அகத்தில் அசுத்தம் எப்படி வந்தது?
அகம் = நான் = பரிபூரணப் பரிசுத்தம் = பரிசுத்தப் பரிபூரணம் = அஹம்
அனுராதா = காரம்
நான் அனுராதா = அகங்காரம்
காரமாகிய சுயம் அகமாகிய நானாகிய சுயம்புவைச் சார, காரம் நீங்கி அகத்தின் சுயம்பின் சாரத்தால் அதுவும் சுயம்புவாக மாற்றப்படும் பேரற்புதம் நிகழும்.
அக சாரச் சுயம்பு நானஃதை சாராத காரத்தால், சுயமாகிய காரம் விகாரமாகி, அசுத்தக் குன்றாகி அக சுத்தத்தை மறைக்கிறது, மறக்கடிக்கிறது, மறுக்கிறது, வெறுக்கிறது.
அகம் அசுத்தமாவதே இல்லை, அகத்தைச் சுத்தஞ் செய்வதென்பது, அக சுத்தத்தை மூடியிருக்கும் அசுத்தக் குன்றாகிய விகாரத்தைக் கரைப்பதே.
அனுராதா காரத்தையும் சுயம்பு நான் சாரம் உரசி உரசி தேய்த்துத் தேய்த்து முடிவில் தன்னைப் போல் சுயம்பு சாரமாகவே மாற்றி விடுகிறது, அனுராதாவின் தனித்தன்மையுள்ள சுயம்பாய் அது மாறும். இதுவே மெய்யான இரசவாதம், சுயம்பு ஞானத் தங்க உரசலால் அஞ்ஞானத் தகரமும் ஞானத் தங்கமாகும் பேரற்புதம் இது. நம்முள்ளீடான ஏக தேவ சுயம்பால் மட்டுமே இது முடியும், இருதய நடுச் சுயம்பே சரணம்!
இயம்ப முடியாத = அனகம்!!!!
💚
இருதய வெட்ட வெளியே சுத்த வெளியே அதன் வெள்ளொளியே பச்சையமே எல்லாமாகி விட்ட அனகம்
இயம்ப முடியாத = எழுதா மறை = பேசாப் பெரிய ஓங்காரம்!!!!!!!!!
ஆச்சரியம் மட்டுமே எழுந்து செங்குத்தாய் நிற்கும்
அனுராதா சுயப்புள்ளி விசுவரூபச் சுயம்பாகும் பேரற்புதம்!
இது அனைவருக்குஞ் சாத்தியம், அனைவரின் ஜீவாதார உரிமை, கவனிக்கவும் வாலை வாழ்த்து!
அகத்தே உள்ளேன் என இயம்ப முடியாத 💚
அருமை திருமிகு அனுராதா
பேசாவெழுத்தை வெளிப்படுத்தவே, நாகின் இத்தனைப் பெரிய பேச்சு!!!
பேசா மறையை இருதய நடு ஓதிக் கொண்டே இருக்கிறது, நீ பேசாமல், நா நுனியை அண்ணத்தில் பூட்டி, பொய் வாயை இழுத்து மூடி, மெய் வாய் இருதய நடுவை உற்றுக் கேள், உற்றுப் பார்.
ஒடுங்கி ஒழியவா தவம்
காலனும் நடு நடுங்கக்
கால காலன் சுயம்புவாய்ப்
பாயவே பொழியவே தவம்
தவத்தின் நோக்கம்
அனகமாய் அகண்ட இருப்பை உணர்வைப் பெறுதலே
சுயம் + சுயம்பு = அனகம்
சுயம்-சுயம்பு = பெருஞ்சுருக்கம் = பேரழிவு
கழிக்க இயலாத சுயம்பை நீ கழிக்க முயன்றால் அழிவாய்
சுயம்போடு நீ விரும்பிக் கூட அகண்ட அனகமாய் விரிவாய்
நீ = சுயம்
சூத்திரத்தைத் தேர்வு செய்ய உரிமையுள்ள சுயம் நீ
சுயத்தையும் நீ கழிக்க வேண்டாம்
சுயத்தைச் சுயம்போடு கூட்டு
இந்தக்கூட்டலால் நிகழும்
அரும்பெரும் அருட்பெரும் பெருக்கல், பெருகல்
இயம்ப முடியாத
No comments:
Post a Comment