Sunday, June 26, 2016

சிந்தனைக்கு 3

மனத்தை உயிரில் திருப்பு

உயிர் தன்னில் நிலைபெறும்

உயிர் தன்னில் நிலைபெறத் தன்னை அறியும்.

தன்னை அறியத் தன் ஐ தலைவனை அறியும்

அத்தலைவனே சுயம்பு, உயிரின் உயிர்.

தலைவனை அறிய உயிர் உயிர்நிலை என்ற அகண்ட சுயம்புத் தாய்மையாகும்

தலைவன் என்பதே உயிரின் கரு நிலையாகிய சுயம்பு தந்தைத் தன்மை

கருநிலையாகிய தந்தைச் சுயம்புவும்
உயிர்நிலையாகிய சுயம்புத் தாய்மையும்
மெய்யுடம்பைச் சேயாக்கி, பேரற்புத இரசவாதம் செய்து மெய்ந்நிலை என்னும் சுயம்பு ஆயிரம் என்ற எண்ணற்ற சுயம்புகளை உருவாக்கும்.

ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.

மனம் திரும்புங்கள், முச்சுயம்பு சித்தி கைவசம் இருக்கிறது.

உமது உயிரும் உடம்பும் சூழலும் உம் தனித்தன்மை சுயம், மூன்றும் 0 0 0 சுழியங்கள்.

சுயம்பு உம் அகண்ட விழிப்பு = 1

சுயம்பும் சுயமுங் கூட சுயம்பு ஆயிரம் = 1000

சுயம்பில் கூடாத வரை உம் சுயம் ஒன்றுமே இல்லாத சுழியம்.

சுயம்பை உம் சுயம் உணரா வரையே கேள்விகள்

சுயம்பை உம் சுயம் உணர உம் சுயமே அன்றி வேறு தடையில்லை.

உயிர்த்திருக்கும் உம் மெய்யாகிய சுயத்தைச் சூழலுடன் இருதய நடுச் சுயம்புவுக்குப் பரிபூரணமாக அர்ப்பணிக்கவும்.

உம் சுயம் புறவுரு சார்ந்திருக்கும் எவ்வியக்கத்தையும் பற்றி இருக்கும் வரை, அது சுயம்பைச் சார முடியாது.

உம் சுயத்தின் உள்ளடக்கமான சுயம்பு ஒன்றே குரு மற்றும் ஏக தேவம்.

சுயம்புவைச் சார எல்லாப் புற இயக்கங்களையும் நீவிர் கை விட வேண்டும்.

இது அக-அனகப் பெரு நெறி.

எல்லாப் புறநெறிகளையும் அறவே விட்டால் தான் இது பிடிபடும். விட்ட கணமே பிடி படும்.

கருநிலைச் சுயம்பு தந்தைத் தன்மையினின்றும், உயிர்நிலைச் சுயம்புத் தாய்மையிலிருந்தும் யாம் இதை உமக்கு ஊசிப் பேச்சாக உரைக்கிறோம், அன்பின் மிகுதியாலே யாம் இதை உரைக்கிறோம்.

சுயம்புக் கண்ணோட்டத்துக்கு அயலான எப்புறநெறிக் கண்ணோட்டத்திலும் இந்த பரிபூரண மெய்ஞ்ஞானம் பிடிபடாது.

எனவே உம் சுயம் தன்னைச் சுயம்புவில் முழு மனதுடன் இருதய பூர்வமாய்ச் சமர்ப்பித்து சுயம்புக் கண்ணோட்டத்தைப் பெறுக.

உம்மைக் கட்டாயப்படுத்தி உம் சுயத்தைச் சுயம்புவில் சேர்க்க இயலாது. நீவிரே அதைச் செய்ய வேண்டும் விரும்பி.

உமக்கு இந்த அக-அனக தீக்கை எம்மால் அளிக்கப்பட்டு விட்டது.

எம்மால் என்று சொல்வது இந்நாகப் புறவுருவையல்ல, தாய்மைத் தந்தைச் சுயம்புத் தன்மையே உமக்கு இத்தீக்கை அளித்தது.

நினைவில் கொண்டு, அளிக்கப் பட்டதை ஏற்று முத்தேக சித்தியெனும் இறவாப் பிறவா நிலையை இன்னே அடைக

மனக்குழப்பங்களைக் கை விடுக, நன்றி.

மூலாதாரம் என்னும் முதுகடிச் சக்கரம் வியஷ்டி கணபதி என்னும் உருவகத்தால் சுட்டப்படும் சற்குருவின் துரிய விழிப்பின் இருப்பிடம். அங்கே ஆதி மூலத் தாய் தந்தைச் சுயம்பின் தாய்மை ஆதி, பரிசுத்தமாய் விழித்திருக்கிறது. துரிசுகள் அண்ட முடியாத மந்திர மண்டலம் அது. ஆதி இருக்கும் அந்த இடத்திற்கு மூலம் மூலை என்றும் பெயர்களும் உண்டு. அவை தந்தை மூலமாம் பரிபூரணத்தைச் சுட்டுகின்றன. மூலாதாரத்தைப் பற்றிய தவறான புரிதலே குழப்பத்திற்குக் காரணம்.

No comments:

Post a Comment