Sunday, June 26, 2016

சரணங்கள்

என்தனித் தன்மை
தன்னை ஈர்த்து
முச்சுயம் பாக்குஞ்
சற்குரு சரணம்

மறமே செயநீ
அறவே அழிவாய்
எனஉரை சுயம்பு
அறமே சரணம்

அறமே வடிவாஞ்
சுயம்பில் கூட
அழியாய் எனுமென்
அகத்தோய் சரணம்

கரும அலைவுவிட்டு
தரும நிலையுற்று
அருட்தவத் திருவுருகொள
உதவுஞ் சுயம்புசரணம்

மனமது அடங்கி
உயிரினுள் திரும்பத்
உயிர்தனை உணருமென்
றுரைத்தோய் சரணம்

தன்னை உணரத்
தலைமைக் கருநிலை
நிச்சயம் உணரும்
என்றோய் சரணம்

தலைமை உணர
உயிரது உயிர்நிலை
நித்தியம் உற்றுயும்
என்றோய் சரணம்

உயிர்நிலை அதனால்
திருவுரு மெய்ந்நிலை
மெய்யுறுஞ் சத்தியம்
என்றோய் சரணம்

கருநிலை உயிர்நிலை
திருவுரு மெய்ந்நிலை
வெளிப்பட உரைத்தோய்
சுயம்பே சரணம்

தயவாய்த் தானே
எழும்பியான் உயவே
அறமே உரைத்தோய்
சுயம்பே சரணம்

புறவுரு குருவென
யுகயுக யுகமாய்ப்
புளுகியும் வென்றோய்
அகநடு குருவே
இருதயச் சுயம்பே
ஒருமைத் தயமே
விழுங்கெனை இன்னே
விழுந்தேன் என்னை
முழுதாய்த் தந்தேன்
சரணஞ் சரணம்

No comments:

Post a Comment