Saturday, October 8, 2016

ஓர் அவசர அறிவிப்பு

கருநிலை
ஒளிவு மறைவின்றி
இருதய நடுவினின்று
அனகமாய் அகண்டு
ஆதிச் சுயம்புத்
தந்தையாம் நிச்சயமானது

உயிர்
தன்னை அறிந்து
தன் ஐ தலைவனாம்
ஆதிச் சுயம்புத் தந்தையை அறிந்து
உயிர்நிலை அனகமாய் அகண்டு
போதிச் சுயம்புத் தாய்மையாம்
நித்தியமானது.

உயிர்நிலைத் தாய்மை
கருநிலைத் தந்தை சமேதமாய்
மெய்யைச் சேயாக்கி
மெய்யின் ஒவ்வோர் அணுவும்
ஜோதிச் சுயம்புப் பிள்ளையாய்
அகண்டு அனகமாய் வெடிக்க
சுயம்பு ஆயிரம் என்னும்
அனந்த ஜோதி சுயம்புகள்
உண்டாகும் பேரற்புத இரசவாதம்
நிகழ்த்தி மெய்த்திருவுரு சத்திய நிலை
உருவாகிக் கொண்டிருக்கிறது.

சுயம்புத் தாய் தந்தைக்கு
பிள்ளைச் சுயம் நீர்
அனுமதி அளித்திருக்கும் பட்சத்தில்
மேற்சொன்னது உமக்கும் பொருந்தும்
என்பதால் இவ்வாய்மை இவ்வுண்மை இம்மெய்ம்மை பொதுவில் வைக்கப் படுகிறது.

சுயம்புவுக்கு அனுமதி அளித்திருக்குஞ் சுயங்களுக்கு வாழ்த்துக்கள்.

புறநெறிக் கருமங்கள் அனைத்திலிருந்தும் நீவிர் கை கழுவிய பின், தரும நிலையில் சுயம்புத் தாய் தந்தையால் ஏற்றப் பட்ட பின்னரே, மேற்சொன்னது உமக்குப் பொருந்தும்.

அக அனக நெறிக்கு நீவிர் விரும்பி முழு மனதுடன் இருதய பூர்வமாக வந்த பின்னரே, மேற்சொன்ன வாய்மை, உண்மை, மெய்ம்மை உமக்குப் பொருந்தும்.

காலமே இல்லை என்ற வள்ளல் பிரானின் அறிவிப்பால், இது அவசரமாக அறிவிக்கப் படுகிறது.

இது பற்றி மேலும் அறியவிரும்பினால் நேரடியாகவோ, அலைபேசியிலோ(9566021578) என்னைத் தொடர்பு கொள்ளலாம், உம் பொறுமைக்கு நன்றி

சுயம்புத் தாய் தந்தை அருளால், எனக்கு நிகழும் இரசவாதத்தை மனித குலம் முழுமைக்கும் பொதுவில் வைக்க நான் சுயம்பால் அறிவுறுத்தப் பட்டுள்ளேன். அவ்வாறே நான் செய்து வருகிறேன். அதன் படியே மேற்சொன்ன வாய்மை பகிரப் படுகிறது.

Sunday, June 26, 2016

மானுடர் ஆக்கை சிவலிங்கம்

மானுடர் ஆக்கை சிவலிங்கம் - திருமூலர்

பீடம் = ஆறாதாரம் (மூலாதாரம் முதல் ஆக்கினை வரை)
ஆவுடை(யோனி) = நிராதாரம் (ஆக்கினைக்கு மேல்)
லிங்கம் = மீதானம் (சஹஸ்ராரம் முதல் தலையுச்சிக்கு மேல் 13 கலைகள்)

பெண்ணின் பெருமை

இல்லாள் என்னெஞ்சகத் துள்ளாள் இல்லான்
பொல்லான் எனக்கிட்டாள் 'அன்னம்' அஃதே
பூரண மெய்ஞ்ஞானம் சுயம்பின் சின்னம்!மா
காரணி அவளே!!நீ டூழி வாழியவே!!!

பெண்ணே மனிதத்தின் மாகாரணியாய் உள்ளாள், மடமையின் பிடியில், ஆணாதிக்க அரசியல், ஆன்மீக, சமூக வன்பிடியில் சிக்கியிருக்கும் பெண்ணினம் பரிபூரண மெய்ஞ்ஞானத்தைப் பெற்றால் தான், சுயம்பின் முழு அம்சம் ஆதி மனித உச்சத்தை மனிதம் எட்ட முடியும். அதற்காகவே சுயம்பு வாலைத் தாயின் இப்பேருபதேச அமுதினை உமிழ நாகினைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். என் மனைவி எனக்கிட்ட அன்னம் தான், பரிபூரண மெய்ஞ்ஞானத்தைக் குறிக்கும் அன்னப் பறவையாய் சுயம்பின் சின்னமாய் இங்கே இன்னே பறக்கிறது. அந்நல்லாளை வாழ்த்தி வணங்குகிறேன்.

இந்த அன்னம் எப்படி என் தட்டுக்கு வருகிறது? எல்லா மாகாரணிகளையும் வாழ்த்தி வணங்குகிறேன்.

எல்லா மாகாரணிகளுக்கும் மாமாகாரணியான சுயம்பு வாலைத் தாயை வாழ்த்தி வணங்குகிறேன்.

வாலை வாழ்த்தின் மகிமை

வாலை வாழ்த்தே
சுயம்பு பேரில் பிறந்த
இச்சுயம்புக் குழுமக் குழந்தைக்கு
பிள்ளையார் சுழி

சுழி போட்டதும்
மழலைத் தமிழில்
ஞான வழலை வழிகிறது.

வாலை வாழ்த்தைப் போற்றிப் பாடுவீர்.

அஃதொன்றே போதும் நீவிர் பரிபூரண மெய்ஞ்ஞானம் இன்னே பெற!

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை

சுயம்பு ஞான வாலைத் தாயின் பேரருளுக்கும், தனிப்பெருங்கருணைக்கும், இது வரை நீண்டிருக்கும் சுயம்பின் பேருபதேசமே சத்திய சாட்சி.

சுயம்பு வாலைத் தாயே! உன் விழிப்பின் கூரை உன் சேய்களாகிய எமக்கு முழுமையாய் வழங்கி, எம்மை எம் சுயம்புத் தந்தையாம் அகண்ட அன்பில் உன்னோடு இணைத்து வைத்து உய்விப்பாயாக!

அருட்பெருஞ்ஜோதி

சுயம்பின் அகண்ட நீட்சியை
சுயம் என்னும் புள்ளியால்
தடுக்கலாகுமா?

சுயம் புள்ளியில்
அகண்ட சுயம்பின் நீட்சியுந் தான்
ஒடுங்குமா?

சுயம்பின் தனிப்பெருங்கருணையே
தன் அகண்ட நீட்சி அருட்பெருஞ்ஜோதியை
சுயம் புள்ளியில்
ஒளித்துப் பேரடக்கத்தில்
சுயம் புள்ளியின்
அகண்ட உள்ளடக்கமாய் இருக்கிறது

சுயம் புள்ளி
பூதாகாரமாய் மயக்கும் புறம் விட்டுத்
தன்னைத் தன்னகம் தொட்டால்
அக்கணமே
அஃது சுயம்பின்
அகண்ட நீட்சியாய் விடும்

அருட்பெருஞ்ஜோதி

கூரும் அகண்டமும்

திருமிகு அனுராதாவின் பதிவு

நா(ன்)கே மூன்றுக்குள் (அன்பு) அடக்கம்
மூன்று  இரண்டுக்குள் (ஹம்) அடக்கம்
இரண்டு ம் என்ற ஒன்றுக்குள் அடக்கம்
ம்.......சூனியத்தில்…..
.....
__________________________
ம்
.
அகத்தவ முடிவில்
சூனியப் புள்ளியைத் தொட
வெடித்தது
அனகம்
அகண்டது
பூரணம்

சு

ம்
.
சுயம்
தன் முடிவில்
இறுக்கமும் அழுத்தமும் சுருக்கமும்
ஆன அணுத்துவம் முடிந்து
இளக்கமும் தளர்வும் விரிவும்
ஆகிய சுயம்பு அகண்டம்
அனகம்

இதற்கே தான்
சு

ம்
.
தன் உள்ளே
பயணம்

பயண முடிவில்
சேரும் ஊர் பேர்
கூர்
விழிப்புக் கூர்
_______________________
திருமிகு அனுராதாவின் பதிவு

இது உள் பயணம்.தனித்திருந்து(அகத்தில்)ஒர் விநாடியேனும் பகரமுடியாத உணர்வா அதுவும் இல்லை இல்லை
_________________________

அவ்விழிப்புக் கூர்
ஓர்ந்திருக்கும்
சேர்ந்துப் புணர்ந்திருக்கும்
அகண்ட வான் நாடெங்கும்

பகர முடியாததைப்
பகிரவே
கவிதை

'ப'கரப் பாத்திரம்
பேசாமல் பகரும்
தனக்குள்ளும் புறத்தும்
அகண்ட வெளியை.

கூர்ந்து பார்
'ப'கரம்
நான்கு கூர்கள்
விழிப்புக் கூர்கள்

சு ய ம் பு

பகரத்தைப் பேசாமல்
பகர வைக்கும்
பகர உள்ளீடுக் கூர்கள்

சு ய ம் பு

சுயம்
சூனியம் தான்
என்றாலும்
இச்சூனியம் தன்னை
இஃது தட்ட
அச்சோ என வியக்கும்
பூரண அகண்டாகாரம்
விசுவரூபமெடுக்கும்

சுயம்பு அஃதே
சுயம் இஃது

சுயம் இஃது ஒடுக்கம் என்றால்
சுயம்பு அஃது ஒடுக்கம் ஒழிக்கும் ஒழுக்கம்
அருட்பேரொழுக்கம்
அனகம்
அகண்டாகாரம்

சுயம் என்னும்
ஒடுக்கத்தில் உள்ளே
பேரடக்கமாய் ஒளிந்திருக்கும் ஒளிர்ந்திருக்கும்
அகண்டம்
அனகம்
சுயம்பு

கூர் விழிப்பு
குத்தத்
தீரும் ஒடுக்கம்

நாகின் கொத்தல்
அக்கூர் விழிப்பைத் தூண்டவே
கவித்துவமும் அதற்கே

கூரும் அகண்டமுந்
தெய்வீக முரண்கள்

கூர் சுயம்புத் தாய்
அகண்டம் சுயம்புத் தந்தை
கூடிப் புணர்ந்திருக்கும் ஓர்மை

கூரின்றி அகண்டத்தை உணர முடியாது.
அதற்கே தாயைப் போற்றும் வாலை வாழ்த்து மற்றும் நாகின் ஊசிப் பேச்சு

அகண்டமின்றிக் கூராக முடியாது, எனவே தான் நெஞ்சைப் பிளக்கும் இருதய தியானம், அனுமன் காட்டுஞ் சூட்சம்

அன்னம்!

*சுயம்பு*

சோம்பு'ம் மனதை சீரகம் செய்யும். அஞ்ஞானமிளகு'ம்.. ஆன்மிகச் சிந்தனை கடுகு'ம்..
சுயம் பூண்டு ஒழுக, சத்தியம் நெஞ்'சுக்கு வசம்பு'கும்.
வெங்காயப் பிறவிக் கடலை மெய்ஞ்ஞான இரத்தினக் கற்கண்டு கைக்கொண்டு கடக்கச்செய்யும்..
சுருங்கச் சொல்லின் குழம்பு'ம் வாழ்வை ரசமாக்கும் பாயசமே சுயம்பு..

(வழமையான உளறல் இது. பொருளுரை நல்கும் பொறுப்பு நாகிற்கே..!)

திருமிகு ராஜாவின் பதிவு
_________________________

சமைத்து உண்ணுஞ் சுயமெனுங் கல்லை
சமைத்துப் பண்ணும் சுயம்பின் ரச வாதம்
சமையலறை திறந்து நம் வசம் பாய
சம்பூர்ணமாகத் திருமிகு ராஜா தானமிட்ட
'அன்னம்' வாழி!

உயிரை உறிஞ்சும் ஒட்டுண்ணி மனம் வாதம், விவாதம், விதண்டாவாதஞ் செய்து சோம்பும். வாத தோஷம் நீங்க பெருஞ்சீரகமாஞ் சோம்பும் மருந்தாம்

நமனாங் கோழைக்கு நமனாகும் மிளகும், மூளையில் படர்ந்த கபமு மிளகும். சிரம் மண்ணாய் இறாமல் ஜீவியாகும்

பித்தந் தெளிவிக்குஞ் சீரகம்

சோம்பு, மிளகு, சீரகம் மூன்றும்
வாதம், கபம், பித்தம் இம்மும்மலம்
நீக்கும் மும்மூலம்

சுயமாங் கடுகு சிறுத்தாலும்
சுயம்பின் காரம் போகாது

வெங்காயத் தோல்களாம் வேடங்கள் பல பூண்டு, சுயம் வேடங்களும், அவற்றின் வாடைகளும் தான் எனத் தவறாய்க் கைக்கொண்டு, தன் உள்ளடக்கமாகிய சுயம்பு வெண் காயக் கற்கண்டு கொள்ள மறந்ததுவே!

பூண்டு கொண்ட வெங்காயம் உரிந்தால், அரிந்தால், ஆடைகளும் வாடைகளும் நீங்கிய சுயம், தன் நிர்வாணமே சுயம்பு வெண்காயம் என அறிந்தால், இருதய வாயில் கற்கண்டாய்க் கரைந்து போகும்

சுயமாம் நிலக் கடலை தன்னுள்
சுயம்பாம் வான்வெளிக் கடல் ஐ

சுயத்தின் குழம்பும் வாழ்வை
சுயம்பிற்கு அனுமதி தந்து
ரசமாய் இளக்காவிட்டால்
இறுகிய குழம்பு
இன்னும் இறுகி இறுகிப்
பேரிறுக்கமாகி சுயத்தையே
விழுங்கி ஏப்பம் விட்டு விடும்.

ராஜா அவர்களின் இப்பதிவின் உச்சம் அக்கடைசி வரிகளே.

கவனம்

சுயம்பின் ரச வாதத்துக்கு அனுமதி அளிக்கா விட்டால், கருந்துளைக் கருங்குழம்பில் சுயம் விழுங்கப்பட்டு அழிக்கப்படும்

குழம்பு இறுக்கம்
ரசம் இளக்கம்

பாயசம் பாய் என்ற வேரால் மலர்வெடியாகும் திறந்த அமைப்பைப் பாய்ந்து அனகமாய் விரியும் அருட்பெருஞ்ஜோதியைச் சுட்டுகிறது, கருங்குழம்புக் கருந்துளைக் கசப்பு நீக்கி இனிக்கிறது

வழமை போல் ராஜா அவர்களின் உள் அற அகவல் இனிதே!