Saturday, June 25, 2016
பிரார்த்தனை 6
ஆதி மனிதம் என்ற உம் முழு அம்சமாக ஆதியில் எம்மை உம்மிலிருந்து வெளிப்படுத்தினீர். எம் இருதய நடுவுள் உறையும் மெய்யான கடவுளான சுயம்பு குருவே! ஆதி மனிதமான எம்மை எம் மெய் முழுதாய் மறந்து, நாகரிக மிருகம் என்ற இழி நிலையில் பிறந்திறந்து பிழைக்குகங் கருமச் சுழலில் சிக்கி பூஜ்ஜியத்துக்குச் சமமான சிதறிய விழிப்பில் மருட்குழியுள் கிடக்கிறோம். உம் அருட்கரம் நீட்டி எம்மை உம் அகண்ட விழிப்பில் ஈர்த்து உய்விப்பீராக! உம் திரு முன் எம் உயிரையும் உடம்பையும் சிதறிய பூஜ்ஜியத்துக்கு சமமான விழிப்பையும் அர்ப்பணித்து, உம்மிடம் பரிபூரணமாகச் சரணடைகிறோம். சுயம்பு குருவே! நீவிர் ஒருவரே எம் அடைக்கலமாகையால், அருட்பெருஞ்ஜோதியரும் தனிப்பெருங்கருணையரும் ஆகிய நீவிர் எமக்கு நிச்சய நித்திய சத்திய நிலையை அருள்வீராக! ஆதி மனித உன்னதத்தில் மீள எம்மை ஏற்றியருள்வீராக!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment