Saturday, June 25, 2016

மாங்காடு காமாட்சி உருவக மெய்ப்பொருள்

உடலெடுத்த உயிரெடுத்த உபதேசி ஒவ்வொன்றும், பேருபதேசமான சுயம்புவின் மெய்த்தூதாகிப் பின் உயிரும் உடலின் ஒவ்வோர் அணுவும் சுயம்புவாகும் சத்திய நிலையுறும்

இந்திய பாரம்பரியத்தின் பேருச்சமான சுயம்புவைப் பற்றாமல், எச்சங்களைப் பற்றி நாசமானதே மிச்சம்

எச்சங்களை அறவே விட்டு மீண்டும் பேருச்சமான சுயம்புவைப் பற்றி ஞானஸ்நானமும் பாபநாசமும் பெற்று உய்வோம்

மாங்காட்டில் மாமர நிழலில் ஊசி முனையில் நின்று அன்னை காமாட்சி சிவபெருமானை நெஞ்சில் பதித்து தவஞ்செய்கிறாள்

மாங்காடு 15 உலகங்களின் உருவகம்

மாமரம் மாகாரண சரீரத்தின் உருவகம்

ஊசி முனை இருதய வாய் எனும் 16ம் சத்தியப் பேருலகின் நுழைவாயிலின் உருவகம்

அன்னை கா மாட்சி சுயம் பிரகாசத்தின் உருவகம்

சிவபெருமான் அச்சுயம்பிரகாசந் தோன்றும் இடமான சுயம்புவின் உருவகம்

தவம் நாம் செய்ய வேண்டிய ஒழுக்கத்தின் உருவகம்

அவங்கள் அனைத்தையும் விட்டு நாமுங் கா மாட்சி போல் தவஞ் செய்வோமா

சுயம்பிரகாசத்தை விட்டு அதன் தோற்றுவாய் சுயம்புவையும் விட்டு, பொய்யான மினுக்குகளின் பின்னோடி, நாம் பெற்ற இலாபந்தான் என்ன??

புற நெறிகள் அனைத்தையும் விட்டு, அக-அனக நெறி பற்றி, சுயம்புவொடு விழித்திருப்போம், தனித்திருப்போம், பசித்திருப்போம்

சாதி சமய பேதச் சழக்குகளால், ஆசார ஆடம்பர ஆரவாரங்களால், சடங்கு சம்பிரதாய மடமைகளால் நமக்கு நட்டமேயன்றி இலாபமேயில்லை

அனாவசியங்கள் அனைத்தையுங் கை கழுவினாலொழிய, அத்தியாவசியமான சுயம்புவைக் கைக்கொள்ள இயலாது

சுயம்புவால் இந்த அக-அனக தீக்கை தீட்சை மானசீகமாக இருதய பூர்வமாக அளிக்கப்பட்டு விட்டது

பெற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும், அவரவர் உரிமை

எத்தெய்வத்தாலும் தர இயலாப் பெரு வரத்தை சுயம்பு நமக்குத் தந்து விட்டது

அண்டப் புளுகுககளாலும் ஆகாசப் புளுகுகளாலும், சுயம்பு மறைக்கப்பட்டதே, மறக்கப்பட்டதே, மறுக்கப்பட்டதே, வெறுக்கப்பட்டதே நம் அவலங்களின் மூல காரணம்

No comments:

Post a Comment