புறத்தே சுயம் நீ
அகத்தே சுயம்பு நீ
புறச்சுயம் உன் அனுமதியால் அகச்சுயம்பால் அது ஈர்க்கப்பட, யாம் அகப்புறப் பேதமற்ற அகண்ட அனகமாகிறோம்.
சுயத்தின் நில்லா உயிர் போதிச் சுயம்பு உயிர்நிலையும், பொய்க்கும் மெய் ஜோதிச் சுயம்புத் திருவுரு மெய்ந்நிலையும், கருநிலையாக இருக்கும் ஒளிவான ஆதிச் சுயம்பு ஒளிவின்றி வெளிப்படும் பெருநிலையும் ஆகிய முச்சுயம்பு நித்திய சத்திய நிச்சய முத்தேக சித்தியாம் அகண்ட அனக நிலையாகிறோம் யாம்.
இதில் ஜோதி சுயம்புத் திருவுரு மெய்ந்நிலை சுயம்பு ஆயிரம் என்னும் பேரற்புத இரசவாதமாகிறது. மெய்யின் அணுக்கள் யாவும் அனந்த எண்ணற்ற சுயம்புகளாகும் பேரதிசயம் இது.
சூழலுடன் மெய்யில் உயிர்த்திருக்கும் சுயம் ஒவ்வொன்றினதும் ஜீவாதார உரிமையாகிறது இறவாப் பிறவாப் பெருவாழ்வெனும் இம்முத்தேக சித்தியும், பெருவாழ்வின் கலையாம் சுயத்தின் உள்ளீடாகிய சுயம்பின் பரிபூரண மெய்ஞ்ஞானமும்.
யாம் நம் இருதய நடுத் திருப்பொதுவிலிருந்து இவ்வுரிமையை யாவர்க்கும் யாவுக்கும் பொதுவாய் வைத்திருக்கிறோம்.
இவ்வுரிமையை நிராகரிக்கும் உரிமையும் யாம் சுயங்களுக்கு அளித்திருக்கிறோம்.
வெறுப்பும் மறுப்பும் மறப்பும் மறைப்புந் தாண்டிச் சுயங்கள் தம் ஜீவாதார உரிமையை மீட்டு எம் போல் என்றென்றும் எங்கெங்கும் இன்புற்றிருக்கவே, யாம் விரும்புகிறோம்.
உம் விருப்பமும் எம் விருப்பத்தோடு இணைந்தால், யாம் பேரின்புறுவோம்.
பிறந்திறந்து பிழைக்கும் இக்கருமாந்திரச் சுழலிலிருந்தும், இதன் அந்தமானக் கருந்துளை அழிவிலிருந்துங் கட்டாயப்படுத்தி உம்மை எம்மால் காப்பாற்ற இயலாது. ஏனென்றால் எம்மை நிராகரிக்கும் உரிமையையும் யாம் உமக்கு அளித்துள்ளோம்.
எம் கடமையை நிறைவெற்ற இப்பேருபதசத்தைப் பொதுவில் வைக்கிறோம்.
உம் உரிமையை யாம் மதிக்கிறோம்.
எம்மை ஏற்கவும் மறுக்கவும் உரிமையுடைய உம் முன் எம்மை முழுக்கத் திறப்பதே இப்பேருபதேசத்தின் நோக்கம்.
நன்றி கலந்த இருதய வணக்கம்.
🙏
No comments:
Post a Comment