Saturday, June 25, 2016
பிரார்த்தனை 1
தான் தோன்றியான, தனக்குத் தானே ஆதாரமான, தனக்குத் தானே தாய்-தந்தையான, தனக்குத் தானே பதி-பத்தினியான, தனக்குத் தானே சற்குருவான மெய்க்குருவான, தனக்குத் தானே தன்னொளியான தற்சுடரான சுயம்பிரகாசமான, தனக்குத் தானே தண்ணளியான, தனக்குத் தானே ஒரே கடவுளான, தன்னைத் தன்னால் வகுத்தும் பெருக்கியும் குறையா மிகாத் தானொன்றேயான, தானே ஒவ்வொன்றுக்கும் மீதமின்றித் தன்னையே முழுமையாய் வழங்கியும் நிற்கும் முழுமை வள்ளன்மைப் பேரீகையான, ஆதி மூலமான, அனாதி முதலான, அந்தமில் முடிவான, நடுவுள் நடுவுள் நடுவான, ஆதியான, ஜோதியான, போதியான, நிச்சயமான, சத்தியமான, நித்தியமான சுயம்பு ஒன்றே மெய்யான கடவுள், மெய்யான குரு, மெய்யான தாய்-தந்தை! இத்தகைய சுயம்புவிடம், நான் என் உடல் பொருள் ஆவியொடு பரிபூரணமாய்ச் சரணடைகிறேன்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment