ஒப்பிடுதல் விட்டு ஒப்பிலாச் சுயம்புவை
நெஞ்சகத்துள் பற்று! கருமச் சுழலறும்
தரும நிலையுறும் இருதய நடுவுள
குருவே அடைக்கலம் அடைக சரணாகதி
சற்குரு குகனின் பேருடையாய் நின்மார்பில்
அத்திரு மகனின் ஊருடையாய் ஏனோ
இக்கருமன உளைச்சலில் சிக்குண்டாய் இருதயத்
துள்புகுமுரு கபாலனாய்த் திருவுரு எடுப்பாய்
மனிதமாய் மாற்றம் பெற வைத்தது சுயம்புவின் மிகச்சிறு விழிப்பு
அதுவே சிதறிய நின் விழிப்பு
ஆதி மனிதமாய் மாற்றம் பெற வைக்கும்
இருதயநடுச் சுயம்புவின் அகண்ட பெரு விழிப்பு
சுயம்புவுக்குச் சொந்தமான நின் சிதறிய சிறு விழிப்பை நீ சுயம்புவிடம் சேர்க்க
No comments:
Post a Comment