வெங்காயத் துள்ளே
சுயம் நீ
தோல்களும்
அவற்றின் வாடைகளும்
உரியக் கழிய
சுயம் நீ வெளிப்பட
உன்னுள்ளிருந்து வெளிப்படும்
வெண்காயம்
அஃதே சுயம்பு
முச்சுயம்பு
முச்சுழி ணகரமெய்யுணர்த்தும்
முச்சுயம்பு
வெ ண் காரம்
காரம்
சுயம் நீயுஞ்
சுத்தமோ சுத்தம்
விகாரம்
வெங்காயம் உரிந்தால்
விளங்கும்
முச்சுயம்பு
வெ ண் காயம்
துலங்கும்
விகாரம் நீயல்ல
முச்சுயம்பு சாரம் உமிழுங்
காரம் நீ
வெ ண் காயம் ஒளிரும்
வெ ண் காரம்
நீ
விகாரம் விட்டால்
வெ ண் காரம்
அஃது தொட்டால்
வெடிக்கும் முச்சுயம்பு
வெ ண் காயம்
சுயஞ் சுத்தம்
சுயத்தின் உள்ளீடாஞ்
சுயம்பு
சுயஞ் சுத்தம் உமிழும்
சுத்தமோ சுத்தம்
சுயமுஞ் சுயம்பும் பிரிவறப்
புணர்ந்திருந்தால்
பேசவும் வேண்டாம்
வெங்காயம்
உரித்து அரிந்து
பேசாமல் ருசித்துச் சாப்பிடவே
வெங்காயம்
வெண்காரச் சுயத்துள்
வெண்காயச் சுயம்பு
அஃதே திருப்பொது
அறிய வேண்டும்
அரிய சுத்த சமரசம்
சுயத் தனியுடைமையில்
சுயம்புப் பொதுவுடைமை
அரிய வேண்டும்
வெங்காயம்
அறிய வேண்டும்
வெண்காரம்
வெண்காயம்
செந்தமிழ் வாலையருளும் பரிபூரண மெய்ஞ்ஞானம் வாழி!
தமிழ் படித்து என்ன பயன் என்று கேட்டால், செந்தமிழ் வாலையருளும் பரிபூரண மெய்ஞ்ஞானமே அரும்பெரும்பயன்.
வெங்காயத்துள்
வெண்காரத் தன்னையும்(சுயம்)
வெண்காயத் தன் ஐயும்(சுயம்பு)
அறியாமல் ஒடுங்கிச் சுருங்கி
முடங்கிக் கிடப்பதோ
நம் விதி
வெங்காயம் அரிந்தால்
வெண்கார முத்தி முன்னே
வெண்காய சித்தி பின்னே
முத்தி என்பது
ஒடுக்கம் சுருக்கம் முடக்கம்
இவற்றிலிருந்து
பரிபூரண சுதந்திரம்
சித்தி என்பது
அகண்ட அனகமாய் விரியும்
முச்சுயம்பு
நிச்சய நித்திய சத்திய
கரு உயிர் மெய்த்திருவுரு
ஆதி போதி ஜோதி நிலை
No comments:
Post a Comment