Saturday, June 25, 2016

நம் பூஜ்ஜிய விழிப்பு

பூஜ்ஜியத்துக்குச் சம்மான நம் விழிப்பும் நனவு கனவு உறக்கம் என்று சிதறிய நிலையிலும், நமக்கு நம் உடலையும் உயிரையுஞ் செயல்படுத்த சுயம்புவால் அளிக்கப்பட்ட தானமே. சுயம்புவின் விழிப்பிலிருந்து நமக்கு அளிக்கப்பட்ட தருமமே. கால புருஷனால் படைக்கப் பட்ட நம் உடலும் உயிரும் இத்தான விழிப்பின்றேல் விழுந்து விடும், இத்தருமத்தைக் கருமச் சுழலில் தவிக்க விடுவதை விட்டு, நம் இருதய நடுச் சுயம்புவின் தருமக் கழலில் முழு மனதுடன் இருதய பூர்வமாய் அர்ப்பணிப்போம், கால புருஷனின் தாமே செயல்படாப் படைப்புகளாகிய நம் உயிரும் உடலும், நித்திய சத்திய சுயம்புகளாக்கும் பேரற்புதம், நம்முள்ளடக்க சுயம்பு வள்ளன்மையால் முடியும்.

பூஜ்ஜியத்துக்கு சமமான நம் விழிப்பையும் ஒரு பொருட்டாக சுயம்பு மதிப்பதன் காரணம் புரிகிறதா? அதுவும் சுயம்புவின் விழிப்பே! தாமே செயல்படா நம் உடலையும் உயிரையும் சுயம்புகளாக்குவதன் காரணம் சுயம்பு அவர் தம் வள்ளன்மை, வல்லமை!

கால புருஷனின் படைப்புகளென்றாலும், அவற்றை அழிக்காமல் காப்பதும், அவற்றுக்கும் அழியா நிலை அளிப்பதும், சுயம்பு அவர் தம் தனிப்பெருங்கருணைக்கும், பேரருளுக்கும், பேரீகைக்கும், பெருந்தயைக்குஞ் சத்தியப் பிரமாணம்

புரிவோம், நம் விழிப்பை சுயம்பு அவர் ஈர்க்க அனுமதித்து, நிச்சய நித்திய சத்தியப் பெரு நிலை பெறுவோம்!

No comments:

Post a Comment