Sunday, June 26, 2016

திருமிகு ராஜாவின் 'டிக்' - சுயம்பு முத்திரை

"தகரத் தேடல் தகரும்"
என்று சூத்திரமாக ராஜா அவர்கள் பதிந்திருந்தார்
இன்று சரியெனச் சுட்டும் டிக் மார்க்கைப் பதிந்திருக்கிறார் குறுஞ்சூத்திரமாக

காலனால் கலைக்கப் பட்டிருக்கும் நீ சரியாக வேண்டுமென்றால், அஞ்ஞானத் தகரமாகிய உன் புறத் தேடல்கள் அனைத்தையும் நீ தகர்த்தெறிய வேண்டும். அப்போது தான் நீ சரியாகி ஞானத் தங்கமாவாய்.

தகரத் தேடல் தகரா வரைக்கும் எதுவும் சரியாகாது

தகரத் தேடல் தகர்ந்தால் எல்லாஞ் சரியாகும்.

சுயம்புக் குழுமத்தின் முழு நோக்கமே தகரத் தேடலைத் தகர்த்து முதலில் நம்மையும் முடிவில் எல்லாவற்றையுஞ் சரி செய்வதே.

சுருங்கச் சொல்லி மெய்ப்பொருள் உணர்த்திய திருமிக ராஜாவுக்கு நன்றிகள்

சரியானால் நீ பசிய உயிர்மெய்
சரியாகா வரைக்குங் கசியும் உன் உயிர்மை, கழியும் உன் மெய்.
கவனம்!

பளிச்சென பச்சை டிக்
வெளிச்சத்தில்
எளிதில் சரி செய்யும்
நம்மக சுயம்பு முத்திரை

தேட வைத்துக் கலைந்த உன்னை இன்னுங் கலைக்கிறான் காலன்.
தேடாதே, கட!உள், கால காலன் சுயம்புவைக் கண்டு கொள்.
கலைந்த நீ சரியாவாய்.
கலைக்க இயலா ஆதி மனித நிலையாவாய்.
எனவே இருதய நடுச் சுயம்புவில் நிலை கொள்.
கருமனப் பேயாட்ட அலை தள்.
சரியாக நீ எல்லாஞ் சரியாகும்.
பச்சை டிக் போட்டு உன்னைப் பாஸ் ஆக்கும் சுயம்பு வள்ளலுக்கு கோடானு கோடி நன்றி சொல்.

உன் பச்சையம் வெள்ளொளிக்கு டிக் போட்டு
ஒளிச் சேர்க்கை செய்ய உருவாகும்
உன்னக சுயம்பு ராஜ முத்திரை.

வீணான தேடல்களில் பச்சையம் மறந்தாய்.
சுயம்பிரகாசம் மறுத்தாய்.
விழுந்தது உன் மேல் காலனின் மறைக்குங் கருப்பு முத்திரை.

No comments:

Post a Comment