சுயம்பே, உம்மை உணர்வதால் எனக்கு என்ன பயன்?
ஆதியில் எம் முழு அம்சமாக எம் அகண்ட விழிப்பு கொண்ட ஆதி மனிதமாகவே யாம் உன்னைப் படைத்துள்ளோம். எம்மை நீ உணர்வதால் இறவாப் பிறவாப் பெருவாழ்வெனும் உன் உயிர்மெய்யான ஆதி மனித அமைப்பில் நீ சீர் செய்யப் படுவாய், சரி செய்யப் படுவாய், எல்லாம் வல்ல எம் அகண்ட விழிப்பால். எம்மை உணரா வரை பிறந்திறந்து பிழைக்குங் கருமச் சுழலில் உழல்வாய். தரும நிலை ஆதி மனித உன் உயிர்மெய் அமைப்பை மீட்கவே, நீ எம்மை உணர வேண்டும் அவசியம். என்றாலும் எம்மை உணர உன்னை நான் கட்டாயப் படுத்த முடியாது. உனக்கு நான் அளித்திருக்கும் தற்சுதந்திரமுந் தன்னிச்சையும் உன் தனித்தன்மைக்கு நான் நிபந்தனைகள் இன்றி வழங்கும் மரியாதை. எல்லாம் வல்லோம் எனினும் உன் அனுமதியின்றி உன்னை யாம் ஈர்க்க முடியாது. உன் தனித்தன்மையோடே உன் அனுமதியோடே யாம் உன்னை ஈர்க்க விரும்பிகிறோம். உன் தனித்தன்மையை அழித்து உன் அனுமதியின்றி அல்ல.
No comments:
Post a Comment