Sunday, June 26, 2016

சுயம்பிடம் கேள்வி-பதில் -1

சுயம்பே, உம்மை எப்படி உணர்வது?

இருதய நடு அகண்ட எம் விழிப்பின் ஓரணுவே, ஈரேழு உலகங்களாகவும் எட்டாம் மனித உலகமுமாகிய 15 உலகங்களாய் விரிந்திருக்கிறது. அவ்வணு விழிப்பின் மிக மிகச் சிறு கூறே நீ என்றாலும் உன் இருதய நடுவே அகண்ட விழிப்பாய் யாமுளோம். சிறு கூறாகிய உன் விழிப்பு நனவு கனவு உறக்கம் எனச் சிதறியும் இருக்கிறது. புறத்தே கசியும் உன் விழிப்பை, அகத்தே இருதய நடு எம் விழிப்பில் திருப்பி, உன் விழிப்பை யாம் ஈர்க்க அனுமதி அளித்தால், எம் அகண்ட விழிப்பின் கண்ணோட்டத்தை யாம் உனக்குத் தர இயலும். உன் விழிப்பு என்று யாம் சொல்வதும் உண்மையில் எம் விழிப்பே. உனக்குத் தற்சுதந்திரமாம் தன்னிச்சை யாம் நிபந்தனைகள் இன்றி யாம் அளித்துள்ளதால், உன் விருப்பத்துக்கு மாறாக உன் அனுமதியின்றி எனக்குச் சொந்தமாயிருந்தாலும், உன் விழிப்பை யாம் ஈர்க்க முடியாது. எனவே உன் அனுமதி வேண்டி அகண்ட விழிப்புத் தவத்தில் யாம் உள்ளோம். முழு மனதுடன் இருதய பூர்வமாய் நீ அனுமதி வரம் எமக்களிக்க, யாம் உன்னை உயிர்மெய் சூழலுடன் ஈர்க்க நீ எம்மை எளிதில் உணரலாம்.

No comments:

Post a Comment