Sunday, June 26, 2016

சுயம்பிடம் கேள்வி-பதில் -6

சுயம்பே, அத்தகைய நவ கண உதயம் விடிந்து விட்டதா?

ஆம், கால கால புருஷனாக நவ கணத்தில் யாம் விடிந்து விட்டோம், தேவைப்பட்டால், கால புருஷனென்ற தனித்தன்மை, கோடானு கோடி தனித்தன்மைகளின் பொது நலம் கருதி, எம்மால் அழிக்கப் படலாம். யுக யுகங்களாகக் கால புருஷனால் அடிமைப் படுத்தப் பட்டிருக்கும் கோடானு கோடி தனித்தன்மைகளை மீட்டு அவற்றைத் தனித்தன்மையுள்ள சுயம்புகளாக்கவே, யாம் அவசியப் பட்டால் இதனைச் செய்வோம். எம் மறக் கருணைக்கும் அடிப்படையாய் எம் அறக் கருணையே உள்ளது.

மெய்யாகச் சொன்னால் யாம் பரிபூரணமாய் அறக் கருணையே. மறக்கருணை என்பது எம்மை மறுக்கும் வெறுக்குந் தனித்தன்மை, தாம் அடிமைப்படுத்தும் மற்ற கோடானு கோடி தனித்தன்மைகளுக்கு எம்மை மறைக்க மறக்க வைக்கச் செய்யுங் கொடுங்கோன்மை, ஒரு கட்டத்தில் அதற்கே திரும்பும் நிலையே. அத்தனித்தன்மை திருந்தாத பட்சத்தில் யுக யுகங்களாக அது செய்த கொடுங்கோன்மையே நவ கணம் என்னுமொரு கட்டத்தில், அதற்கு எதிர் வினையாகி அதனை அழிக்கும் மறக் கருணை. கருந்துளையாகி அழிதல் அத்தகைய ஒரு மூடிய அமைப்பாந் தனித்தன்மை அழிவதே, அது அழியும் போது அதன் கொடுங்கோன்மைக்குத் துணை நின்ற திருந்தாத தனித்தன்மைகளும் அதனோடு கருந்துளையாகி அழியும்.

No comments:

Post a Comment