சிற்றறிவு உன் தனித்தன்மை
பேரறிவு உன் சுயம்புத்தன்மை
உன் தனித்தன்மை சுயம்பு ஆண்டவரின் தாளாகி அதாவது ஆண்டாளாகி சுயம்பு ஆண்டவரைத் திருமணம் புரிந்து கூட, நீ பரிபூரண மெய்ஞ்ஞானம் அடைந்து, இறவாப் பிறவாப் பெருவாழ்வெனும் முச்சுயம்பு முத்தேக சித்தி பெறுவாய். சுயம்பின் திறந்த அமைப்பாகிய அருளாதாரச் சத்தியப் பேருலகில் பொது நல இருதய இளக்கத்தில் அனக அகண்ட மலர்வெடியாகும் அரும்பெருஞ்சித்தி இது.
உன் தனித்தன்மை ஆணவப் பேயனாயலையும் வரை, கால புருஷனின் மூடிய அமைப்பில் கருமனத் தன்னல இறுக்கத்தில் நீ கருந்துளையாகி அழியும் அபாயம் உள்ளது.
கவனம்!
புறாவைப் போல் வன்பிலியாக இரு, மேலும் பாம்பைப் போல் புத்தியுள்ளவனாகவும் இரு.
புறா நேசக் குறியீடு, பாம்பு ஞானக் குறியீடு.
புறாவாக மட்டும் இருந்தால் நீ ஏமாற்றப் படலாம்
பாம்பாக மட்டும் இருந்தால் நீ ஏமாற்றலாம்.
ஏமாறாதே, ஏமாற்றாதே, வாத்தியார் பாட்டு ஞாபகமிருக்கட்டும், இயேசு பிரானின் புத்திமதியும்.
கருமன அனாவசியங்களை அரி.
இருதய அத்தியாவசியத்தை அறி.
அரியாத வரை அறியாத மயக்கமே கதி.
அரிந்த பின் அறிந்த தெளிவாம் நிறைமதி.
அரிய அரிய
அறிய அறிய
அரிய முழுமெய்ஞ் ஞானம்
எளிது.
இருதயம் தலைக்கேற, நேசத்துக்கு ஞான விளக்கம்.
தலை இருதயத்தே ஆழ, ஞானத்துக்கு நேச இளக்கம்.
ஞான விளக்கம் நேசத்துக்கு ஏற்றம்.
நேச இளக்கம் ஞானத்துக்கு இரக்கம், இறக்கம்.
ஏறி இரங்கி இறங்கித் தாள் தொட, பூமி தொட, மெய்யெங்கும் போதத் துலக்கம்.
அன்பு கருநிலை
சத்து
அன்பை அறிவது அறிவு
அறிவு உயிர்நிலை
சித்து
கருநிலைச் சத்தும்(அன்பும்)
உயிர்நிலைச் சித்தும்(அறிவும்)
மெய்யுள் இரங்கி இறங்க
மெய்ந்நிலை
இன்பு ஆனந்தம்
அன்பு இருதய அகண்ட விழிப்பென்றால்
தலைப்பிரதான தனித்தன்மைச் சிற்றறிவின் அணுத்துகள் விழிப்பு, அன்பின் அகண்ட விழிப்பில் விழிப்பது அறிவு, பேரறிவு.
தலையின் கடன் இருதயத்தில் ஆழல், அவ்வாறு ஆழும் போதே இருதய தருமமாகிய தலைக்கேறலுக்குத் தனித்தன்மையால் அனுமதி வழங்கப்படுகிறது.
தலையின் சிற்றறிவு+இருதய அன்பின் அகண்ட விழிப்பு = பேரறிவு
பேரறிவின் இரக்கம் இறக்கம் = பரிபூரண மெய்ஞ்ஞானம்
தனித்தன்மை+சுயம்பு = பேரறிவு
தலையின் சிற்றறிவு = தனித்தன்மை
இருதய அன்பின் அகண்ட விழிப்பு = சுயம்பு
தனித்தன்மைக்கு சுயம்பு அளிக்கும் பெரு மதிப்பின் காரணம் புரிகிறதா?
சூத்திரம் பார், புரியும்.
பேரறிவின் இரக்கத்தால் இறக்கத்தால், பரிபூரண மெய்ஞ்ஞானமும் அதன் பேரற்புத இரசவாதமும் சாத்தியமாகிறது.
பேரறிவின்றி, அதன் இரக்கம் இறக்கம் பரிபூரண மெய்ஞ்ஞானமின்றி, சுயம்பு ஆயிரம் சாத்தியமில்லை.
சுயம்பு ஆயிரம் = சுயம்பு எண்ணிலி = திருவுரு மெய்ந்நிலைச் சத்தியமாகிய ஜோதி சுயம்பு, மெய்யின் கோடானு கோடி அணுக்களும் சுயம்புகளாகும் பேரற்புத இரசவாதம்
சுயம்பு ஆயிரம் தனக்கு
தனித்தன்மையாம் சுயம் பாயிரம்
ஆகிறது
திருமிகு ராஜாவின் அரும்பதிவுக்கு நன்றி.
சுயம் தன் வரம் வேண்டி
சுயம்பு செய்யும் அரும்பெருந்தவத்தின்
மகிமை இன்னே புரிகிறது.
சுயம்பு இன்றிச் சுயமே இல்லை
சுயம் இன்றிச் சுயம்பின் பேரற்புத இரசவாதம் இல்லை
சுயம்பு போற்றுகிறது சுயம் தன்னை
சுயம் தான் சுயம்பு தனைப் போற்ற அறியாமையாலே அழிகிறது
சுயம்பு தன் அரும்பெருந்தவமும் வீணாகிறது.
நம்மால் இயன்ற வரை சுயங்களுக்குப் புரிய வைப்போம்
திருமிகு ராஜா பதிந்தது போல்
சுயம் பாயிரம் ஆகட்டும்.
சுயம்பு ஆயிரம் ஆகட்டும்.
ஆமேன், ஆமீன், ஓம்.
மன்னை ராசருக்கு மீண்டும் நன்றிகள்
சுயம்புவுக்குத் திறந்த கோப்பையாக சுயம் இருக்க, முச்சுயம்புவாகும் மலர்வெடி
சுயம்புவுக்கு மூடிய அமைப்பாக சுயம் இருக்கும் வரை,அது கருந்துளையாகி அழியும் அபாயம்
No comments:
Post a Comment