முனைவர் பட்டம் பெற ஏற்கனவே அப்பட்டம் பெற்ற பேராசிரியரின் வழி நடத்துதலில் கல்லூரிகளில் நாம் பயில்கிறோம், அவருக்கு சிலை வடித்துப் பூசையோ படத்தில் ஏற்றி மாலையோ இட்டு அவர் பேரில் மந்திரங்களையுந் தோத்திரங்களையும் போற்றிகளையும் பாடி நாம் நேரத்தை வீணடிப்பதில்லை, அவருக்கு மதிப்பளித்து அவர் போதனைப்படி நடந்து முடிவில் நாமும் முனைவர் பட்டம் பெறுகிறோம். ஆன்மீகத்திலும் அவ்வாறு செய்கிறோமா? நல்ல ஒரு புறவுரு உபதேசியும் அப்பேராசிரியரைப் போலத் தான், நம்முள் இருதய நடுவில் உள்ள சுயம்பெனும் ஒரே கடவுளை குருவை நாம் உணர வழி நடத்துவதே அவர் கடமை. நாமும் அவர் வழி நடத்த சுயம்பு குருவை நம்முள் உணர முனைவதே நம்கடமை. அதை விட்டு அவர் படத்தை சுவரிலேற்றி அவருக்கு சிலை வடித்துப் பூசைகள் செய்வதும், அவர் புறவுரு முன் காலில் விழுவதும், கூனிக் குறுகிக் கும்பிடுவதும், சிரந் தாழ்த்தலும் அறிவீனங்கள். இன்றைய ஆன்மீகம் இத்தகைய அறிவீனத்தில் தான் மூழ்கிக் கிடக்கிறது, புறவுரு உபதேசிகளே வேண்டாம் என்னும் அளவுக்கு ஆரவார ஆடம்பரப் புறநெறிக் கூத்துகளால் கூச்சல்களால் குருட்டுக் குழியுள் வீழ்ந்து கிடக்கிறது, இதற்கு மாற்றாகவே எனக்குத் துணிவளித்து இருதய நடு சுயம்புவாம் ஏக தேவமே ஒரே குருவே இக்குழுமத்தின் மூலம் இப்போதனைகளைப் பேருபதேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறது, புரிக. உய்க.
மனந் திருப்புங்கள், புறவுருப் புற நெறிகளிலிருந்து, அக-அனகவுரு அக-அனக நெறி காட்டும் இருதய நடு சுயம்பு ஏக தேவ குருவின் பக்கம், அருளாதார சத்தியப் பேருலகம் உம் கையகம்
No comments:
Post a Comment