Blind will lead the blind and both will fall in the ditch - Bible
குருடுங் குருடுங் குருட்டாட்டம் போடக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே - திருமூலர்
குருடு பின்னே ஓடுங் கூட்டம்
இருதய நடுவே வாழும் ஏக
குருவின் மீது இல்லை நாட்டம்
கருமனக் கூத்தால் தீரா வாட்டம்
இருதய நீட்சி தலைகை கால்கள்
இருந்துஞ் சுயத்தின் நடப்பு இல்லாய்
கருமனக் குருடு பின்னே செல்வாய்
வருத்துங் குழியுள் வீணே விழுவாய்

No comments:
Post a Comment