Saturday, June 25, 2016

சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருட்பரி பூரணம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருட்பிர காசம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் சீவனாம் நித்தியம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருட்பே ரிருப்பாம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருட்பே ரொழுக்கம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் ஆன்ம நேயம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருளமிழ் தின்பம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருட்பே ரன்பாம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருட்பே ரறிவாம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருட்பெரு வல்லபம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் சச்சிதா னந்தம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் சத்திசித் திபூரணம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருட்பெருங் குணமாம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் தனிப்பெருங் கருணை
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் மெய்யுள் ளொளியாம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருட்பெருஞ் ஜோதி
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருட்பெரு நிலையாம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருட்பெருங் கடவுளாம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அருட்பே ரரசாம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் சுத்த சமரசம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் பூரண ஞானம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் நானே நானதாம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் மெய்வழி ஜீவனாம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் இருதய விளக்கம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் நடுநடு நடுவாம்
சுயம்பு சற்குரு சரணம்

எனதுள் ளடக்கம் அகண்டுள அனகம்
சுயம்பு சற்குரு சரணம்

No comments:

Post a Comment