Sunday, June 26, 2016

பிரார்த்தனை 9

பரிபூரண மெய்ஞ்ஞானம் என் ஜீவாதார உரிமையென ஐயந்திரிபற எனக்கு உணர்த்தியருளிய இருதய நடுச் சுயம்புத் தாய்மையே! பரிபூரண மெய்ஞ்ஞான முதல்வியே! இன்னே நின்னைப் பரிபூரணமாய்ச் சரணடைந்தேன் தந்தையும் குருவுமாகிய சுயம்புத் தாயே! என்னை நின் சேயாக்கிப் பரிபூரண மெய்ஞ்ஞானத்தை எனக்குப் புகட்டி என்னை உய்வித்தருள்வாயாக!

இன்னே = இக்கணமே = இப்போதே

No comments:

Post a Comment