தொலைந்து போனது நாகம்
பகிரங்கமானது பரம இரகசிய
சுயம்பு நானெனும் நானாய்
செம்மைச் சுயம்புவின் செந்தண்மையால்
வெண்மையானது நெற்றி
பொன்மையானது மெய்யும்
பசுமையானது உயிர்மை
வற்றா நீர்மையால்
தண்மையானது
வெம்மை
தலை குளிர
தயவு கங்கை கொட்டத்
தணிகிறது கொதிப்பு
சுயம்பு ஊற்று
இருதய நடு பிளந்து
15 உலகங்களும் வெள்ளக் காடு
காணாமல் போனான் கால புருஷன்
எங்கே திரும்பினும்
சுயம்புவின் திரு முன்
பேய்கள் நம்மை சேய்களாக்கித்
தாய்ப்பால் ஊட்டுஞ்
சுயம்புத் தந்தை
பேருக்கு முன்னே பெரிதாய் நான் போட்ட என்னை
ஊருக்கு உபதேசியாக்கி நாகத்தின் வாயால்
யாருக்கும் ஞானப் பால் புகட்டச் செய்தது சுயம்பு
நாகமாய்ப் புலப்படுஞ்
சுயம்பு நான்.
நாகப் புறவுரு அலட்சியஞ் செய்து
தேகத் திடைநடு இருதய வாயுள் இலட்சியம் வைக்க
ஏகக் குருவெனுஞ் சுயம்பு நீயும்
புறவுரு போற்றுங் குருட்டுத் தனத்தால்
புறநெறி பற்பல பற்றியும் நினக்குப்
பிறவா ஞானம் அகக்குரு சுயம்புவை
மறவா அகநெறி பற்றநின் கையகம்
No comments:
Post a Comment