Saturday, June 25, 2016

புறநெறித் தூடணம்

அகத்தே அகண்டுள சுயம்பு விழிப்பு
புறத்தே கசிந்து சிதறும் நம்சிறு விழிப்பு
சுயம்பு விழிப்பு நம் சிறு விழிப்பீர்க்க
அகம்புறம் அகலாதொன்றும் அனக விழிப்பு

நம் சிறு விழிப்பீர்க்க அனுமதி அளிக்க
சுயம்பு விழிப்பு நம்மை விழுங்க
நம்முயிர் நித்திய நம்மெய் சத்திய
சுயம்பு களாகும் அற்புதம் நிச்சயம்

சுயம்பு நிச்சயம் நின்னகத் திருந்தும்
புறவுரு பின்னே ஓடித் திரிவாய்
உயிரது நலியும் மெய்யது நசியும்
கருமச் சுழலற சுயம்பு கைக்கொள்

புறத்தே விரிந்த கடைகளில் காலமும்
பொருளும் சத்தியும் நட்ட மாக்கிநீ
கொண்டவை வீணே அகத்துள சுயம்பு
சற்குரு பால்திரும் பு!திருந் து!இன்னே!

இவ்வுருபால் இழுப்பார் அவ்வுருபால் இழுப்பார்
எவ்வுருதான் நினக்கு ஞானம் ஈயும்
நின்னுருவுள் இருதய நடுவுள் வாழுஞ்
சற்குருவே ஈயும் பூரண ஞானம்

உளது, உள் அது, உள்!அது
உள உள வெளிப்படுஞ்
சுயம்பு குருவது நிச்சயம்

உள்! என்றால் உள்ளுவாயாக அதாவது உணர்வு பூர்வமாக உன்னுள் நினைப்பாயாக!

சுயம்பு குருஅவர் உன்னுள் இருக்க
கயமை கொண்டே புறவுரு தன்னைக்
குருவெனப் போற்றிக் குருடாய்க் கிடப்பாய்
குருடது நீக்கும் சுயம்புவே குருகாண்

No comments:

Post a Comment