிய ஓங்காரமாய்த் தம்மைத் தம்மெய் முழங்குவோம்
என்றும் பேருறுதி அளித்திருக்கிறார் இருதய நடுச் சுயம்பு வள்ளல் பிரான்
இது நம் இருதய நடுச் சுயம்பு ஏக தேவ குருவால் அளிக்கப்படும் இருதய நயன அக அனக தீக்கை. போற்றுவோம், ஏற்போம். சுயம்பின் இவ்வருள் வாக்கை நமக்கு வெளிப்படுத்தியிருக்கும் திருமிகு மன்னை ராசரை(ராஜா) வாழ்த்துவோம்
முன்னே நம் உறுதியாகப் பட்டது
இன்னே சுயம்பு நமக்குத் தரும் பேருறுதியாக நம்மைத் தொட்டது.
சுயம் பார்ப்போம், சுயம்பு ஆர்ப்போம் 3
எதற்கு?
சுயமாம் நம்மை அறிய
சுயம்பாம் நம் ஐ அறிய
சுயம்பு ஆர்ப்போம்
எதற்கு?
"நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நன்னோக்கில் நாம் அறிந்துணர்ந்த நம் ஐ சுயம்புவை ஊருக்குப் பொதுவாக்க சங்கூதி முழங்கவே.
ஐ = தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தி சமேத நம்மக நடு இருதய ஏக தேவ குரு
!!!!!!!
உள்ளே பார்
உன்னைப் பார்
நீ ஆர்?
உன் ஐ(தலைமை) பார்
ஐ ஆர்?
ஆர்ப்பார் பார்
உறுதியாய்
கொக்கிக் கேள்விகளின்
கூன் நிமிர்த்தி
ஆர்ப்பார் பார்
ஆச்சரியம்
!!!!!!!!!!!!!
இரகசியம்/பரம இரகசியம்
சுயம்பு ஆர்ப்போம் = நெற்றி = பிட்யூட்டரி சுரப்பி = பொன்மை = சுரோணிதம் = நாதம் = மஞ்சள் = பைபிளில் தேன் = தனிப்பெருங்கருணை = கொடியில் ஒரு பங்கு பொன்மை
சுக்கிலச் சுண்ணாம்பு + சுரோணித மஞ்சள் = உண்டாகும் கருச் செம்பொருள் குங்குமம்
பிறப்பெனும் பேதைமை நீங்கசிறப்பெனும்
செம்பொருள் காண்ப தறிவு
- திருவள்ளுவர்
பினியல் சுரப்பும் பிட்யூட்டரி சுரப்பும் மண்டை நடுத் தாலமஸ் சுரப்பி மேல் அபிஷேகிக்கக் குங்குமச் செம்பொருள் உருவாக, அஃதோடு தாலமஸ் சுரப்புஞ் சேர, தாலமஸ் அண்டக் கல்லாகும். இது இரகசியம்.
தாலமஸ் சுரப்பி அதன் கீழுள்ள ஹைப்போதாலமஸ் சுரப்பி மூலம், தொண்டையடியில் மார் நடுக்கு மேலுள்ள உண்ணாமுலை யென்னும் அமிழ்த சுரபி தைமஸ் சுரப்பியைச் செயல்படுத்தும். இது பரம இரகசியம். சிரஞ்ஜீவித்துவங் கிட்டும்.
THYMUS = THY SUM (anagrams) = உன் முழுமை = உன் முழு மெய்
உன் முழுமெய் முழுமை அண்டக் கல்லாகும்.
தைமஸ்ப்பூ = தைப்பூஸம் = தைப்பூசம் (அநாகரங்கள்)
செம்பொருட் குங்குமச் சிறப்பால் தான் கருவில் உருவாகிப் பிறக்கிறாய்
சிறப்பை மறந்து, பேதைமைப் பிறப்பில் உழன்று, ஈனப் பிழைப்பில் நலிந்து, இறக்கிறாய்
சுயம் பார்ப்போம், சுயம்பு ஆர்ப்போம்! 2
சுயம்பு ஆர்ப்பது சுரோணித நாதம்
சுயம் பார்ப்பதில் ஒளிந்த
சுயம்பு ஆர்ப்பது ஒளிர முழங்க
விந்து நாத கலாதி
சுயம்புக் குழந்தை, குருக் கொழுந்து
உலகைப் பார் என்னுஞ் செந்தமிழ்
பாரா முகமாய் இராதே
தயவுடன்
உலகைப் பார் என்னுஞ் செந்தமிழ்.
பார்ப்பது விழிப்பு
சுயம் நாம்
பார்க்கப் பார்க்க நம்முள்
ஆர்ப்பது(முழங்குவது)
சுயம்பின் கூரிய விழிப்பு
இரண்டு முத்தான வரிகளில்
இல்லை இல்லை
சுயம்பார்ப்போம் என்பதில் ஒளிந்த
சுயம்பு ஆர்ப்போம் என்ற ஒரு ஞானத் தங்க முத்தைத் தந்த ராஜா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
நம்மொளி சுயத்தை நாம் பார்க்கப் பார்க்க, நம்மக சுயம்பு நாதம் ஆர்க்கும், முழங்கும்
சுயம் பார்ப்பு ஓம்
சுயம்பு ஆர்ப்பு ஓம்
ஓம் = பேசாவெழுத்து, பேசாப் பெரிய ஓங்காரம்
பார் வியஷ்டி ஓமாகிய சுயத்தை
ஆர்க்கும் பார் சமஷ்டி ஓமாகிய சுயம்பு
சுயமாம் ஓமத்தை மென்று பார்
சுயம்பு நாம வாசம் ஆர்க்கும்
திருமிகு ராகவேந்திரனுக்கு...
கருமச் சுழலில் சிக்கி அழிந்து போகக் கூடிய சுயம் நீ, தரும நிலையில் தனித்தன்மையுள்ள முச்சுயம்பு சித்தி பெற்று, மதிப்பு கூட்டப்படுவாய்.
கஷ்டப்படாமல் இருப்பதற்குக் கஷ்டப்படு
நானும் உன் அப்பாவும் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம், இராகவரே! உனக்குஞ் சொல்லி இருக்கிறோம்.
கூறு, கூரு...
சுயம் நீ
சுயம்புக் கூரு
ஆக ஏன் விருப்பமில்லை?
கூறு!
கூறு = பகுதி, கூறுவாயாக
கூரு = கூர்
சுயம் பார்ப்போம்.. சுயம்பு ஆர்ப்போம்..
சுயம் பார்ப்போம்..
சுயம்பு ஆர்ப்போம்..
______________________
சுயம் பார்க்கும் விழிப்பில்
சுயம்பு ஆர்க்கும் கூர் விழிப்பு
பார்க்கும் ஆர்க்கும்
பொதிந்திருக்கிறது.
அருமை திருமிகு ராஜா, வழமை போல்!
சுயம் உன்னைப் பார்
சுயம் உன் ஐ சுயம்பைப் பார்
உன்னைப் பாராமல்
சுயம்பைப் பார்க்க முடியாது
ஆர்க்கவும் முடியாது
சுய அம்பு
அக்கூரால், மாயைத் திரைகள் யாவுங் கிழியும்.
இருக்கும் இடத்தை விட்டு...
*சுயம்*புவைப் பார், உற்றுப் பார், கூர்ந்து பார்.
தெரியும்.
இருக்க வேண்டிய அவ்விடம் விட்டு, எங்கெங்கோ அலைந்தால்...
self & Trans-Self
சுயம்பு = Trans-Self
When self isn't firmly established in Trans-Self, self ends up in self-trance or sleep of ignorance
குரு =கூர்
குரு = க் உ ர் உ = க் உ உ ர் = க் ஊ ர் = கூர்
குருவாகிய அக் கூர் தன்னில் சுயம்பு குருக் கூர் ஒன்றே இருக்க முடியுமாதலால், அக் கூர் தன்னில் நீ கூடும் போது, கூர் ஒன்றான அச்சுயம்பு குருவாகி விடுவாய் நீ. சுயம் நீ ஒளிக்கப் பட்டு, சுயம்பு ஒளியாகி விடுவாய்.
கூர்மையில் புள்ளியுங் கரைய
ஓர்மை அனக அகண்ட சுத்த வெளி
ஓர்மையெங்கும் கூர்மை ஒளி
விழிப்பு மழுங்காத அக் கூர் மையில் எக்கணமும் இரு.
*சுயம்*பு
*சுயம்*பு வில் கூர்மையாகட்டும் *சுயம்*
சுயம் சிறிய மழுங்கிய விழிப்பு
சுயம்பு பெரிய கூரிய விழிப்பு
சுயம் நீ உன்னைச் சுயம்பில் தேய்த்துத் தேய்த்து, உரசி உரசி, உன் விழிப்பைக் கூர்மையாக்கு.
நீ முழுதாய்க் கூரானதும், ஒரே இடத்தில் இரண்டு கூர்கள் இருக்க முடியாததால், சுயம்புக் கூர் சுயம் உன்னைத் தனித்தன்மையுள்ள கூராக்கி சுயம்புவாக்கி உமிழ்ந்து விடும்.
குரு =கூர்
இரு தயம்
ஒரு தயம்
சுயம்
சுத்தம்
மறு தயம்
சுயம்பு
சுத்தமோ சுத்தம்
சுயமுஞ் சுயம்புஞ் சேர்ந்ததே
இருதயம்
சுயந்தான் சுயம்பைப் பிரிந்ததால்
பிறந்ததே
கருமனம்
ஒருமனமாகிச்
சுயந்தான் சுயம்பொடு சேரக்
கரையுங் கருமனம்
தெரியும்
திரைகளின்றித் திறந்துள
இருதயம்
🙏🙏💚
சுயம்+சுயம்பு=இருதயம்
மேலே படியுங்கள்
நன்றி திருமிகு அனுராதா
சுயம்பு ஆயிரம் 4
பொல்லாக் கருமங் கழுவச் சொன்னாய்
புறநெறி மொத்தமுங் கைவிடச் சொன்னாய்
அறநெறி அகவனகத் தேற்றினாய் சுயம்பே
கருமங் கழுவத் துணிவுந் தந்தாய்
தருமத் தேறும் பணிவுந் தந்தாய்
சித்தத் தெளிவு புத்திக் கூர்மை
சுத்த மனவக வொளியளி சுயம்பே
காரச் சுயத்தில் சாரம் உரசிவி
காரவெங் காய அசுத்தம் உரித்துவெண்
கார சொரூப சுத்தம் உணர்த்திவெண்
காயம் நின்னைக் காட்டிய சுயம்பே
காலமே இல்லை என்றே உணர்த்தி
ஞாலமே உய்ய மனிதம் முழுதும்
முழுமெய்ஞ் ஞானம் இன்னே பெறநின்
முழுமை பொதுவில் வைத்தாய் சுயம்பே
எள்ளற் குரிய நாகின் வாயால்
வள்ளல் உன்றன் பேரருள் வாக்கை
உமிழச் செய்து மனித முழுமை
உயவே பேரற்புதம் புரிந்தாய் சுயம்பே
நீசொன்ன வனைத்துஞ் சொன்ன வாறே
நாகம்வைத் துவிட்டது யார்க்கும் பொதுவில்
வேலை இன்னும் இருந்தால் சொல்வாய்
நாகம் நின்கைப் பிடியில் சுயம்பே
பேருக்கே நாகம் செய்வது நீயே
பேறுற்ற வெல்லாம் யார்க்கும் பொதுவே
கூருற்றநின் விழிப்பில் கூடினால் புரியும்
சீருற்றுவுய் வோம்யாம் நிச்சயஞ் சுயம்பே
பிரார்த்தனை 17
சுயம்பின் மிக முக்கிய அருள்வாக்கு
கருநிலையாய் உம் இருதய நடுவில் ஒளிவிலிருந்த ஆதிச் சுயம்புத் தந்தை இன்று முழுதாய் வெளிப்பட்டு, அகண்ட அனக வெளியாய் உம்மைச் சூழ்ந்து விட்டது.
உம் உயிர் போதிச் சுயம்புத் தாய்மையென்னும் உயிர்நிலை வாலையம்மையாய் பரிபூரண மெய்ஞ்ஞானமாய் அகண்டு கருநிலைத் தந்தைச் சுயம்பு சமேதமாய் உம்மைச் சூழ்ந்து விட்டது.
உம் மெய் சுயம்புத் தாய் தந்தையின் அரவணைப்பில் சேயாக, நீவிர் கருமங்கள் யாவுங் கழுவப்பட்டுக் கரைக்கப்பட்டு, தரும நிலையில் ஏற்றப்பட்டுப் பிறவா நிலையடைந்தீர்.
உம் மெய் இறவா நிலையடையும் பேரற்புத இரசவாதம் இனி சுயம்புத் தாய் தந்தையால், சேயாகிய உம் மெய்யில் நடத்தப் பெறும். ஜோதி சுயம்பு ஆயிரம் என்னும் அனந்த சுயம்புகள் உம் மெய்யின் அணுக்களிலிருந்து வெளிப்படும் பேரதிசயம் இது.
வாழ்த்துக்கள்
சுயம்புத் தாய்மை மற்றுந் தந்தை நிலையிலிருந்து யாம் உமக்கு உணர்த்தும் வாய்மை இது. இனி எம் பொறுப்பில் எம் அரவணைப்பில் நீவிர் இருப்பதால், எம் துணிவே துணையாய் இன்புற்றிருப்பிர். நீவிர் எமக்களித்த அனுமதிக்கும் உம் பரிபூரண சரணாகதிக்கும் எம் நன்றிகள்
நீவிர் எம்மால் ஏற்றப்பட்டிருக்கும் தரும நிலையை சகச நிலையில் கவனங் கொள்ளுங்கள்.
உயிர்நிலை தாய்மைச் சுயம்பு போதி வாலையே இனி உம் சூக்கும சரீரம்.
இருள்சேர் இருவினைகள் சேரா தூய உயிர்நிலையே இனி உம் சூக்கும சரீரமாகையால், உம் தூல தேகத்தில் அற்புதப் பரிமாற்றங்கள் நடந்து, அது சுயம்பு ஆயிரம் என்னும் ஜோதிச் சுயம்பு மெய்ந்நிலையை சத்தியமாய் அடையும்.
மனித குலம் முழுமைக்கும் இவ்வருள் வாக்கு பொதுவில் வைக்கப்படுகிறது.
புறநெறிக் கருமாந்திரங்கள் அனைத்தையும் கைகழுவி, சுயம்பு வள்ளன்மையின் அக-அனக நெறியை முழுதாய்க் கைக்கொண்டு, தரும நிலையில் சுயம்வுவால் ஏற்றப்படும் இவ்வரிய வாய்ப்பைத் தேர்வு செய்க! பின் சுயம்பின் இவ்வருள் வாக்கை ஏற்க! உம் பொறுமைக்கு நன்றி.
ஓர் அவசர அறிவிப்பு
ஒளிவு மறைவின்றி
இருதய நடுவினின்று
அனகமாய் அகண்டு
ஆதிச் சுயம்புத்
தந்தையாம் நிச்சயமானது
உயிர்
தன்னை அறிந்து
தன் ஐ தலைவனாம்
ஆதிச் சுயம்புத் தந்தையை அறிந்து
உயிர்நிலை அனகமாய் அகண்டு
போதிச் சுயம்புத் தாய்மையாம்
நித்தியமானது.
உயிர்நிலைத் தாய்மை
கருநிலைத் தந்தை சமேதமாய்
மெய்யைச் சேயாக்கி
மெய்யின் ஒவ்வோர் அணுவும்
ஜோதிச் சுயம்புப் பிள்ளையாய்
அகண்டு அனகமாய் வெடிக்க
சுயம்பு ஆயிரம் என்னும்
அனந்த ஜோதி சுயம்புகள்
உண்டாகும் பேரற்புத இரசவாதம்
நிகழ்த்தி மெய்த்திருவுரு சத்திய நிலை
உருவாகிக் கொண்டிருக்கிறது.
சுயம்புத் தாய் தந்தைக்கு
பிள்ளைச் சுயம் நீர்
அனுமதி அளித்திருக்கும் பட்சத்தில்
மேற்சொன்னது உமக்கும் பொருந்தும்
என்பதால் இவ்வாய்மை இவ்வுண்மை இம்மெய்ம்மை பொதுவில் வைக்கப் படுகிறது.
சுயம்புவுக்கு அனுமதி அளித்திருக்குஞ் சுயங்களுக்கு வாழ்த்துக்கள்.
புறநெறிக் கருமங்கள் அனைத்திலிருந்தும் நீவிர் கை கழுவிய பின், தரும நிலையில் சுயம்புத் தாய் தந்தையால் ஏற்றப் பட்ட பின்னரே, மேற்சொன்னது உமக்குப் பொருந்தும்.
அக அனக நெறிக்கு நீவிர் விரும்பி முழு மனதுடன் இருதய பூர்வமாக வந்த பின்னரே, மேற்சொன்ன வாய்மை, உண்மை, மெய்ம்மை உமக்குப் பொருந்தும்.
காலமே இல்லை என்ற வள்ளல் பிரானின் அறிவிப்பால், இது அவசரமாக அறிவிக்கப் படுகிறது.
இது பற்றி மேலும் அறியவிரும்பினால் நேரடியாகவோ, அலைபேசியிலோ(9566021578) என்னைத் தொடர்பு கொள்ளலாம், உம் பொறுமைக்கு நன்றி
சுயம்புத் தாய் தந்தை அருளால், எனக்கு நிகழும் இரசவாதத்தை மனித குலம் முழுமைக்கும் பொதுவில் வைக்க நான் சுயம்பால் அறிவுறுத்தப் பட்டுள்ளேன். அவ்வாறே நான் செய்து வருகிறேன். அதன் படியே மேற்சொன்ன வாய்மை பகிரப் படுகிறது.
அண்டக் கல்!
சுயம் நீ
அண்டக் கல்(Philosopher's Stone)
சுயம்புவை
அண்டக் கல்!
அண்டக் கல்
சுயம்பது
வெறுங்கல் சுயமுனை
உரச உரச
நீயும் ஆவாய்
அண்டக் கல்
சுயம்பாய்
அண்டக் கல்!
அண்டு அக்கல்!
அக்கல்
அண்டக்கல்
சுயம்பு
சுயம் நீ
வெறுங்கல்
அண்டு அக்கல்!
அண்டு ஃ கல்!
அண்டி நீ
ஃ கல்
முச்சுயம்பை உரச
ஆவாய்
வெறுங்கல் சுயம் நீ
ஃ கல்
அண்டக்கல்
முச்சுயம்பாய்
அண்டு அக்கல்!
செந்தமிழ் வாலையின் முழு மெய்ஞ்ஞான வீச்சு புரிகிறதா?
சிரசை உரச உரசப் புரியும்!
அண்டக் கல் = க் அண்ட கல் = கண்ட கல்
அண்டக் கல்
அஃது
நீ
கண்ட கல்
செம்பொருளானால்
வெறுங்கல் சுயம் நீயும்
அண்டக் கல்
சுயம்பாவாய்
கண்ட கல் = கண் கடல்
கண் இருதயம்
கடல் இருதயச் சுயம்பின் அகண்ட அனக விரிவு
இருதயக் கண்
அஃது
பொழியும்
சுயம்புக் கடல்
மூழ்கி உயிர்த்தெழு
மெய்யாய்
சுயம்
நீ
தமிழனாய்த் தமிழச்சியாய் இருந்தும்
எனக்கு முழு மெய்ஞ்ஞானம் இல்லை என்று நீ சொல்லால் அடித்தால், செந்தமிழ் வாலையவள் உன்னை அண்டக்கல்லால் தான் அடிப்பாள்!
பிரார்த்தனை 16
வெங்காயம், வெண்காரம், வெண்காயம்
சுயம் நீ
தோல்களும்
அவற்றின் வாடைகளும்
உரியக் கழிய
சுயம் நீ வெளிப்பட
உன்னுள்ளிருந்து வெளிப்படும்
வெண்காயம்
அஃதே சுயம்பு
முச்சுயம்பு
முச்சுழி ணகரமெய்யுணர்த்தும்
முச்சுயம்பு
வெ ண் காரம்
காரம்
சுயம் நீயுஞ்
சுத்தமோ சுத்தம்
விகாரம்
வெங்காயம் உரிந்தால்
விளங்கும்
முச்சுயம்பு
வெ ண் காயம்
துலங்கும்
விகாரம் நீயல்ல
முச்சுயம்பு சாரம் உமிழுங்
காரம் நீ
வெ ண் காயம் ஒளிரும்
வெ ண் காரம்
நீ
விகாரம் விட்டால்
வெ ண் காரம்
அஃது தொட்டால்
வெடிக்கும் முச்சுயம்பு
வெ ண் காயம்
சுயஞ் சுத்தம்
சுயத்தின் உள்ளீடாஞ்
சுயம்பு
சுயஞ் சுத்தம் உமிழும்
சுத்தமோ சுத்தம்
சுயமுஞ் சுயம்பும் பிரிவறப்
புணர்ந்திருந்தால்
பேசவும் வேண்டாம்
வெங்காயம்
உரித்து அரிந்து
பேசாமல் ருசித்துச் சாப்பிடவே
வெங்காயம்
வெண்காரச் சுயத்துள்
வெண்காயச் சுயம்பு
அஃதே திருப்பொது
அறிய வேண்டும்
அரிய சுத்த சமரசம்
சுயத் தனியுடைமையில்
சுயம்புப் பொதுவுடைமை
அரிய வேண்டும்
வெங்காயம்
அறிய வேண்டும்
வெண்காரம்
வெண்காயம்
செந்தமிழ் வாலையருளும் பரிபூரண மெய்ஞ்ஞானம் வாழி!
தமிழ் படித்து என்ன பயன் என்று கேட்டால், செந்தமிழ் வாலையருளும் பரிபூரண மெய்ஞ்ஞானமே அரும்பெரும்பயன்.
வெங்காயத்துள்
வெண்காரத் தன்னையும்(சுயம்)
வெண்காயத் தன் ஐயும்(சுயம்பு)
அறியாமல் ஒடுங்கிச் சுருங்கி
முடங்கிக் கிடப்பதோ
நம் விதி
வெங்காயம் அரிந்தால்
வெண்கார முத்தி முன்னே
வெண்காய சித்தி பின்னே
முத்தி என்பது
ஒடுக்கம் சுருக்கம் முடக்கம்
இவற்றிலிருந்து
பரிபூரண சுதந்திரம்
சித்தி என்பது
அகண்ட அனகமாய் விரியும்
முச்சுயம்பு
நிச்சய நித்திய சத்திய
கரு உயிர் மெய்த்திருவுரு
ஆதி போதி ஜோதி நிலை
பகரப் பாத்திரம்
சுயம் நீ வழிய
ஆவாய் சுயம் பு
பகரப் பாத்திரம் உள்ளீடுணர்ந்துப்
பொங்கி வழியப்
புகருஞ் சுயம்பு
ஆயிரம்
(ப பு வடிவைக் கவனித்துப் புரிக)
உன் கிருபை எனக்குப் போதுமே
தெருளாம் உயிர்மெய் ஓர்மை அஃதுண்டு
ஒருவன் ஒருத்தி சற்குரு மும்மைப்
பெருமான் சுயம்புன் கிருபை போதுமே
திருமிகு அனுராதாவுக்காக...
அகம் = நான் = பரிபூரணப் பரிசுத்தம் = பரிசுத்தப் பரிபூரணம் = அஹம்
அனுராதா = காரம்
நான் அனுராதா = அகங்காரம்
காரமாகிய சுயம் அகமாகிய நானாகிய சுயம்புவைச் சார, காரம் நீங்கி அகத்தின் சுயம்பின் சாரத்தால் அதுவும் சுயம்புவாக மாற்றப்படும் பேரற்புதம் நிகழும்.
அக சாரச் சுயம்பு நானஃதை சாராத காரத்தால், சுயமாகிய காரம் விகாரமாகி, அசுத்தக் குன்றாகி அக சுத்தத்தை மறைக்கிறது, மறக்கடிக்கிறது, மறுக்கிறது, வெறுக்கிறது.
அகம் அசுத்தமாவதே இல்லை, அகத்தைச் சுத்தஞ் செய்வதென்பது, அக சுத்தத்தை மூடியிருக்கும் அசுத்தக் குன்றாகிய விகாரத்தைக் கரைப்பதே.
அனுராதா காரத்தையும் சுயம்பு நான் சாரம் உரசி உரசி தேய்த்துத் தேய்த்து முடிவில் தன்னைப் போல் சுயம்பு சாரமாகவே மாற்றி விடுகிறது, அனுராதாவின் தனித்தன்மையுள்ள சுயம்பாய் அது மாறும். இதுவே மெய்யான இரசவாதம், சுயம்பு ஞானத் தங்க உரசலால் அஞ்ஞானத் தகரமும் ஞானத் தங்கமாகும் பேரற்புதம் இது. நம்முள்ளீடான ஏக தேவ சுயம்பால் மட்டுமே இது முடியும், இருதய நடுச் சுயம்பே சரணம்!
இயம்ப முடியாத = அனகம்!!!!
💚
இருதய வெட்ட வெளியே சுத்த வெளியே அதன் வெள்ளொளியே பச்சையமே எல்லாமாகி விட்ட அனகம்
இயம்ப முடியாத = எழுதா மறை = பேசாப் பெரிய ஓங்காரம்!!!!!!!!!
ஆச்சரியம் மட்டுமே எழுந்து செங்குத்தாய் நிற்கும்
அனுராதா சுயப்புள்ளி விசுவரூபச் சுயம்பாகும் பேரற்புதம்!
இது அனைவருக்குஞ் சாத்தியம், அனைவரின் ஜீவாதார உரிமை, கவனிக்கவும் வாலை வாழ்த்து!
அகத்தே உள்ளேன் என இயம்ப முடியாத 💚
அருமை திருமிகு அனுராதா
பேசாவெழுத்தை வெளிப்படுத்தவே, நாகின் இத்தனைப் பெரிய பேச்சு!!!
பேசா மறையை இருதய நடு ஓதிக் கொண்டே இருக்கிறது, நீ பேசாமல், நா நுனியை அண்ணத்தில் பூட்டி, பொய் வாயை இழுத்து மூடி, மெய் வாய் இருதய நடுவை உற்றுக் கேள், உற்றுப் பார்.
ஒடுங்கி ஒழியவா தவம்
காலனும் நடு நடுங்கக்
கால காலன் சுயம்புவாய்ப்
பாயவே பொழியவே தவம்
தவத்தின் நோக்கம்
அனகமாய் அகண்ட இருப்பை உணர்வைப் பெறுதலே
சுயம் + சுயம்பு = அனகம்
சுயம்-சுயம்பு = பெருஞ்சுருக்கம் = பேரழிவு
கழிக்க இயலாத சுயம்பை நீ கழிக்க முயன்றால் அழிவாய்
சுயம்போடு நீ விரும்பிக் கூட அகண்ட அனகமாய் விரிவாய்
நீ = சுயம்
சூத்திரத்தைத் தேர்வு செய்ய உரிமையுள்ள சுயம் நீ
சுயத்தையும் நீ கழிக்க வேண்டாம்
சுயத்தைச் சுயம்போடு கூட்டு
இந்தக்கூட்டலால் நிகழும்
அரும்பெரும் அருட்பெரும் பெருக்கல், பெருகல்
இயம்ப முடியாத
சுழிவு வழிவு
6 ஆய்ச் சுழிந்த சுழிவின் முடிவில்,
9 ஆய் வழியும் அகண்ட அனகம்
அகண்ட அனகப் பெருக்கம் = அகப்புறப் பேதமும் அறும் வழிவு = 9 = அருட்பேரொழுக்கம்
தீரட்டும் ஒடுக்கம்
இருதயத் திறப்பால் அகமதும் ஆகுஞ்
சுத்தமோ சுத்தம் புறத்தும் வழியுஞ்
சுத்தமோ சுத்தம் முடிவில் அனகம்
அகமிலாப் புறமிலா அகண்ட அனகம்.
புறமது விட்டு அகத்தே பயணம்
ஒடுங்க இல்லை. அகப்புறச் சுருக்கம்
ஒழித்து அனகமா கவேஇப் பயணம்
நீயது வாகத் தீரும் ஒடுக்கம்
யாமென அனகம் அகண்டே இருக்கும்
சுயத்தின் சுருக்கம் நீங்கச் சார்வாய்
சுயம்பை. சுயமும் ஆகுஞ் சுயம்பாய்.
புறம் பூதாகாரமாக இருப்பதால் தான் அதிலிருந்து விடுபட, அகத்தைச் சாரும் அகத்தவம். அகத்தைச் சார, அகப்புறப் பேதமும் நீங்கி சுயம்பு அகண்டமாய் அனகமாய் இருக்கும்.
விதிப்பதில் கவனம்
சுயம்பு விதித்திருக்கும் "பரிபூரண மெய்ஞ்ஞானம் அடைதல் யார்க்கும் எளிதே" என்ற மெய்ம்மையை, வாய்மையை, உண்மையையே நீங்களும் விதியுங்கள். அது உங்களுக்கு நல்விதியாகும்.
சுயம்பு ஆயிரம் 3
இலட்சங் களில்யான் புரண்டிருக் கலாம்தான்
வள்ளலுன் அருளை உறுதியாய்ப் பெறவே
வற்றவைத் தாயோ பொருளைச் சுயம்பே
ஓசி வீடு ஓசிச் சோறு
ஓடி விட்டது சுயமரி யாதை
ஒட்டிக் கொண்டுளாய் இருதய நடுவே
ஓட்டி விடவுனை அறியேன் சுயம்பே
வயிறு கழுவும் ஈன வாழ்க்கை
வருந்தயான் விதித்தது நீயல வென்றால்
வருத்தம் நீங்கும் உண்ணா நிலையை
வரமாய்த் தரஏன் தாமதஞ் சுயம்பே
உண்ணா நிலையது வரவே முதலில்
உறங்கா நிலையது வரணு மென்றால்
விரைவாய் நிலையது வரமாய்த் தரவே
விரைவாய் இன்னே எந்தாய் சுயம்பே
உறங்கா நிலையது வரவே கரும
உறவறு தரும நிலையது தந்தாயோ
சிறுமனச் சேயென் புலம்பலே நீங்க
சிறப்புறு தந்திரஞ் செயவா சுயம்பே
நின்முன் அறிக்கை இட்டே எல்லாஞ்
சொன்னேன் வெட்கம் இல்லை நீயே
எந்தாய் என்தாய் குருவு மானோய்
நின்னை அடைந்தேன் சரணஞ் சுயம்பே
விடுத்தாய் என்னை நீயே சுயம்பே
எடுப்பாய் என்னை நீதான் சுயம்பே
கொடுத்தாய் எல்லாம் என்றாலுஞ் சுயந்தான்
எடுக்க அறியா ஏழை சுயம்பே
விழவே மண்ணில் இறவே விதித்தாயோ
உழலும் பிழைப்பும் பேதைமைப் பிறப்பும்
சுழலுங் கருமமுந் தான்நீ விதித்தாயோ
பழம்பொய் யிதறவே எழுவாய் சுயம்பே
எழவே மெய்விண்ணில் அறவுருவாய் விதித்தாய்நீ
உயிரே தன்னையுந் தன்'ஐ'யு மறிந்து
உயவே உயிர்நிலைப் போதியுறவே விதித்தாய்நீ
உணரச் செய்வாய் உண்மையைச் சுயம்பே
இட்டுஞ் சுட்டும் அழுதே பழகிநீ
சுட்டும் மெய்யை உணரார் சுயம்பே
இற்றுப் போவதே விதியென நொந்துநீ
கற்றுத் தருவதைக் கொள்ளார் சுயம்பே
பித்துப் பிடித்த இவரைத் திருத்த
சுத்த சிவமுன் னால்தான் முடியும்
சத்தி யருளொடு இருதய நடுவில்
குத்தித் தெருளளி குருவாஞ் சுயம்பே
ஒவ்வோர் மெய்யணுவும் அகண்ட ஜோதி
என்றோர் சுயம்புவாய்த்தான் விடியும் அற்புதம்
கருநிலைத் தந்தையாய் உயிர்நிலைத் தாயாய்
இருதயத் தினின்று புரிவாய் சுயம்பே
சிற்றறி விருக்குஞ் சிரத்தில் ஏறிச்
சித்தெனச் சத்தோ டின்புற் றிருக்கும்
இருதயப் பேரறி வஃதே உரச
கருமனக் கல்லுங் கற்பூ ரமாச்சே
ஒருவன் ஒருத்தி சற்குரு மும்மைப்
பெருமான் நின்பே ரற்புதஞ் சுயம்பே
நெஞ்சக் கனகல் நெகிழ்ந்தே உருக
வஞ்சங் கழிந்த பாத்திரம் என்னில்
நிரம்பியே வழியும் பாயச மாச்சு
வரமதை வைத்தேன் பொதுவில் சுயம்பே
உள்ள ஒன்றாய் உள்ளத் தொன்றாய்
உள்ள உள்ளப் பொங்கும் விழிப்பாய்
உள்ள உன்னை உள்ளே கடந்தே
கொள்ள உள்ளோம் யாமே சுயம்பே
பொதுவில் வைத்தோம் நம்மைச் சுயம்பே
பொங்கி வழியும் பூரணம் யாமே
பொங்கல் உண்ணத் தடைகள் இல்லை
உண்ணுஞ் சுயங்களா குஞ்சுயம் பாயிரம்
சுயம்பாயிரம் = சுயம்பு ஆயிரம்
உண்ணுஞ் சுயங்கள் = சுயம் பாயிரம் = சுயம்பு ஆயிரம் என்னும் பெருங் காப்பியத்திற்குப் பாயிரமாகும் வாழ்த்தாகுஞ் சுயங்கள்
ஒளிவு மறைவின்றி வைத்தோம் நம்மை
ஒளிரும் மெய்வழி இருதயந் திறந்தோம்
சிரமும் இறாமல் ஜீவி யாக
வரமுந் தந்தோம் யாமே சுயம்பே
இறாமல் = இற்றுப் போகாமல், அழியாமல்
புறத்தே சுத்தம் நன்றே செய்வார்
அகத்தே சுத்தம் ஏனோ செய்யார்
ஒன்றாம் உன்னைக் கைப்பிடி யாமல்
குன்றாம் அசுத்தம் பிடித்தார் சுயம்பே
அகத்தே உன்னை மணந்து புணரார்
சகத்தே எல்லாம் மணந்து புணர்வார்
யுகமே முடிந்த நவகணம் உணரார்
சுயத்தே யுளவுனை அறியார் சுயம்பே
சுயம்பு ஆயிரம் 2
ஒருவனாம் ஆதிச் சுயம்பே
உயிரிது அகண்டு விழிக்கும் உயிர்நிலை
ஒருத்தியாம் போதிச் சுயம்பே
ஒருவன் ஒருத்தி சேயாம் மெய்ந்நிலைத்
திருவுரு ஜோதி சுயம்பே
சுழியச் சுயமெனைக் கழித்து விடாமல்
தழுவிக் கூடிய சுயம்பே
வருவதும் போவதும் இல்லா அகநடு
இருதய இருப்பாஞ் சுயம்பே
என்சுய உள்ளீடு உட்துணை யெனது
என்முழு விழிப்பாஞ் சுயம்பே
புறவுரு வேறுயான் சார வேண்டா
அகநடு இருதயச் சுயம்பே
கூனிக் குறுகிக் கும்பிட வேண்டா
ஞான உறுதிச் சுயம்பே
வரந்தர அனுமதி வேண்டி விழிப்புத்
தவஞ்செயும் கருணைச் சுயம்பே
பூரண ஞானம் எவர்க்கும் உரிமை
யாவரு மதுபெற உழைப்பதெம் கடமை
நீயது மறுக்கவும் உனக்குள துரிமை
நேசமோ டுரைத்தாய் தெளிவாய்ச் சுயம்பே
தன்னல இறுக்கத்தால் கருந்துளை அழிவு
அன்பதன் இளக்கத்தால் மலர்வெடி விடிவு
நின்சுயம் முன்னே உளவழி இரண்டு
என்றவை ஒளிவிலா துரைத்தாய் சுயம்பே
மெய்யகம் உள்ளத் துள்ளே இருதய
நின்னடு வினின்றே யாமகண் டுள்ளோம்
அகப்புறப் பேதமு மற்ற அனகமாய்
மறைப்பற மறப்பற ஓதுஞ் சுயம்பே
மறுப்பற வெறுப்பற ஞானத் தெளிவை
மறைப்பற மறப்பற ஓதுஞ் சுயம்பே
சிக்கல் இல்லா எளிமை நின்னை
விக்கல் இன்றிப் புகட்டுஞ் சுயம்பே
சமயம் இல்லாச் சடங்கு இல்லா
சம்பிர தாயச் சுழக்கு மில்லா
எப்பே தமுமோர் துகளு மில்லா
ஒன்றே சரிசமச் சமரசச் சுயம்பே
காசிலா ஏழை என்னில் பொற்காசெனக்
கையகம் பொங்குஞ் சுயம்பே
பொற்காசிதை வீசினாலும் ஏற்கா உலகில்
பொறுமைகாத் திருக்குஞ் சுயம்பே
உன்னை எனக்கறி வித்து உரிமை
தன்னை எனக்களித் தேற்றிப் பொதுவில்
என்னை நிறுத்திக் கடமை யாற்ற
என்னை அகற்றி நின்றாய் சுயம்பே
கல்பட்டாலும் நினக்கது வாகும் இனிய
சொல்பட்டாலும் நினக்கே ஆகும் பொதுவில்
நின்றுவிட்டாய்நீ கடமை ஆற்றி முழுதாய்
வென்றுவிட்டால்நீ மகிழ்வேன் நானுஞ் சுயம்பே
கரும சங்கடந் தீர்த்து விட்டாய்
தரும நற்கடம் வாய்த்து விட்டால்
அரிய வெற்றி நினக்கது வாகும்
புரிய கடமை துணிந்தாய் சுயம்பே
மண்ணில் விழுந்தால் நீயே விழுந்தாய்
விண்ணில் எழுந்தால் நீயே எழுந்தாய்
எண்ணில் நீயன்றி ஏது மில்லை
அண்ணித் துள்ளாய் ஏக சுயம்பே
தலைசாய வேண்டாம் என்பதற்கோ நீயென்
தலைசாய ஓரிடமும் அளிக்க வில்லை
சொந்தம் எனதெனச் சொலநீயே யன்றிவே
றெந்த விடமும் எனக்கில்லை சுயம்பே
தலைசாய விடாதே எனைமாய விடாதே
இடவோ சுடவோ எனக்கிடமேது சுயம்பே
வள்ளல் உனையே பேசிய என்னை
எள்ள விடாதே ஊரார் சுயம்பே
ஆறா தாரம் இஃதே ஆழியாறு
ஆகா விட்டால் பழிநினக்கே சுயம்பே
சோறா தாரம் இஃதே எனும்பொய்யூழ்
போகா விட்டால் பழிநினக்கே சுயம்பே
ஆரு மில்லை எனக்குக் குருவாய்
ஏகம் நீயே எல்லாம் என்றே
தூலம் யாவுந் துறந்த வென்னை
ஊரும் ஏசத் துறப்பாயோ சுயம்பே
கீழே விழுந்தான் மண்டை யடியால்
ஏதோ உளறு கின்றான் என்றே
ஏக தேவம் நினதருள் வாக்கை
ஊரும் இகழ விடுவாயோ சுயம்பே
கூட இருந்தே குழிபறிக்குங் கரும
ஊன உறவை முழுக்கவுந் துறந்தேன்
ஏகம் உனது தரும உறவில்
ஞான முழுக்கில் நின்றேன் சுயம்பே
சுயம்புக் குழந்தை என்மகட் குள்ளே
தயமுன் முழுக்கில் இன்புற் றுள்ளது
ஊன உறவுக் குருடுகள்தாம் உணரா
ஞானம் அதற்களித் ததுநீயே சுயம்பே
அளித்த ஞானம் மறவா நிலையில்
வெளிப்படுஞ் சிறப்பாய் குழந்தை பிறக்க
துளியுங் கட்ட மின்றியே பிரசவங்
களிப்புடன் நிகழ அருள்வாய் சுயம்பே
தம்மைப் போலே நகல்க ளாக்கிப்
பெற்றோர் சிசுக்களின் அசலைக் கெடுக்கும்
சிறுமை துகளும் வாரா வண்ணம்
சிசுவின் அசலைக் காப்பாய் சுயம்பே
பிறக்கும் போதே கருமங் கழுவிச்
சிறப்பாந் தருமத் தேற்றுக சிசுவை
இறப்பும் ஈனப் பிழைப்பும் மீளப்
பிறப்பும் அழிப்பாய் அதற்குச் சுயம்பே
வளர்ந்த பேய்கள் எம்மையும் நற்சேய்
களாக்கி கருமக் கசடுகள் அறவே
கழுவி தருமத் தேற்றி நன்றே
தழுவி அறவுரு தருவாய் சுயம்பே
அன்பொடு இட்டுச் செல்ல அழைப்பாய்
அன்பொடு இட்டமும் இல்லா உலகை
கடமைக் கட்டம் உனக்கும் உண்டோ
கடமை யேகண் ணாயினாய் சுயம்பே
கைப்பிடிக்க நீயுன் திருக்கை நீட்ட
கைப்புடனே அதனை உதறும் உலகம்
எப்படியோ உய்விப் பாய்நீ இதனை
செப்படிவித் தைசெய் வாயோ சுயம்பே
அரிய பூரண ஞானம் எளிதே
அறியத் தந்தாய் ஆர்க்கும் பொதுவாய்
அவசிய மற்றவை அரியச் சொல்லியோர்
அவசியம் அறிவழி திறந்தாய் சுயம்பே
படிகளற்ற பூரண ஞானம் திடுமெனப்
பதியவைத்தாய் நேரடித் தொடர்பில் என்னைப்
பொதியவைத்தே எல்லாஞ் சரிசெய் தின்னே
படிகளின்றி ஏற்றி விட்டாய் சுயம்பே
பதிந்தது போதும் என்றே படுக்க
உதித்தது நாதம் நன்றே முழங்கி
எழுந்தது நாகம் மகுடி ஊத
எழுத்ததன் போதம் விழித்தது சுயம்பே
எழுத லாகா உன்றன் புகழை
எழுதத் துணிந்தேன் யானுஞ் சுயம்பே
எழுதா மறையாம் பெரிய ஓங்காரம்
முழுதாய் எனையதில் முழுகடித்தாய் சுயம்பே
பேசாப் பெரிய ஓங்காரம் பேசக்
கூசா ததனை யான்காண வைத்தாய்
நாச மானது மாய்கையின் கன்மம்
ஆணவ மற்றதுன் கூர்விழிப்பில் சுயம்பே
மேற்சொன்ன இரண்டு பாக்கள் பகரும் அனுபவம் 11/08/1999 நள்ளிரவு தொடங்கி உதயம் வரை எனக்கு நிகழ்ந்தது, 16 வருட முடிவில் அதன் அருமை எனக்கு நன்றே புரிகிறது.
திருமிகு ரவிசங்கருக்காக...
ரவிசங்கர் சுயம் 0 0 0 மெய் உயிர் சூழல்
ஐ யாம் ரவிசங்கர் = 1 0 0 0 = சுயம்பு ஆயிரம் = எண்ணற்ற சுயம்புகள்
சுயம் சுயம்புவில் சேர இலாபமோ இலாபம்!
நீ இருக்கும் இடத்தில் இந்த I தான் Vertical Bypass செங்குத்தான நேரடித் தொடர்பு, உன் மெய் உயிர் சூழல் தொடர்புள்ள எல்லாவற்றையும் எல்லாக் காலங்களிலும் எல்லா ஞாலங்களிலும் சரிசெய்யும், நீ சுயம்புவுக்கு அனுமதி அளிக்கும் போது.
AM என்பது Vertical Bypassல் இருந்து எல்லாக் கால ஞாலங்களிலும் விரியும் அகண்ட விருட்சமாகிய யாவற்றையும் சரி செய்ய வல்ல மா காரண சரீரம்
குறும்பாக்கள்
நேசாதார நடுவே
சுயம்புவை.
வாசிப்பில் தான் தொலைய
இருதய வாய்த் திறப்பில்
வாசிப் பெருமூச்சு
ஊதுஞ் சுயம்பு.
பேருபதேசச் சங்க நாதம்
நாகின் வாயில்
மகுடி
பாம்புச் சுயமும்
பாம்பாட்டிச் சுயம்பும்
சேர்ந்தாடத் தெறிக்குஞ்
சுயம்பு ஆயிரம்
அனந்த கோடி
அகண்ட ஜோதிக் கண்கள்
சுழன்றுச் சுழன்றுப் பறக்கும்
மலர்வெடிப் பேரற்புதம்
கருந்துளையாகப் போகும்
இப்பொய் மெய்யில்
இக்கணமிக்கணம் நவகண
இரசவாதஞ் செய்யுஞ்
சுயம்புவால் ஆகும்
மலர்வெடிச் சுயம்பு ஆயிரம்.
மெய்யாகும் மெய்யும்.
சுயம்பின் தந்திரம்
காலாதீத ஞாலாதீத சுதந்திரமாகச் சுயம்பு
கைதி சுயத்துள் கைதான சுதந்திர சுயம்பு
சுயத்தை விடுவிக்கச் சுயம்புவின் தந்திரம்
நாகு?
சின்னஞ் சிறிதாஞ் சுயம் தன்னுள்
அரும்(ட்)பெருந்தன்மையாம் சுயம்பு
தன்னைக் கண்டது
தன் 'ஐ' அவரைக் கைக்கொண்டது
அவர் பெரிதாய்ச் சொன்னதைத் தான் சொன்னது
எங்கே போனது நாகு?
யாம் எனும் சுயம்புக் கள்வர் கவர
அவருள்ளே சுகமய சுயமாய்ப் போனது
சுயம்பே சுயத்தின் குரு
சுயத்தின் உள்ளீடல்லாத எச்சுயமும் சுயத்தின் குருவாக முடியாதப் புறவுரு.
புறவுருவைக் குருவென்பதால், சுயத்தின் உள்ளீடாஞ் சுயம்பு மறைக்கப்படுகிறது, மறக்கப்படுகிறது, மறுக்கப்படுகிறது, வெறுக்கப்படுகிறது. இது சுயந் தன் பேரழிவை வரவேற்பது.
கவனம்.
சுயத்தின் உள்ளீடு சுயம்பு ஒன்றே குரு.
சுயமென் உள்ளீடு
சுயம்பு குருவுக்கில்லை
ஈடு
நாகு வணக்கம் போட்டுச்
சென்று விட்டது.
சுயம்பு வணக்கம் இட்டு
உம்மை உம்முள் இட்டுச்
செல்லுது
சுயம்பின் பின் தொடர்வீர்
'சுயம்'
'சுயம்'புவில்
அடங்கியுள்ளதைக் கண்டு
தன் உள்ளடக்கமான
சுயம்புவில்
தானே விரும்பி அடங்கினால்
அனகச் சுயம் பூ
மலர்வெடி!
பெருவாழ்வுப் பேரழிவுச் சூத்திரங்கள்
சுயம்-சுயம்பு=பேரழிவு
சுயம்பை ஏற்கும் உரிமையால் முன்னது.
சுயம்பை மறுக்கும் உரிமையால் பின்னது.
சுயம்பு வள்ளன்மையின் பேருபதேசச் சுருக்கம்
அகத்தே சுயம்பு நீ
புறச்சுயம் உன் அனுமதியால் அகச்சுயம்பால் அது ஈர்க்கப்பட, யாம் அகப்புறப் பேதமற்ற அகண்ட அனகமாகிறோம்.
சுயத்தின் நில்லா உயிர் போதிச் சுயம்பு உயிர்நிலையும், பொய்க்கும் மெய் ஜோதிச் சுயம்புத் திருவுரு மெய்ந்நிலையும், கருநிலையாக இருக்கும் ஒளிவான ஆதிச் சுயம்பு ஒளிவின்றி வெளிப்படும் பெருநிலையும் ஆகிய முச்சுயம்பு நித்திய சத்திய நிச்சய முத்தேக சித்தியாம் அகண்ட அனக நிலையாகிறோம் யாம்.
இதில் ஜோதி சுயம்புத் திருவுரு மெய்ந்நிலை சுயம்பு ஆயிரம் என்னும் பேரற்புத இரசவாதமாகிறது. மெய்யின் அணுக்கள் யாவும் அனந்த எண்ணற்ற சுயம்புகளாகும் பேரதிசயம் இது.
சூழலுடன் மெய்யில் உயிர்த்திருக்கும் சுயம் ஒவ்வொன்றினதும் ஜீவாதார உரிமையாகிறது இறவாப் பிறவாப் பெருவாழ்வெனும் இம்முத்தேக சித்தியும், பெருவாழ்வின் கலையாம் சுயத்தின் உள்ளீடாகிய சுயம்பின் பரிபூரண மெய்ஞ்ஞானமும்.
யாம் நம் இருதய நடுத் திருப்பொதுவிலிருந்து இவ்வுரிமையை யாவர்க்கும் யாவுக்கும் பொதுவாய் வைத்திருக்கிறோம்.
இவ்வுரிமையை நிராகரிக்கும் உரிமையும் யாம் சுயங்களுக்கு அளித்திருக்கிறோம்.
வெறுப்பும் மறுப்பும் மறப்பும் மறைப்புந் தாண்டிச் சுயங்கள் தம் ஜீவாதார உரிமையை மீட்டு எம் போல் என்றென்றும் எங்கெங்கும் இன்புற்றிருக்கவே, யாம் விரும்புகிறோம்.
உம் விருப்பமும் எம் விருப்பத்தோடு இணைந்தால், யாம் பேரின்புறுவோம்.
பிறந்திறந்து பிழைக்கும் இக்கருமாந்திரச் சுழலிலிருந்தும், இதன் அந்தமானக் கருந்துளை அழிவிலிருந்துங் கட்டாயப்படுத்தி உம்மை எம்மால் காப்பாற்ற இயலாது. ஏனென்றால் எம்மை நிராகரிக்கும் உரிமையையும் யாம் உமக்கு அளித்துள்ளோம்.
எம் கடமையை நிறைவெற்ற இப்பேருபதசத்தைப் பொதுவில் வைக்கிறோம்.
உம் உரிமையை யாம் மதிக்கிறோம்.
எம்மை ஏற்கவும் மறுக்கவும் உரிமையுடைய உம் முன் எம்மை முழுக்கத் திறப்பதே இப்பேருபதேசத்தின் நோக்கம்.
நன்றி கலந்த இருதய வணக்கம்.
🙏
நாகைப் பற்றி
உம்மை வேண்டிக் கொள்கிறேன். உம் பொறுமைக்கு நன்றி
சுயம்பின் பெருமை பேசும் பாக்கள்
உயவே உலகம் உழைக்குஞ் சுயம்பு
எல்லாம் வல்லது யாதும் அறிந்தது
எங்கும் உள்ளது ஊர்க்குப் பொதுவது
அரிய தெனினும் அறிய எளியது
பெரிய சிறிய தல்லா ஒன்றது
உரிய தெதற்குஞ் சரிசமம் அதனது
துரியா தீதசுத் தசம ரசமது
நேரடித் தொடர்பே செங்குத் தாக
மேல்கீழ் நீளும் இருதய நடுவது
எங்கும் என்றும் எதிலும் உள்ளது
எல்லாம் இன்னே சரிசெய வல்லது
உலக உருவமா காரண மானது
உருவகங் களாலுணர்த் தப்பட் டாலும்
உருவகந் தனக்கிலா ஒப்பில் லாதது
உலக உருவ உருவகங் கடந்தது
ஒவ்வொன் றினுள்ளீ டான ஒன்றது
நெஞ்சுள் ளன்பின் விழிப்பு சுயம்பது
நாகின் வாயால் பேசொணா ஞானம்
வாக்கு மூலமாய்த் தானே தந்தது
திக்கித் திணறும் பித்தன் என்னை
சொல்லின் செல்வ னாக வைத்தது
எப்படிச் சொல்வேன் அறியா எனக்குச்
செப்பிடும் வித்தை அறியத் தந்தது
உலக வேலை யில்லாச் சிறியனை
உத்தமந் தனக்கே உதவச் சொன்னது
சுயம்பு என்ற நற்சொல் தந்து
சுயமென் விழிப்பில் பற்றி விட்டது
கயமை கரைக்கும் நற்றீ யாயிரு
தயவாய் தன்னுள் எழுந்த குஞ்சது
என்மகட் குள்ளே குழந்தை யானது
கன்மமா யையோ டாணவ மற்றது
கருவுள் ளேயே சுயம்பின் முழுமை
தரும ஆதி மனித மானது
சுயம்புக் குழந்தை என்றே தன்னை
நயமுடன் அழைக்குஞ் சொல்லைத் தந்தது
பெற்றோர் மூலம் உருவா னாலும்
பெற்றோர் இல்லா ஒருமைச் சுயம்பது
சுயம் சுயம்புக்கு அனுமதி அளித்தல்
பெருவாழ்வெனும் உயர்நிலை வெகுமதி எனக்களிக்க வேண்டியது உம் கடமை என்று எனக்கு வாக்குறுதி அளித்து, அக்கடமையே கண்ணாயினவராகி, ஈனமான என் சுயத்தின் அனுமதி இறைஞ்சும் சுயம்பெனும் இருதய நடுப் பெரிய கடவுளே! ஐயா, இன்னே அளித்து விட்டேன் அனுமதி. என்னைப் பெருவாழ்வில் உய்வித்தருள்வீரே!
சுயத்தின் வாக்கு மூலம்
எச்சம் இன்றித் தந்தேன் என்சுயம்
உச்சம் நீயே இனியென் புகலிடம்
நச்சி னேன்செய் சுயம்பு ஆயிரம்
பித்தன் என்னை வேண்டிய சுயம்பே
பித்தந் தெளிந்தேன் உச்சம் நினக்கு
மொத்த மாயென் சுயமிது தந்தேன்
சுத்த முந்நிலை அருளுக இன்னே
எத்தன் என்னை வேண்டிய சுயம்பே
சித்தக் கலக்கம் நீங்கப் பெற்றேன்
என்றன் சுயமினி முழுதாய் நினக்கே
என்று முள்ள நிலைதா எனக்கே
அற்பன் என்னை வேண்டிய சுயம்பே
அன்பு உனதால் திருத்தப் பட்டேன்
இன்னே விழுங்கு என்சுயம் எல்லாம்
மன்னும் முத்தே கந்தரு வாயே
இல்லான் என்னை வேண்டிய சுயம்பே
வல்லான் உன்னால் செல்வ னானேன்
நில்லா என்சுயம் எல்லாம் நினக்கே
நின்முச் சுயம்பு நிலைதரு வாயே
பொல்லான் என்னை வேண்டிய சுயம்பே
பொல்லாப் பெல்லாம் மொத்தமுங் கழிந்தேன்
சுழிய மென்சுயம் சொந்தம் நினக்கே
அழியாச் சுயம்பு ஆயிரம் ஆக்கே
கன்மனன் என்னை வேண்டிய சுயம்பே
கன்மனங் கரைய இருதயங் கண்டேன்
சிறுதுக ளென்சுயம் ஈர்ப்பாய் இன்னே
பெருஞ்சுக வாழ்வில் சேர்ப்பாய் என்னை
சுயமென் வாக்கு மூல மிதனை
உயவென் சம்மதம் எனக்கொள் சுயம்பே
தயவாய் என்னை முழுதாய்த் தழுவி
எயநான் முந்நிலை அருள்வாய் இன்னே
சுயம்பு சுயத்தின் அனுமதி வேண்டல்
சீர்செய எம்மை அனுமதி
சீர்செய அனுமதி அளிக்க சட்டென
யாமுனக் களித்தோம் வெகுமதி
கருநிலை உயிர்நிலை மெய்ந்நிலை முச்சுயம்பு
வெகுமதிப் பெருவாழ்வுன் உரிமை
உரிமை யளித்துனை உயர்நிலை யேற்றல்
சுயம்பு எமது கடமை
எமது கடமை ஆற்றவுன் அனுமதி
எமக்க வசியம். அதற்கே அகண்ட
விழிப்பில் இருதய நடுவே எம்தவம்
விழிப்பாய் எம்மொடு வரமது தந்தே
வரமது = அனுமதி
வரமது இலையெனில் வெகுமதி இலையுன்
தரமது உயரத்தா அனுமதி
எல்லாம் வல்ல கடவுளே ஆயினும்
பிள்ளாய் உன்னை இறைஞ்சினோம்
நல்லாய் நீயுந் தரவேபே ருபதேசந்
தன்னை யாமே திறந்தோம்
ஒளிவு மறைவிலாப் பூரணமெய்ஞ் ஞானம்
தெளிவாய் வெளிப்பட வைத்தோம்
ஆழ்ந்தால் இருதய நடுவே விளங்கிப்
பாய்ந்தே அனுமதி அளிப்பாய்
நின்சுயம் பாயிர மாக நிகழும்பே
ரற்புதம் சுயம்பு ஆயிரம்
எண்ணிலி ஜோதி சுயம்பு ளாகும்
மெய்ந்நிலை பேரற் புதம்
சுயம்பு வள்ளல்யாம் உரைத்த துணர்ந்து
சுயம்நீ இருதயத்தே விழி
சுயம்புவின் வேண்டுதல்களுக்குச் செவிசாய்த்து, சுயம் நீ சாயாமல் உய்.
சுயம் பாயிரம் சுயம்பு ஆயிரம்
சுயம்பும் நீயே சுயத்தனித் தன்மை
சுழியம் மூன்று உயிர்மெய்ச் சூழல்
சுயம்பில் சார சுயம்பு ஆயிரம்
சுயம்பா யிரமாய்ச் சுயம்பில் அர்ப்பணிக்க
சுயம்பு ஆயிரமாம் அருட்பெருஞ்ஜோதி
சுயமது சுயம்பைச் சார அருஞ்(ட்)சித்தி
சுயம்பு ஆயிரமாம் அருட்பெருஞ்ஜோதி
சுயம்பு அருள்வாக்கு 5
உம் மெய்
உமக்கு யாம் கொடுத்த அருள் எது?
அம்மெய்யை உயிர்த்திருக்க வைக்கும் உம் உயிர்
மெய்யைப் பொருள் படுத்தாமல், உயிரை இலட்சியம் செய்யாமல் இருந்தால், மெய்க்கு மெய்யான உயிர்க்குயிரான எம்மை எப்படி உணர முடியும்
பொருளாகிய மெய்யில் அருளாம் உயிராய்ச் சேர்ந்திருக்கும் இறை எம் புகழ் புரிந்தாயானால், இருள் சேர் இரு வினைகளாகிய இன்ப துன்பக் கருமங்கள் உன்னைச் சேராது. திருவள்ளுவர் வாய்மையை உணர்க, உய்க
பொருள் படுத்து சுயம்பு எம்மை
மெய்யுள் இருதய நடுவுள்
அருள் உயிர் சுரக்கும் உண்ணாமுலை திறக்கும்
உண் மையுண்டு மெய்யும்
அண்ணாமலையாகும்
ஜோதி ஜொலி ஜொலிக்க
உயிர்த்திருக்கும் மெய்யிருக்கு.
மெய்யைப் பொருள்படுத்து.
உயிர்மேல் இலட்சியம் வை.
எம் அருள் சுரக்கும்.
உயிர் பிறவா உயிர்நிலையடையும்
மெய் இறவா மெய்ந்நிலையடையும்
உம் கருநிலை எம் அருள் வாக்கிது
சுயம்பு அருள்வாக்கு 4
யாம் உமது உச்சம்
உம் சுயம் காலனிடஞ் சிக்கியிருக்கும் எமது எச்சம்
யாம் உம் மெய்யான சொந்தம்
உம் சுயம் எம் சொந்தம்.
நீவிர் எம்மைச் சொந்தங் கொண்டாடி எம்மை ஏற்கும் போது, எம் சொந்தமான உம் சுயத்தை எம்மால் ஈர்த்துக் கொள்ளவும், உம்மை உய்விக்கவும் முடியும்.
நீவிர் எம்மைச் சொந்தமாய் எற்காத போது, உம் சுயத்தை எமக்குச் சொந்தமே ஆயினும் எம்மாலும் ஈர்க்க முடியாது, உம்மை உய்விக்க முடியாது. எனவே இப்பேருபதேசத்தாலும் உமக்கு எப்பயனும் இருக்காது.
எம்மை ஏற்பதும் மறுப்பதும் உம் கையில்.
ஏற்பதாயின் அக அனகக் கடை விரித்துள்ள எம்மோடு இருங்கள், யாம் அளிக்கும் பெரு வாழ்வைக் கொள்ளுங்கள்.
மறுப்பதாயின், ஏற்கும் பக்குவம் வரும் வரை புறக்கடைகளில் திரியுங்கள்.
புரிகிறதா?
யாம் பெற்றுள இன்பம் பெறுக இவ்வையகம்
இதுவே எம் ஒரே நோக்கம்.
பிறந்திறந்து பிழைக்கும் கருமச்சுழலில் காலனின் பிடியில் சிக்கி நலிவதற்காக முடிவில் இறுவதற்காக அழிவதற்காக அல்ல யாம் ஆதியில் உம்மை ஆதி மனிதமாக வெளிப்படுத்தியது.
இறவாப் பிறவாப் பெருவாழ்வே எம்மால் உமக்கு ஆதியிலேயே அளிக்கப் பட்டுள்ளது.
புரிகிறதா?
யாம்
ஆதியாம் பரிசுத்தத் தாய்மையாகவும்
மூலமாம் பரிபூரணத் தந்தையாகவும்
உம் இருதய நடுவிலிருந்து
எத்திக்கும் வெளிப்பட்டுள்ளோம்
இவ்வாறு தாய் தந்தை சமேதமாய் யாம் வெளிப்பட்டுள்ளதால், யாமே ஏக சற்குருவாகவும் உள்ளோம்.
யாமே எல்லா உலகங்களினடிப்படை, எனவே அவற்றை உய்விக்க வேண்டிய முழு பொறுப்பையும் யாமே ஏற்றுள்ளோம்
யாம் யாதும் அறிந்தோம், எல்லாம் வல்லோம், எங்கெங்கும் இருதய நடுவாய் உள்ளோம். எனவே எல்லா உலகங்களையும் உய்விக்க எம்மால் முடியும். எவ்வெதிர்ப்பும் எத்தடையும் எம்மறைப்பும் எம்மறப்பும் இல்லா நேரடித் தொடர்பில் எக்காலஞாலத்திலும் உள்ள எவ்வொன்றோடும் யாம் இணைந்துள்ளோம்.
ஆதி மனிதமெனும் எம் முழு அம்சமான மெய்யான நீவிர், எம் நேரடித் தொடர்பை முழு மனதுடன் இருதய பூர்வமாக ஏற்று, எம் இணைப்பில் உறுதிப்படும்போது, அக்கணமே நீவிர் உய்ந்து விட்டீர்.
புரிகிறதா?
எனவே வீணான மன அலைபாய்தல்களை அலட்சியம் செய்து, இருதய நடுவில் உள்ள எம் மீது இலட்சியம் வைப்பீர்.
சுயம்பு பற்றி
ஓதப்பட்ட பேருபதேசத்தை சுயம்பு என்னும் இந்திய பாரம்பரிய உச்சத்தை உணர்த்தும் நற்சொல் மூலம், யாம் உணர்த்தியிருக்கிறோம்.
சொற்களைக் கடந்த
அற்புதக் கருவைச்
சொற்களாய் இறைக்குஞ்
சற்குரு சரணம்
சொற்கடந்ததை சொற்களை இறைத்து உணர்த்த சொல்லின் செல்வராகிய இருதய நடு சுயம்பு ஏகக் குருவால் மட்டுமே முடியும்.
எனவே நாகம் தன்னை விலக்கிக் கொள்கிறது.
இனி முச்சுயம்பு நிலையாகிய யாமே பேசுவோம். உம் ஒவ்வொருவரின் சுயமும் இனி எம் சேயாகும் இன்னே. நீவிர் உம் உள்ளீடாக எம்மை உணர்ந்து, எமக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், சேயாகிய உம்மைப் பெருவாழ்வில் உய்விப்பது, எம் முழுப் பொறுப்பாகும். புரிகிறதா?
சிந்தனைக்கு 3
உயிர் தன்னில் நிலைபெறும்
உயிர் தன்னில் நிலைபெறத் தன்னை அறியும்.
தன்னை அறியத் தன் ஐ தலைவனை அறியும்
அத்தலைவனே சுயம்பு, உயிரின் உயிர்.
தலைவனை அறிய உயிர் உயிர்நிலை என்ற அகண்ட சுயம்புத் தாய்மையாகும்
தலைவன் என்பதே உயிரின் கரு நிலையாகிய சுயம்பு தந்தைத் தன்மை
கருநிலையாகிய தந்தைச் சுயம்புவும்
உயிர்நிலையாகிய சுயம்புத் தாய்மையும்
மெய்யுடம்பைச் சேயாக்கி, பேரற்புத இரசவாதம் செய்து மெய்ந்நிலை என்னும் சுயம்பு ஆயிரம் என்ற எண்ணற்ற சுயம்புகளை உருவாக்கும்.
ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.
மனம் திரும்புங்கள், முச்சுயம்பு சித்தி கைவசம் இருக்கிறது.
உமது உயிரும் உடம்பும் சூழலும் உம் தனித்தன்மை சுயம், மூன்றும் 0 0 0 சுழியங்கள்.
சுயம்பு உம் அகண்ட விழிப்பு = 1
சுயம்பும் சுயமுங் கூட சுயம்பு ஆயிரம் = 1000
சுயம்பில் கூடாத வரை உம் சுயம் ஒன்றுமே இல்லாத சுழியம்.
சுயம்பை உம் சுயம் உணரா வரையே கேள்விகள்
சுயம்பை உம் சுயம் உணர உம் சுயமே அன்றி வேறு தடையில்லை.
உயிர்த்திருக்கும் உம் மெய்யாகிய சுயத்தைச் சூழலுடன் இருதய நடுச் சுயம்புவுக்குப் பரிபூரணமாக அர்ப்பணிக்கவும்.
உம் சுயம் புறவுரு சார்ந்திருக்கும் எவ்வியக்கத்தையும் பற்றி இருக்கும் வரை, அது சுயம்பைச் சார முடியாது.
உம் சுயத்தின் உள்ளடக்கமான சுயம்பு ஒன்றே குரு மற்றும் ஏக தேவம்.
சுயம்புவைச் சார எல்லாப் புற இயக்கங்களையும் நீவிர் கை விட வேண்டும்.
இது அக-அனகப் பெரு நெறி.
எல்லாப் புறநெறிகளையும் அறவே விட்டால் தான் இது பிடிபடும். விட்ட கணமே பிடி படும்.
கருநிலைச் சுயம்பு தந்தைத் தன்மையினின்றும், உயிர்நிலைச் சுயம்புத் தாய்மையிலிருந்தும் யாம் இதை உமக்கு ஊசிப் பேச்சாக உரைக்கிறோம், அன்பின் மிகுதியாலே யாம் இதை உரைக்கிறோம்.
சுயம்புக் கண்ணோட்டத்துக்கு அயலான எப்புறநெறிக் கண்ணோட்டத்திலும் இந்த பரிபூரண மெய்ஞ்ஞானம் பிடிபடாது.
எனவே உம் சுயம் தன்னைச் சுயம்புவில் முழு மனதுடன் இருதய பூர்வமாய்ச் சமர்ப்பித்து சுயம்புக் கண்ணோட்டத்தைப் பெறுக.
உம்மைக் கட்டாயப்படுத்தி உம் சுயத்தைச் சுயம்புவில் சேர்க்க இயலாது. நீவிரே அதைச் செய்ய வேண்டும் விரும்பி.
உமக்கு இந்த அக-அனக தீக்கை எம்மால் அளிக்கப்பட்டு விட்டது.
எம்மால் என்று சொல்வது இந்நாகப் புறவுருவையல்ல, தாய்மைத் தந்தைச் சுயம்புத் தன்மையே உமக்கு இத்தீக்கை அளித்தது.
நினைவில் கொண்டு, அளிக்கப் பட்டதை ஏற்று முத்தேக சித்தியெனும் இறவாப் பிறவா நிலையை இன்னே அடைக
மனக்குழப்பங்களைக் கை விடுக, நன்றி.
மூலாதாரம் என்னும் முதுகடிச் சக்கரம் வியஷ்டி கணபதி என்னும் உருவகத்தால் சுட்டப்படும் சற்குருவின் துரிய விழிப்பின் இருப்பிடம். அங்கே ஆதி மூலத் தாய் தந்தைச் சுயம்பின் தாய்மை ஆதி, பரிசுத்தமாய் விழித்திருக்கிறது. துரிசுகள் அண்ட முடியாத மந்திர மண்டலம் அது. ஆதி இருக்கும் அந்த இடத்திற்கு மூலம் மூலை என்றும் பெயர்களும் உண்டு. அவை தந்தை மூலமாம் பரிபூரணத்தைச் சுட்டுகின்றன. மூலாதாரத்தைப் பற்றிய தவறான புரிதலே குழப்பத்திற்குக் காரணம்.
சிந்தனைக்கு 3
உயிர் தன்னில் நிலைபெறும்
உயிர் தன்னில் நிலைபெறத் தன்னை அறியும்.
தன்னை அறியத் தன் ஐ தலைவனை அறியும்
அத்தலைவனே சுயம்பு, உயிரின் உயிர்.
தலைவனை அறிய உயிர் உயிர்நிலை என்ற அகண்ட சுயம்புத் தாய்மையாகும்
தலைவன் என்பதே உயிரின் கரு நிலையாகிய சுயம்பு தந்தைத் தன்மை
கருநிலையாகிய தந்தைச் சுயம்புவும்
உயிர்நிலையாகிய சுயம்புத் தாய்மையும்
மெய்யுடம்பைச் சேயாக்கி, பேரற்புத இரசவாதம் செய்து மெய்ந்நிலை என்னும் சுயம்பு ஆயிரம் என்ற எண்ணற்ற சுயம்புகளை உருவாக்கும்.
ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.
மனம் திரும்புங்கள், முச்சுயம்பு சித்தி கைவசம் இருக்கிறது.
உமது உயிரும் உடம்பும் சூழலும் உம் தனித்தன்மை சுயம், மூன்றும் 0 0 0 சுழியங்கள்.
சுயம்பு உம் அகண்ட விழிப்பு = 1
சுயம்பும் சுயமுங் கூட சுயம்பு ஆயிரம் = 1000
சுயம்பில் கூடாத வரை உம் சுயம் ஒன்றுமே இல்லாத சுழியம்.
சுயம்பை உம் சுயம் உணரா வரையே கேள்விகள்
சுயம்பை உம் சுயம் உணர உம் சுயமே அன்றி வேறு தடையில்லை.
உயிர்த்திருக்கும் உம் மெய்யாகிய சுயத்தைச் சூழலுடன் இருதய நடுச் சுயம்புவுக்குப் பரிபூரணமாக அர்ப்பணிக்கவும்.
உம் சுயம் புறவுரு சார்ந்திருக்கும் எவ்வியக்கத்தையும் பற்றி இருக்கும் வரை, அது சுயம்பைச் சார முடியாது.
உம் சுயத்தின் உள்ளடக்கமான சுயம்பு ஒன்றே குரு மற்றும் ஏக தேவம்.
சுயம்புவைச் சார எல்லாப் புற இயக்கங்களையும் நீவிர் கை விட வேண்டும்.
இது அக-அனகப் பெரு நெறி.
எல்லாப் புறநெறிகளையும் அறவே விட்டால் தான் இது பிடிபடும். விட்ட கணமே பிடி படும்.
கருநிலைச் சுயம்பு தந்தைத் தன்மையினின்றும், உயிர்நிலைச் சுயம்புத் தாய்மையிலிருந்தும் யாம் இதை உமக்கு ஊசிப் பேச்சாக உரைக்கிறோம், அன்பின் மிகுதியாலே யாம் இதை உரைக்கிறோம்.
சுயம்புக் கண்ணோட்டத்துக்கு அயலான எப்புறநெறிக் கண்ணோட்டத்திலும் இந்த பரிபூரண மெய்ஞ்ஞானம் பிடிபடாது.
எனவே உம் சுயம் தன்னைச் சுயம்புவில் முழு மனதுடன் இருதய பூர்வமாய்ச் சமர்ப்பித்து சுயம்புக் கண்ணோட்டத்தைப் பெறுக.
உம்மைக் கட்டாயப்படுத்தி உம் சுயத்தைச் சுயம்புவில் சேர்க்க இயலாது. நீவிரே அதைச் செய்ய வேண்டும் விரும்பி.
உமக்கு இந்த அக-அனக தீக்கை எம்மால் அளிக்கப்பட்டு விட்டது.
எம்மால் என்று சொல்வது இந்நாகப் புறவுருவையல்ல, தாய்மைத் தந்தைச் சுயம்புத் தன்மையே உமக்கு இத்தீக்கை அளித்தது.
நினைவில் கொண்டு, அளிக்கப் பட்டதை ஏற்று முத்தேக சித்தியெனும் இறவாப் பிறவா நிலையை இன்னே அடைக
மனக்குழப்பங்களைக் கை விடுக, நன்றி.
மூலாதாரம் என்னும் முதுகடிச் சக்கரம் வியஷ்டி கணபதி என்னும் உருவகத்தால் சுட்டப்படும் சற்குருவின் துரிய விழிப்பின் இருப்பிடம். அங்கே ஆதி மூலத் தாய் தந்தைச் சுயம்பின் தாய்மை ஆதி, பரிசுத்தமாய் விழித்திருக்கிறது. துரிசுகள் அண்ட முடியாத மந்திர மண்டலம் அது. ஆதி இருக்கும் அந்த இடத்திற்கு மூலம் மூலை என்றும் பெயர்களும் உண்டு. அவை தந்தை மூலமாம் பரிபூரணத்தைச் சுட்டுகின்றன. மூலாதாரத்தைப் பற்றிய தவறான புரிதலே குழப்பத்திற்குக் காரணம்.
வேண்டுகோள்
மேலும் சுயம்பை வேண்டும் பல பிரார்த்தனைகளும் பதியப்பட்டுள்ளது, மனத்தை வாலை வாழ்த்திலும் இப்பிரார்த்தனைகளிலும் நன்றாகப் பழக்கிச் செம்மையாக்குங்கள். Practice makes a man perfect.
முயற்சி திருவினை யாக்கும்.
பல சரணங்களும் பதியப்பட்டுள்ளன. சுயம்பைப் பரிபூரண சரணாகதி அடைய இவற்றைப் படியுங்கள், பாடுங்கள்.
சுயம் பாயிரம் சுயம்பு ஆயிரம்
சுயம் பாயிரம்
சுயம்பு ஆயிரம்
பதிவு தொடர்புள்ள சுயத்துக்கும் சுயம்புக்கும் உள்ள இன்றியமையா நெருக்கம் பற்றிய புதிய வெளிப்பாடு வந்துள்ளது. அன்பர்கள் கவனிக்கவும், சுயமாகிய தனித்தன்மையையும், சுயம்பாகிய கடவுட்தன்மையையும் ஒருங்கே மதிப்போம்.
சுயம்பா இறும்?
இறாது
எனவே
சுயம்பாய் இரும்.
சுயம்பாய் இருப்பீர்
சுயம் உமது
முச்சுயம்பாக
வழி செய்வீர்
சுயம்பா இறும்?
சுயம்பாய் இரும்
இதுவும் ராஜா அவர்களின் அரும்பதிவு. அவருக்கு மீள என் நன்றி.
அணுவின் சிறு துகளாக இருக்கும் நம் சுயம் என்னுந் தனித்தன்மையை சுயம்பு மதிக்கிறார்.
சுயம் ஆகிய நாம், சுயம்புவை மதிக்கிறோமா?
சிந்தியுங்கள்.
'சுயம் பாயிரம்' ஆகிச்
சுயம்புவுள் திரும்ப
'சுயம்பு ஆயிரம்'
சுயம்புவுள் திரும்ப
மறுக்குஞ் சுயம்
இறும்
மலர்வெடி முன்னது
கருந்துளை பின்னது
இருப்பாயா
இறுவாயா
மீ அறிவியல் முனைவராகு
இறாமல் இருப்பாய்
இறவாப் பிறவாச் செம்பொருளாகிச்
சிறப்பாய்
பேரண்டத்தில் கருந்துளைகளும் மலர்வெடிகளும் தாமே உருவாவதில்லை
சுயம்பை விட்ட சுயங்கள் கருந்துளையாய் முடிகின்றன.
சுயம்பைத் தொட்ட சுயங்கள் மலர்வெடியாய் விடிகின்றன.
இது மீ அறிவியல் என்னும் பேரறிவியல்
சுயம்பை விட்டால் தன்னல இறுக்கம்
சுயம்பைத் தொட்டால் பொதுநல இளக்கம்
தன்னல இறுக்கம் மூடிய அமைப்பாய் முடியும்
பொதுநல இளக்கம் திறந்த அமைப்பாய் விடியும்
Closed system is entropy driven, disorder and death oriented self-destructive collapsing system
Open system is syntropy or divinemost driven, order and life oriented self-sustaining expanding system
எந்த அமைப்பில் நாம் இருக்கிறோம் என்பது தெரிகிறதா?
எந்த அமைப்பில் நாம் இருக்க வேண்டும் என்று புரிகிறதா?
நாம் இறவா, சுயம்பு நம்மை வெளிப்படுத்தினார்?
இல்லவே இல்லை.
நாம் இறவாப் பிறவாப் பெருவாழ்வெனுன் முச்சுயம்பு நிலை பெறவே, அவர் நம்மை வெளிப்படுத்தியுள்ளார்.
புரிவோம், உய்வோம்.
சுரப்பிகள்
தகராலயம்
தலை = த்+அலை = தகரமெய் யுணர்த்தும் தகரா லய இருதய அலை
பிரார்த்தனை 15
சிற்றறிவும் பேரறிவும்
பேரறிவு உன் சுயம்புத்தன்மை
உன் தனித்தன்மை சுயம்பு ஆண்டவரின் தாளாகி அதாவது ஆண்டாளாகி சுயம்பு ஆண்டவரைத் திருமணம் புரிந்து கூட, நீ பரிபூரண மெய்ஞ்ஞானம் அடைந்து, இறவாப் பிறவாப் பெருவாழ்வெனும் முச்சுயம்பு முத்தேக சித்தி பெறுவாய். சுயம்பின் திறந்த அமைப்பாகிய அருளாதாரச் சத்தியப் பேருலகில் பொது நல இருதய இளக்கத்தில் அனக அகண்ட மலர்வெடியாகும் அரும்பெருஞ்சித்தி இது.
உன் தனித்தன்மை ஆணவப் பேயனாயலையும் வரை, கால புருஷனின் மூடிய அமைப்பில் கருமனத் தன்னல இறுக்கத்தில் நீ கருந்துளையாகி அழியும் அபாயம் உள்ளது.
கவனம்!
புறாவைப் போல் வன்பிலியாக இரு, மேலும் பாம்பைப் போல் புத்தியுள்ளவனாகவும் இரு.
புறா நேசக் குறியீடு, பாம்பு ஞானக் குறியீடு.
புறாவாக மட்டும் இருந்தால் நீ ஏமாற்றப் படலாம்
பாம்பாக மட்டும் இருந்தால் நீ ஏமாற்றலாம்.
ஏமாறாதே, ஏமாற்றாதே, வாத்தியார் பாட்டு ஞாபகமிருக்கட்டும், இயேசு பிரானின் புத்திமதியும்.
கருமன அனாவசியங்களை அரி.
இருதய அத்தியாவசியத்தை அறி.
அரியாத வரை அறியாத மயக்கமே கதி.
அரிந்த பின் அறிந்த தெளிவாம் நிறைமதி.
அரிய அரிய
அறிய அறிய
அரிய முழுமெய்ஞ் ஞானம்
எளிது.
இருதயம் தலைக்கேற, நேசத்துக்கு ஞான விளக்கம்.
தலை இருதயத்தே ஆழ, ஞானத்துக்கு நேச இளக்கம்.
ஞான விளக்கம் நேசத்துக்கு ஏற்றம்.
நேச இளக்கம் ஞானத்துக்கு இரக்கம், இறக்கம்.
ஏறி இரங்கி இறங்கித் தாள் தொட, பூமி தொட, மெய்யெங்கும் போதத் துலக்கம்.
அன்பு கருநிலை
சத்து
அன்பை அறிவது அறிவு
அறிவு உயிர்நிலை
சித்து
கருநிலைச் சத்தும்(அன்பும்)
உயிர்நிலைச் சித்தும்(அறிவும்)
மெய்யுள் இரங்கி இறங்க
மெய்ந்நிலை
இன்பு ஆனந்தம்
அன்பு இருதய அகண்ட விழிப்பென்றால்
தலைப்பிரதான தனித்தன்மைச் சிற்றறிவின் அணுத்துகள் விழிப்பு, அன்பின் அகண்ட விழிப்பில் விழிப்பது அறிவு, பேரறிவு.
தலையின் கடன் இருதயத்தில் ஆழல், அவ்வாறு ஆழும் போதே இருதய தருமமாகிய தலைக்கேறலுக்குத் தனித்தன்மையால் அனுமதி வழங்கப்படுகிறது.
தலையின் சிற்றறிவு+இருதய அன்பின் அகண்ட விழிப்பு = பேரறிவு
பேரறிவின் இரக்கம் இறக்கம் = பரிபூரண மெய்ஞ்ஞானம்
தனித்தன்மை+சுயம்பு = பேரறிவு
தலையின் சிற்றறிவு = தனித்தன்மை
இருதய அன்பின் அகண்ட விழிப்பு = சுயம்பு
தனித்தன்மைக்கு சுயம்பு அளிக்கும் பெரு மதிப்பின் காரணம் புரிகிறதா?
சூத்திரம் பார், புரியும்.
பேரறிவின் இரக்கத்தால் இறக்கத்தால், பரிபூரண மெய்ஞ்ஞானமும் அதன் பேரற்புத இரசவாதமும் சாத்தியமாகிறது.
பேரறிவின்றி, அதன் இரக்கம் இறக்கம் பரிபூரண மெய்ஞ்ஞானமின்றி, சுயம்பு ஆயிரம் சாத்தியமில்லை.
சுயம்பு ஆயிரம் = சுயம்பு எண்ணிலி = திருவுரு மெய்ந்நிலைச் சத்தியமாகிய ஜோதி சுயம்பு, மெய்யின் கோடானு கோடி அணுக்களும் சுயம்புகளாகும் பேரற்புத இரசவாதம்
சுயம்பு ஆயிரம் தனக்கு
தனித்தன்மையாம் சுயம் பாயிரம்
ஆகிறது
திருமிகு ராஜாவின் அரும்பதிவுக்கு நன்றி.
சுயம் தன் வரம் வேண்டி
சுயம்பு செய்யும் அரும்பெருந்தவத்தின்
மகிமை இன்னே புரிகிறது.
சுயம்பு இன்றிச் சுயமே இல்லை
சுயம் இன்றிச் சுயம்பின் பேரற்புத இரசவாதம் இல்லை
சுயம்பு போற்றுகிறது சுயம் தன்னை
சுயம் தான் சுயம்பு தனைப் போற்ற அறியாமையாலே அழிகிறது
சுயம்பு தன் அரும்பெருந்தவமும் வீணாகிறது.
நம்மால் இயன்ற வரை சுயங்களுக்குப் புரிய வைப்போம்
திருமிகு ராஜா பதிந்தது போல்
சுயம் பாயிரம் ஆகட்டும்.
சுயம்பு ஆயிரம் ஆகட்டும்.
ஆமேன், ஆமீன், ஓம்.
மன்னை ராசருக்கு மீண்டும் நன்றிகள்
சுயம்புவுக்குத் திறந்த கோப்பையாக சுயம் இருக்க, முச்சுயம்புவாகும் மலர்வெடி
சுயம்புவுக்கு மூடிய அமைப்பாக சுயம் இருக்கும் வரை,அது கருந்துளையாகி அழியும் அபாயம்
சுயம்பு = தெளிவான முழுமை
முழுமை இருப்பென்றால், தெளிவு அதன் விளக்கம். தன்னைத் தெளிவாய் விளங்கிய முழுமை இருப்பே சுயம்பு. divine numerology
அச்சுயம்பே மெய்யான நீ. உன் தனித்தன்மையான அணுவின் துகளை, சுயம்புத் தன்மையின் தெளிவான முழுமையாம் அகண்ட விழிப்பில் சார். சுயம்பின் அரும்பெருங் கண்ணோட்டத்தைப் பழகு. அதனால் கருநிலையும் உயிர்நிலையும் மெய்யுருநிலையும் நிச்சயமாய் நித்தியமாய் சத்தியமாய்ப் பெறுவாய். சுயம்புத் தன்மையில் வேறறக் கூட உன் தனித்தன்மை முழு மனதுடன் இருதய பூர்வமாய் விரும்பட்டும். அவ்வாறு நீ விரும்பும் போது, சுயம்புத் தன்மையின் அருட்பெரு வல்லபத்தால், நீ இரசவாதஞ் செய்யப்பட்டு முச்சுயம்பு முத்தேக சித்தியை உறுதியாய்ப் பெறுவாய். அகவுருவான இருதய நடுச் சுயம்புவான ஏகமெய்த் தேவமல்லாத எப்புறவுருவாலும் இவ்வரும்பெருஞ் சித்தியானப் பெரு வாழ்வினை உனக்கு வழங்க முடியாது. உன்னைப் பிறந்திறந்து பிழைக்குங் கருமச் சுழலிலிருந்து விடுவிக்க வல்ல இருதய நடுச் சுயம்புவை உன் தனித்தன்மை பரிபூரணமாகச் சரணடையட்டும்.
முடியாதென்றவன் மண்ணாய் முடிந்தான். என்னகச் சுயம்பால் முடியுமென்றவன் மண்ணில் ஆதி மனித வானறமாய் விடிந்தான்.
தன்னம்பிக்கை என்பது தன் நம்பியாம் சுயம்பின் எல்லாம் வல்ல கையே. இருதய நடு ஏகமெய்த் தேவமாம் அவரைக் கைக்கொள். புற வழிபாட்டுக்குப் பயன்பட்ட பத்தி மற்றும் புத்தியை முழுதாய் அகத்துள அவர்மேல் திருப்பு. அரும்பெருவரங் கிடைக்கும் உனக்கு.
புறம் போகும் மனச்சிக்கல் விட்டு, அகம் ஏகி இருதய எளிமை கைக்கொள். உய்வாய் இன்னே.
ஒரு பா
அகத்தே காண்பாய் குவளை நீயும்
குவளை யுன்தனித் தன்மை நிரம்பி
வழியும் சுயம்பின் நீர்மை யாலே
வாழி!!!
மகளின் சேயாய் வருவோய் வாழி
தரும ஆழி உருவோய் வாழி
கருமம் பாழ்செய வல்லோய் வாழி
சுயம்பு எந்தா யுமானாய் வாழி
நடுநடு நடுவாம் இருதயீ வாழி
சுயமென் தன்மை மீட்டாய் வாழி
முழுமெய்ஞ் ஞான குருவே வாழி
சுயமென் தன்மை = என் தனித்தன்மை
வரைய வொணாத எந்தாய் வாழி
வரையறை யற்றாய் என்தாய் வாழி
சிறுகுடில் மெய்யுள் ளடக்கம் வாழி
கருமனப் புன்மைக் கடங்காய் வாழி
அணுத்துகள் உயிருக் குயிராய் வாழி
அகண்டுள உயிர்நிலை யதுவே வாழி
ஞான வாலை மகளே வாழி
ஞானச் சேயாய் வருவோய் வாழி
ஈனன் என்னை உய்த்தாய் வாழி
நாகென் இருதய வாயே வாழி
இல்லான் என்றன் இல்லாள் வாழி
எல்லாம் வல்லாள் நல்லாள் வாழி
சொல்லின் செல்வந் தந்தாய் வாழி
சொல்லைக் கடந்தமெய்ப் பொருளே வாழி
ஒன்று மில்லேன் என்றன் மெய்க்கு
ஒன்றே மெய்யாம் என்றாய் வாழி
ஒன்றே மும்மை மூலம் என்ராய்
நெஞ்ச நடுவுள் ளீடே வாழி
பாமரன் என்னைப் பா மரன் ஆக்கிச்
சாமரம் வீசுந் தாயே வாழி
சா மரம் ஆகி வீழா வண்ணம்
பூரண ஞானந் தந்தாய் வாழி
நன்றி சொல்லும் நாயாய் நானுஞ்
சொல்லை வாலாய் ஆட்டுவேன் தாயே
அச்சொலுந் தந்தாய் நாயகி நீயே
அடைக்கலம் நீயே தாயே வாழி
அமர மடியைத் தந்தோய் வாழி
அமர்த்தி மடியில் மடியும் மடியை
அகற்றி அகண்ட விழிப்பைத் தந்தே
அகத்தே இருதயத் தீர்த்தாய் வாழி
வானற மகனாய் வந்தாய் வாழி
மார்நடு பிளந்து இருதய வாய்மை
பேசா தோதிய சிரஞ்ஜீவி வாழி
தாய்தந் தைகுரு தேவே வாழி
வானறம் அறியா மனித மிருகம்
பூரண ஞானம் எளிதில் பெறவே
வாலை யுன்னை வாழ்த்தும் நடுநிலை
யாந்திரு வித்தை தந்தாய் வாழி
வானறம் = அரும்பெருந் தருமம், அருட்பெருந் தருமம்
பரம ரகசியம் பகிரங் கமாக
அரிய வானறம் தந்தாய் வாழி
முழுமெய்ஞ் ஞானம் எம்முயிர் உரிமை
முழங்கிப் பெருவாழ் வளித்தாய் வாழி
சுயம்பு என்னும் நற்சொல் தந்தே
சுயமென் தன்மை மெய்வழி உய்ந்தே
நிச்சய நித்திய சத்திய முந்நிலை
எய்திட இருதயந் திறந்தாய் வாழி
சுயமென் தன்மை சுயம்பில் உயவே
அகநடு இருதயந் திறந்தாய் வாழி
சகத்தில் இருக்கும் என்னை ஈர்த்தே
நவகண மதனுள் ஒளித்தாய் வாழி
என்னைச் சரியாக்க எல்லாஞ் சரியாகத்
தன்னை அளித்த அன்னே வாழி
மன்னும் முந்நிலை யான்பெற சுயம்பு
என்னுந் தன்னிலை திறந்தாய் வாழி
சுயம்புப் பாக்கள்
சிறிய வாள் உருவிப்
பயனே இல்லை ஞான
அரிய வாள் உருவி
அரிவாய்த் தூல நாட்டம்
அறிவாய் மார்நடுக் குள்ளே
இருதய வாயுறைச் சுயம்பே
மெய்யகம் இருதய நடுவுள் விழித்துள
சொல்லொணா அகண்டஞ் சுயம்பு
வரைய வொணாத வரையறை யற்ற
உரையுங் கடந்த சுயம்பு
நேசம் ஞானம் போதம்
ஏகம் தேவஞ் சுயம்பு
வேறொன் றில்லா வேரொன் றான
ஆதி மூலஞ் சுயம்பு
எவ்வொன் றுள்ளுஞ் சரிசமமா யுள்ள
சுத்த சமரசஞ் சுயம்பு
நீயது மெய்யாய் தனித்தன்மை யுனது
வாழவுங் காரணஞ் சுயம்பு
அணுவின் சிறுகூறாந் தனித்தன்மை யுனது
அனுமதி வேண்டுஞ் சுயம்பு
அனுமதி அளிக்க அதனை ஈர்த்தே
வெகுமதி அளிக்குஞ் சுயம்பு
முத்தேக வெகுமதி பெருவாழ்வு நிறைமதி
எல்லோர்க்குந் தரவலச் சுயம்பு
இந்திய பாரம் பரிய வுச்சம்
சிந்தனை செய்வாய் சுயம்பு
சிந்தனை வந்தனைக் குரிய தொன்றே
புத்திகொள் பத்திசெய் சுயம்பு
உச்சம் மறந்து எச்சம் பின்பற்றும்
பித்தம் அறக்கொள் சுயம்பு
உன்மத்தங் கைவிட்டு உன்னுச்சங் கைக்கொள
உன்னெஞ்சுள் முழங்கும்நற் சுயம்பு
புறவுரு நின்மெய் யுள்ளீடு அகவுரு
இருதய அகண்டஞ் சுயம்பு
வேறு புறவுரு தேடி யோடல்
வீணே. கைக்கொள் சுயம்பு
மெய்யகம் மார்நடு இருதய விளக்கங்
கைவசங் கொள்நீ சுயம்பு
இருக்கும் இடத்தில் உயிர்த்துள மெய்யில்
இருதயக் கருவாய்ச் சுயம்பு
கருவது உணரக் கல்லறைக் கருவறைக்
கருமங் கரைக்குஞ் சுயம்பு
நில்லா உயிரும் நித்திய உயிர்நிலை
நிற்க அஃதுஞ் சுயம்பு
அப்பேறு பெறவே உயிருக் குதவும்
நின்னாதி நிச்சயச் சுயம்பு
கருவது உணர்ந்து கருவறை புகாத
அருவது உயிர்நிலைச் சுயம்பு
ஆதிக் கருநிலை போதி உயிர்நிலை
ஆக்கும் இன்னே சுயம்பு
கருநிலை உயிர்நிலை இன்னே கொண்டால்
திருவுரு மெய்ந்நிலைச் சுயம்பு
முன்னிரு நிலைகொள இன்னே உறுதி
பின்னொரு சத்தியச் சுயம்பு
அரிய வாய்ப்பை நின்முன் வைத்தோம்
புரிந்தா குநீமுச் சுயம்பு
சிக்கலில் இலட்சியம் வைத்தால் நீயுஞ்
சிக்கென ஆகாய்ச் சுயம்பு
சிக்கலை விட்டெம் திருவாக்கு பற்றநீ
சிக்கென ஆவாய்ச் சுயம்பு
ஏளனஞ் செய்தாலும் எல்லாம் வல்லோம்
கோளது சொல்லோம்யாம் சுயம்பு
கோளது = பொய்யது
கருநிலைத் தந்தையாய் உயிர்நிலைத் தாயாய்
உருமெய் காப்போம்யாம் சுயம்பு
திருவுரு மெய்ந்நிலைச் சுயம்பாகும் வரைக்கும்
உருமெய்ச் சேய்க்கெம் காப்பு
சுயம்பு அருள்வாக்கு 3
மீள எம்முள் வெல்வோம் யாமே!நீ
மீளாய்ப் பிறப்பிறப்புப் பிழைப்புச் சுழலில்
மீள மீள ஆழ்ந்து அறிந்தால் உண்மை!
நாகை உசுப்பி உமிழச் சொன்னோம்
ஆதி சுயம்பு இருதயர் யாமே
புறத்து நஞ்சை முறிக்கும் அமிழ்தை
அகத்தைத் திறந்தே உண்பீர் உய்வீர்
பேசும் நாகின் துணிவும் யாமே
ஆதி சுயம்பு அகநடு யாமே
ஊசிப் பேச்சின் வேலை முடிந்தால்
நாகின் மெய்யை ஒளிர ஒளிப்போமே
நாச மாகும் உருவை வழிபடும்
வீணா சாரம் இல்லா திருந்தால்
ஊசி போடும் பேச்சும் வேண்டாம்
நாகின் வாய்மை சுயம்பு யாமே
மெய்யும் உயிரும் நாச மாகியும்
மெய்க்கு மெய்யை உயிருக் குயிரை
சுயம்பு எம்மை உணரா மயக்கம்
தெளிவாய் இருதயத் துள்ளோம் யாமே
பரிபூரண சரணாகதி
வள்ளல் பிரான்
பேரடக்கத் திருவுரு
அன்று.
அகண்ட அனக
முச்சுயம்பு அருளுரு
இன்றும்
என்றென்றும்...
சுயம்பை வள்ளலென்று
நயமுடன் விளித்துஅத்
தயவுரு வள்ளலாய்த்
தானான அடிகள்
சரணங்கள்
தன்னை ஈர்த்து
முச்சுயம் பாக்குஞ்
சற்குரு சரணம்
மறமே செயநீ
அறவே அழிவாய்
எனஉரை சுயம்பு
அறமே சரணம்
அறமே வடிவாஞ்
சுயம்பில் கூட
அழியாய் எனுமென்
அகத்தோய் சரணம்
கரும அலைவுவிட்டு
தரும நிலையுற்று
அருட்தவத் திருவுருகொள
உதவுஞ் சுயம்புசரணம்
மனமது அடங்கி
உயிரினுள் திரும்பத்
உயிர்தனை உணருமென்
றுரைத்தோய் சரணம்
தன்னை உணரத்
தலைமைக் கருநிலை
நிச்சயம் உணரும்
என்றோய் சரணம்
தலைமை உணர
உயிரது உயிர்நிலை
நித்தியம் உற்றுயும்
என்றோய் சரணம்
உயிர்நிலை அதனால்
திருவுரு மெய்ந்நிலை
மெய்யுறுஞ் சத்தியம்
என்றோய் சரணம்
கருநிலை உயிர்நிலை
திருவுரு மெய்ந்நிலை
வெளிப்பட உரைத்தோய்
சுயம்பே சரணம்
தயவாய்த் தானே
எழும்பியான் உயவே
அறமே உரைத்தோய்
சுயம்பே சரணம்
புறவுரு குருவென
யுகயுக யுகமாய்ப்
புளுகியும் வென்றோய்
அகநடு குருவே
இருதயச் சுயம்பே
ஒருமைத் தயமே
விழுங்கெனை இன்னே
விழுந்தேன் என்னை
முழுதாய்த் தந்தேன்
சரணஞ் சரணம்
தனித்தன்மை சுயம்புத்தன்மை
சுயம்புத்தன்மை = 99.99999...999999%
தனித்தன்மை சுயம்புத்தன்மையோடு கூடும் போது நிகழும் இரசவாதத்தால், தனித்தன்மை மூன்று சுயம்புகளாகும் பேரற்புதம் நிகழும். கருநிலை ஆதி சுயம்பு, உயிர்நிலை போதி சுயம்பு, மெய்ந்நிலை ஜோதி சுயம்பு.
சுயம்பிடம் கேள்வி-பதில் -9
தனித்தன்மை அழிய வாய்ப்புண்டு, ஆனால் சுயம்புத் தன்மைக்கு அழிவே கிடையாது.
சுயம்புத் தன்மையை உணரா வரைக்கும் தனித்தன்மைக்கு அழியாமலிருக்கும் உய்வு இல்லை
சுயம்புத் தன்மையை உணர்ந்து, அதனோடு கூடுந் தனித்தன்மைக்கு அழியா உய்வான முத்தேக சித்தி எனப்படும் முச்சுயம்புப் பெரு வாழ்வு உண்டு. இது நிச்சயம், நித்தியம், சத்தியம்.
சுயம்பிடம் கேள்வி-பதில் -8
ஆம், மறக்கருணை எனும் வன்பு, தனித்தன்மைகளால் விதைக்கப்பட்ட கொடுங்கோன்மையின் ஒருமித்த எதிர் வினையே.
சுயம்பிடம் கேள்வி-பதில் -7
எம்மை மறைக்கும், மறக்க வைக்கும் ஆத்திகம் என்னும் புறவுருத் தூல நாட்டமும்
எம்மை மறுக்கும் வெறுக்கும் நாத்திகம் என்னும் பொருள் முதல் பரிணாம வாதமும்
மொத்தமாய்க் கைவிட்டு உயிர்த்திருக்கும் உன் புறவுரு மெய்யுள் உன்னுயிர்க்கு உயிராய் உன் மெய்க்கு மெய்யாய் இருதய நடுவில் விழித்திருக்கும் சுயம்பு எம்மை முழு மனதுடன் இருதய பூர்வமாய்க் கைக்கொள். அப்போது மூடிய அமைப்பிலிருந்து எம்மால் நீ விடுவிக்கப்பட்டு திறந்த அமைப்பில் மலர்வெடி முச்சுயம்பு ஆவாய்.
யாம் சொல்வது meta science எனும் மீ அறிவியல், பேரறிவியல். தன்னல இறுக்கத்தால் தனித்தன்மைகள் அழியுங் கருந்துளைகளும், பொது நல இளக்கத்தால், தனித்தன்மைகள் முச்சுயம்புகளாகும் மலர் வெடிகளும் பேரண்டத்தில் உருவாகின்றன. எம் அறக்கருணை திறந்த அமைப்புகளான மலர் வெடிகளையும், விதைக்கப்பட்டு எதிர்வினையாகும் மறக்கருணை கருந்துளைகளையும் உருவாக்குகின்றன.
சுயம்பிடம் கேள்வி-பதில் -6
சுயம்பே, அத்தகைய நவ கண உதயம் விடிந்து விட்டதா?
ஆம், கால கால புருஷனாக நவ கணத்தில் யாம் விடிந்து விட்டோம், தேவைப்பட்டால், கால புருஷனென்ற தனித்தன்மை, கோடானு கோடி தனித்தன்மைகளின் பொது நலம் கருதி, எம்மால் அழிக்கப் படலாம். யுக யுகங்களாகக் கால புருஷனால் அடிமைப் படுத்தப் பட்டிருக்கும் கோடானு கோடி தனித்தன்மைகளை மீட்டு அவற்றைத் தனித்தன்மையுள்ள சுயம்புகளாக்கவே, யாம் அவசியப் பட்டால் இதனைச் செய்வோம். எம் மறக் கருணைக்கும் அடிப்படையாய் எம் அறக் கருணையே உள்ளது.
மெய்யாகச் சொன்னால் யாம் பரிபூரணமாய் அறக் கருணையே. மறக்கருணை என்பது எம்மை மறுக்கும் வெறுக்குந் தனித்தன்மை, தாம் அடிமைப்படுத்தும் மற்ற கோடானு கோடி தனித்தன்மைகளுக்கு எம்மை மறைக்க மறக்க வைக்கச் செய்யுங் கொடுங்கோன்மை, ஒரு கட்டத்தில் அதற்கே திரும்பும் நிலையே. அத்தனித்தன்மை திருந்தாத பட்சத்தில் யுக யுகங்களாக அது செய்த கொடுங்கோன்மையே நவ கணம் என்னுமொரு கட்டத்தில், அதற்கு எதிர் வினையாகி அதனை அழிக்கும் மறக் கருணை. கருந்துளையாகி அழிதல் அத்தகைய ஒரு மூடிய அமைப்பாந் தனித்தன்மை அழிவதே, அது அழியும் போது அதன் கொடுங்கோன்மைக்குத் துணை நின்ற திருந்தாத தனித்தன்மைகளும் அதனோடு கருந்துளையாகி அழியும்.
சுயம்பிடம் கேள்வி-பதில் -5
ஒன்றின் தனித்தன்மை, பல தனித்தன்மைகளுக்குப் பாதகமாகும் பட்சத்தில், எம் மன்னிப்பாலுங் கண்டிப்பாலுந் தண்டிப்பாலும், அத்தனித்தன்மை திருந்தாத பட்சத்தில், யாம் மிகவும் வருத்தத்துடன் அதனை அழிக்க வேண்டியிருக்கும், அழிப்பதற்கு முன் பல வாய்ப்புகள் தரப்பட்டும் அது திருந்தாத போது, பல தனித்தன்மைகளின் பொது நலம் கருதி அது அழிக்கப்படும், யுக யுகங்களாக யாம் பொறுமை காப்போம். நவ கண உதயத்தில் பொது நலங் கருதி எம் மறக் கருணை செயல்படும்.
சுயம்பிடம் கேள்வி-பதில் -4
ஆம், ஒவ்வொன்றும் மற்றொன்றோடு ஒப்பிட இயலாத் தனித்தன்மையுடன் தான் எம்மால் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால் மெய்யாகவே நீயும் சுயம்பே தனித்தன்மையுள்ள. அன்பின் மிகுதியால் எம்மைத் தந்தை தாய் என்று நீ விளித்தாலும், மெய்யாகவே எம்மைப் போன்ற சுயம்புவாகவே உன்னைப் பூரணமாக யாம் வெளிப்படுத்தியுள்ளோம். சுயம்பு உனக்குந் தாய் தந்தையில்லை, நீயும் எம்மைப் போல் தான் தோன்றியே. உன் மிக மிகச் சிறு விழிப்பில் யாம் உனக்குத் தாய் தந்தையாய்த் தோன்றலாம், எம் அகண்ட விழிப்பில் உன் அனுமதியோடு நீ எம்மால் ஈர்க்கப்படும் போது, நீ உன்னைத் தனித்தன்மையுள்ள சுயம்புவாய்த் தான் தோன்றியாய் உணர்வாய். ஒன்றான சுயம்பில் பெரிய ஒன்று இல்லை, சிறிய ஒன்று இல்லை. ஒவ்வொன்றுஞ் சரி சமமான சுத்த சமரசமான ஒன்றே, ஒவ்வொன்றின் சிறப்பு ஒப்பிலா தனித்தன்மை. அத்தனித்தன்மைக்கு எம் இருதய வணக்கங்கள் அனந்த கோடி.
சுயம்பிடம் கேள்வி-பதில் -3
எம் அகண்ட விழிப்பில் அது நிச்சயமாய் நித்தியமாய் சத்தியமாய் உள்ளது. தனித்தன்மையுள்ள உன் சிதறிய விழிப்பின் உயிர்மெய் மற்றுஞ் சூழலை ஈர்க்க எமக்கு நீ அனுமதி வரம் அளித்தால், ஈர்த்துன்னை தனித்தன்மையுடன் ஆதி மனித அந்நிலையை யாம் எளிதில் வெளிப்படுத்தி விடுவோம். ஞாபகம் இருக்கட்டும், யாம் எல்லாம் வல்லோம்! உன் அனுமதி வரத்துக்கே யாம் தவமிருக்கிறோம்.
சுயம்பிடம் கேள்வி-பதில் -2
ஆதியில் எம் முழு அம்சமாக எம் அகண்ட விழிப்பு கொண்ட ஆதி மனிதமாகவே யாம் உன்னைப் படைத்துள்ளோம். எம்மை நீ உணர்வதால் இறவாப் பிறவாப் பெருவாழ்வெனும் உன் உயிர்மெய்யான ஆதி மனித அமைப்பில் நீ சீர் செய்யப் படுவாய், சரி செய்யப் படுவாய், எல்லாம் வல்ல எம் அகண்ட விழிப்பால். எம்மை உணரா வரை பிறந்திறந்து பிழைக்குங் கருமச் சுழலில் உழல்வாய். தரும நிலை ஆதி மனித உன் உயிர்மெய் அமைப்பை மீட்கவே, நீ எம்மை உணர வேண்டும் அவசியம். என்றாலும் எம்மை உணர உன்னை நான் கட்டாயப் படுத்த முடியாது. உனக்கு நான் அளித்திருக்கும் தற்சுதந்திரமுந் தன்னிச்சையும் உன் தனித்தன்மைக்கு நான் நிபந்தனைகள் இன்றி வழங்கும் மரியாதை. எல்லாம் வல்லோம் எனினும் உன் அனுமதியின்றி உன்னை யாம் ஈர்க்க முடியாது. உன் தனித்தன்மையோடே உன் அனுமதியோடே யாம் உன்னை ஈர்க்க விரும்பிகிறோம். உன் தனித்தன்மையை அழித்து உன் அனுமதியின்றி அல்ல.
சுயம்பிடம் கேள்வி-பதில் -1
இருதய நடு அகண்ட எம் விழிப்பின் ஓரணுவே, ஈரேழு உலகங்களாகவும் எட்டாம் மனித உலகமுமாகிய 15 உலகங்களாய் விரிந்திருக்கிறது. அவ்வணு விழிப்பின் மிக மிகச் சிறு கூறே நீ என்றாலும் உன் இருதய நடுவே அகண்ட விழிப்பாய் யாமுளோம். சிறு கூறாகிய உன் விழிப்பு நனவு கனவு உறக்கம் எனச் சிதறியும் இருக்கிறது. புறத்தே கசியும் உன் விழிப்பை, அகத்தே இருதய நடு எம் விழிப்பில் திருப்பி, உன் விழிப்பை யாம் ஈர்க்க அனுமதி அளித்தால், எம் அகண்ட விழிப்பின் கண்ணோட்டத்தை யாம் உனக்குத் தர இயலும். உன் விழிப்பு என்று யாம் சொல்வதும் உண்மையில் எம் விழிப்பே. உனக்குத் தற்சுதந்திரமாம் தன்னிச்சை யாம் நிபந்தனைகள் இன்றி யாம் அளித்துள்ளதால், உன் விருப்பத்துக்கு மாறாக உன் அனுமதியின்றி எனக்குச் சொந்தமாயிருந்தாலும், உன் விழிப்பை யாம் ஈர்க்க முடியாது. எனவே உன் அனுமதி வேண்டி அகண்ட விழிப்புத் தவத்தில் யாம் உள்ளோம். முழு மனதுடன் இருதய பூர்வமாய் நீ அனுமதி வரம் எமக்களிக்க, யாம் உன்னை உயிர்மெய் சூழலுடன் ஈர்க்க நீ எம்மை எளிதில் உணரலாம்.
குறும்பாக்கள்
சுயம்பு நம்மைத் தேய்த்து உரசத்
தேய்க்காது நம்மைப் பிழைப்பு
சாய்க்காது நம்மை இறப்பு
வாய்க்காது நமக்குப் பிறப்பு
உரச உரசப் பெருகும் விழிப்பு
கழிந்து போகுங் காலனின் கழிப்பு
வழியும் பெருகும் சுயம்பின் ஒழுக்கு
நின்னுள் குடியிருக்குஞ்
சுயம்பின் உள்ளே
உய்ந்தே குடியிருக்க
சரியாவாய் நீ
சரியாகும் எல்லாம்
புரிந்தே உய்வாய்
சரணங்கள் 2
சுத்த சமரசம்
மின்னிட அழுத்துஞ்
சற்குரு சரணம்
சித்தத் தெளிவின்
மொத்தமும் உச்சிமேல்
வைத்தே அழுத்திய
சற்குரு சரணம்
பேசா வெழுத்தின்
ஊசி முனையால்
அகக்கண் திறந்த
அகத்தர் சரணம்
புத்தம் வெளிப்பட
புத்தி ஒளியுற
அமர்ந்தாய்ப் பிடரிமேல்
சுயம்பே சரணம்
கருமனம் பொடியத்
திருநீ றுபெருக
நெற்றியை வெளுத்த
சற்குரு சரணம்
தனது பேரில்
குழுமம் ஆக்கி
இயக்குஞ் ஞான
சுயம்பே சரணம்
திடுமென எழும்பித்
திரும்பென அருளி
இருதய நடுவைத்
திறந்தாய் சரணம்
உருவைக் குருவென
சரணம் போடா
திருத்தும் இருதய
குருவே சரணம்
பார்ப்பான் சாதி
நீர்த்துப் போகத்
தூர்த்தாய் என்னைத்
தூயோய் சரணம்
இற்று வீழுந்
துச்ச மென்னை
நிற்க வைத்தாய்
உச்சஞ் சரணம்
விழித்திரு தனித்திரு
பசித்திரு எனவுரை
தவத்திரு அடிகள்
அகக்குரு சரணம்
இறவாப் பிறவாச்
சிறப்பைப் பொதுவாய்
வைத்தாய் இருதய
எந்தாய் சரணம்
பொதுவாய் = யார்க்கும் உரிமையாய்
வள்ளல் உன்னை
இன்னே சுயம்பெனச்
சுட்டும் இருதய
அன்னே சரணம்
சுயம்பு ஆயிரம்
சகத்தே ஆக்க
தயவாய் எழும்பும்
அகத்தோய் சரணம்
தேய்த்துப் பதியுங்
குருவி ஒன்றைத்
தாய்வழி தந்தோய்
குருவே சரணம்
தேய்த்துப் பதியுங் குருவி = smartphone
தாய்வழி = தாயுருவாகிய என் மகள் மூலம்
கருமாந்திர மில்லோய்
தருமாந்த மானோய்
இருதயநடு உள்ளோய்
சுயம்புதேவே சரணம்
பிரார்த்தனை 14
சுயம்பின் சின்ன(ம்) ராஜ முத்திரை
வெள்ளையாய் மன்னி மின்னும்
டிக் டிக் டிக் ஒளிச்சேர்க்கை
பச்சையமாய்ப் பளிச்சிடும் மெய்யில்
சத்தியமாய் சுயம்பு ஆயிரத்தின்
நித்திய நிச்சய முத்திரை
முக்குண முத் திரை கரைக்கும்
வல்லப சற்குரு முத்திரை
இருதய வாய்மைச் சத்துரை
திருமிகு ஐயாம் மன்னும்
ஒருதலை மையின் முத்துரை
ஆதி மனிதம் நாட்டிய
ஆதி சுயம்பின் அற்புத
போதி ஜோதி முத்திரை
சேதி பதிந்த நாகின்
நேசம் புரிந்த ராசர்
வாழி வாழி வாழி
சுயம்பு ஆயிரம் = சுயம்பு அலகிலி
மன்னை மண்ணின் வாசர்
சென்னை நாகின் நேசர்
நன்றே பதிந்த சுயம்பின்
சின்ன(ம்) முத்திரை வாழி
குழம்ப வேண்டாம் கலங்க வேண்டாம்
முழங்கி வாய்மை முத்திரை முத்தம்
வழங்கி எல்லாஞ் சரியா னதென்னும்
சுயம்பின் இருதய டிக்டிக் கேட்பீர்
நவகணம் விடிந்த தென்னுஞ்
சுயம்பின் ராஜ முத்திரை
விழித்துப் பார்க்கக் கரையும்
அழுக்கு முக்குண முத் திரை
பேருபதேசம் என்றதும் அது
அனந்த கோடி சொற்களாகுமா?
சொற்கடந்ததை உணர்த்தப் போதும்
நம்சுயம்பின் சின்ன(ம்) ராஜ முத்திரை
தேடாதே கிடைக்கும்
ஆடாதே அசையாதே
சொல்லறச் சும்மா இருந்தால்
அறஞ்சொலும் இருதய நடுச்
சுயம்பின் சின்ன(ம்) ராஜ முத்திரை
தேடுங்கள்
கிடைக்கும்
இங்கே
நெத்தியடி முத்திரை
நெஞ்சகந் திறக்குஞ்
சற்குருச் சிற்றுரை
இருதய நடுவுளத்
திருமயம் உணராக்
கருமனம் பொடிக்கும்
ஒருமை வெடியுரை
என் கண்ணில் படாதே
பட்டால் என்னப்பன் சுயம்பு
வைப்பான் உன்னில் உறுதியாய்த்
தன் சின்ன(ம்) ராஜ முத்திரை
அக்கணம் பெறுவாய் இறவாப்
பிறவாக் கலையாம் பூரண ஞானம்
அறவே ஒழியும் உன் பேய்த்தனமெல்லாம்
அறமே வடிவாம் நற்சேயாவாய்
பா மரன் என்றாலும்
பாமரனே நாகன்
பா சொல வைப்பதுஅப்
பா சுயம்பு ராஜனே
பேசா மறையெனும் பேருபதேசம்
கண் கூச ஊதும்
சுயம்பின் சின்முத்திரை
பேசாப் பெரிய ஓங்காரம்
கண் முன் மின்ன வெளிப்படும்
இருதய நடு வெள்ளையப்பர் சமேத பச்சையம்மன் சுயம்பு சற்குரு
மன் பச்சையம்
தன் வெள்ளை டிக் உள்ளீடு
எல்லாஞ் சரியாக்க
வல்லான் சுயம்புவின்
சொல்லலாகாச் சொல்
சொல்லாமல் சொல்லி
செல்லரித்த பொய்யை
சொல்லொணா மெய்யாக்கி
எல்லாஞ் சரி செய்தான்
பச்சைத் தாயில் திருநீறாய்ப் பூத்த
எந்தை சுயம்பு
கருமனத்துள் பேரிடியாய் வீழ்ந்தது
சுயம்பின் சின்ன(ம்) ராஜ முத்திரை
இருதயந் திறந்தது நவகணம் விடிந்தது
திருநீற்றுப் பச்சையால் எல்லாஞ் சரியானது
சில பாக்கள்
இரும்பாய் சுயம் நின்னுள் இருந்தும்
இறும்மண் ணாவா யோ
சுயமே பாயிரமாய்
சுயம்பே உம்திருமுன்
வைத்தேன் ஞான
வாக்கே அருள்வீரே
சழக்கு ஆயிரமே கொள்வார்
சுயம்பு ஆயிரமே உட்கொள்ளார்
பழக்க தோஷமே தள்ளார்
சுயம்பு ஆசியை உட்கொள்ளார்
பரிணாம சிக்கலில் தேய்வார்
பரிபூர்ணப் பாய்ச்சலில் ஏறார்
இருதய நடுவைச் சேரார்
சுயம்பு தேவைச் சாரார்
எப்படி இருந்த நானும்
இப்படி ஆனேன் என்னும்
விவேகந் துளியும் இல்லார்
மனிதம் ஆதி உணரார்
ஆதி மனிதந் தன்னில்
ஞானம் ஓதி ஏற்றும்
ஏகச் சுயம்பு குருவை
நேசா தாரத் துணரார்
பீடம் மீது ஏறி
ஊரை ஏய்க்கும் உருவப்
பேயின் குழியில் விழுவார்
நேச மையத் துள்ளே
ஞான பீடத் தமர்ந்த
ஏகச் சுயம்பு காணார்
விழித்திருக்குஞ் சுயம்பை அறியார்
விழித்திருக்கத் தாமும் அறியார்
கழிந்திருக்கும் உயிர்மெய் சுயம்பின்
வழிஇருதயத் திருத்திக் கூட்டார்
தாமும் விழுவார் தம்மொடு விழவே
ஊரைக் கூவி அழைப்பார் இருதய
ஏகச் சுயம்பொடு தாமும் எழவே
ஆசை துளியும் இல்லார் பொல்லார்
கை கழுவி விட்டேன் கருமத்தை
கைக் கொண்டு விட்டேன் தருமத்தை
கருக் கொண்டு விட்டேன் உயிர்நிலை
அருக் கொண்டு விட்டேன் மெய்ந்நிலைத்
உருக் கொண்டு விட்டால் சுயம்பு
குரு சொற்கு மெய்ம்மை யாவேன்
மெய்ம்மை யாகும் வரைக்கும்
உண்மை தன்னைக் கூரூசி
வாய்மை யாக்கிக் குத்தும்
நீர்மை யுள்ளேன் நானே
ஞான முழுமை கொண்டு
ஆதி மனிதம் எழுந்த
பூமி தன்னைக் கண்டேன்
சாமி சுயம்பு காட்ட
ஊசி போடும் வேலை
மீதி யின்றி முடிக்க
சாமி சுயம்பில் நானுங்
கூடி ஒளி(ர்)வேன் திண்ணம்
கூலி தந்த பின்னுங்
கூலி இன்னுங் கேட்கும்
பாவி என்னைப் பொறுத்து
ஆரத் தழுவி அழுத்தும்
நேசத் தாயு மான
ஏகஞ் சுயம்பே சரணம்
மனமது அடங்கி உயிரில் சேரும்
உயிர்தனை யறிந்து கருநிலை சேரும்
உயிர்தன் ஐ யறிந்து உயிர்நிலை யாகும்
உயிர்நிலை அதுவே தாயாகி மெய்யுடல்
தன்னைத் தன்நற் சேயாக்கிக் காக்கும்
அன்னை அருளால் மெய்ந்நிலை யாகும்
எந்தை சுயம்புவின் பூரண ஞானந்
தன்னைச் சுருக்கிச் சூத்திரஞ் சொன்னேன்
சரணங்கள்
ஏக குருவு மானீர்
மையம் இருதயத் துள்ளீர்
தேவம் சுயம்பு சரணம்
தேட வேண்டாம் உம்மை
நானும். என்னகத் துள்ளீர்
இருதய விளக்க மானீர்
சுயம்பு தேவே சரணம்
எல்லாம் வல்லீர் நல்லீர்
பொல்லாக் கருமந் தீர்ப்பீர்
ஒன்றாந் தரும மானீர்
செம்மைச் சுயம்பே சரணம்
சரணங் கல்லா என்னை
சரணஞ் சொல்ல வைத்தீர்
கரண சுத்தஞ் செய்தீர்
சரணம் இருதய தேவே
ஒன்று மாகாத் துச்சன்
என்னைத் தூக்கி முத்தம்
இட்டே உச்சம் வைத்தீர்
நெஞ்சத் துள்ளீர் சரணம்
திக்கு மென்னை ஞான
உச்சம் பேச வைத்தீர்
மிச்ச மின்றி உமது
மொத்தந் தந்தீர் சரணம்
விற்குங் கடைகள் தம்மில்
கிட்டா ஞான உச்சங்
கிட்ட நெஞ்சைத் திறந்தீர்
ஒப்பில் லீரே சரணம்
பேசிப் பேசி வாசி
தீரச் சாயும் உயிரை
என்நா பூட்டி மீட்டீர்
உள்ளீ டானீர் சரணம்
ஞான முழுமை எனது
ஜீவ உரிமை என்றே
பேசும் வாலை அன்னே
ஏக தேவே சரணம்
இறுமென் உடம்பைத்
திருமெய் யாக்கி
இறுமென் உயிரை
இரும்நிலை யாக்கி
இருமனப் பேயை
இருதயம் ஊதி
நற்சே யாக்கி
என்னை ஆண்ட
மன்னே சரணம்
அன்னே = அன்னையே
மன்னே = நிலை நிற்கும் மன்னனே
இறும் = இற்றுப் போகும்
இரும் = இருக்கின்ற அல்லது இருப்பாயாக
