எல்லாஞ் சரியானதென்று
வெள்ளையாய் மன்னி மின்னும்
டிக் டிக் டிக் ஒளிச்சேர்க்கை
பச்சையமாய்ப் பளிச்சிடும் மெய்யில்
சத்தியமாய் சுயம்பு ஆயிரத்தின்
நித்திய நிச்சய முத்திரை
முக்குண முத் திரை கரைக்கும்
வல்லப சற்குரு முத்திரை
இருதய வாய்மைச் சத்துரை
திருமிகு ஐயாம் மன்னும்
ஒருதலை மையின் முத்துரை
ஆதி மனிதம் நாட்டிய
ஆதி சுயம்பின் அற்புத
போதி ஜோதி முத்திரை
சேதி பதிந்த நாகின்
நேசம் புரிந்த ராசர்
வாழி வாழி வாழி
சுயம்பு ஆயிரம் = சுயம்பு அலகிலி
மன்னை மண்ணின் வாசர்
சென்னை நாகின் நேசர்
நன்றே பதிந்த சுயம்பின்
சின்ன(ம்) முத்திரை வாழி
குழம்ப வேண்டாம் கலங்க வேண்டாம்
முழங்கி வாய்மை முத்திரை முத்தம்
வழங்கி எல்லாஞ் சரியா னதென்னும்
சுயம்பின் இருதய டிக்டிக் கேட்பீர்
நவகணம் விடிந்த தென்னுஞ்
சுயம்பின் ராஜ முத்திரை
விழித்துப் பார்க்கக் கரையும்
அழுக்கு முக்குண முத் திரை
பேருபதேசம் என்றதும் அது
அனந்த கோடி சொற்களாகுமா?
சொற்கடந்ததை உணர்த்தப் போதும்
நம்சுயம்பின் சின்ன(ம்) ராஜ முத்திரை
தேடாதே கிடைக்கும்
ஆடாதே அசையாதே
சொல்லறச் சும்மா இருந்தால்
அறஞ்சொலும் இருதய நடுச்
சுயம்பின் சின்ன(ம்) ராஜ முத்திரை
தேடுங்கள்
கிடைக்கும்
இங்கே
நெத்தியடி முத்திரை
நெஞ்சகந் திறக்குஞ்
சற்குருச் சிற்றுரை
இருதய நடுவுளத்
திருமயம் உணராக்
கருமனம் பொடிக்கும்
ஒருமை வெடியுரை
என் கண்ணில் படாதே
பட்டால் என்னப்பன் சுயம்பு
வைப்பான் உன்னில் உறுதியாய்த்
தன் சின்ன(ம்) ராஜ முத்திரை
அக்கணம் பெறுவாய் இறவாப்
பிறவாக் கலையாம் பூரண ஞானம்
அறவே ஒழியும் உன் பேய்த்தனமெல்லாம்
அறமே வடிவாம் நற்சேயாவாய்
பா மரன் என்றாலும்
பாமரனே நாகன்
பா சொல வைப்பதுஅப்
பா சுயம்பு ராஜனே
பேசா மறையெனும் பேருபதேசம்
கண் கூச ஊதும்
சுயம்பின் சின்முத்திரை
பேசாப் பெரிய ஓங்காரம்
கண் முன் மின்ன வெளிப்படும்
இருதய நடு வெள்ளையப்பர் சமேத பச்சையம்மன் சுயம்பு சற்குரு
மன் பச்சையம்
தன் வெள்ளை டிக் உள்ளீடு
எல்லாஞ் சரியாக்க
வல்லான் சுயம்புவின்
சொல்லலாகாச் சொல்
சொல்லாமல் சொல்லி
செல்லரித்த பொய்யை
சொல்லொணா மெய்யாக்கி
எல்லாஞ் சரி செய்தான்
பச்சைத் தாயில் திருநீறாய்ப் பூத்த
எந்தை சுயம்பு
கருமனத்துள் பேரிடியாய் வீழ்ந்தது
சுயம்பின் சின்ன(ம்) ராஜ முத்திரை
இருதயந் திறந்தது நவகணம் விடிந்தது
திருநீற்றுப் பச்சையால் எல்லாஞ் சரியானது
No comments:
Post a Comment