Tuesday, May 31, 2016

வாலை வாழ்த்து

வாலை வாழ்த்து

நவகணத் திரு வித்தை

ஆதி மூலி, பரிசுத்தி, பரிபூரணி, நீ வாழி!

ஆதி இருதயீ, அருந்தயாபரி, அருட்பெருஞ்ஜோதிமயி, தனிப்பெருங்கருணாகரி, நீ வாழி!

வரையவொணா ஒருவன் ஒருத்தி
வரையரைகளற்ற சற்குரு விருத்தி, நீ வாழி!

மார் நடுவினின்று மேலுங்கீழும், இடமும், வலமும், முன்னும், பின்னும், எத்திக்கும் பொங்கி அகண்டாகாரமாய் அகண்டுள சுத்த சமரசி, அனகி, நீ வாழி!

சித்திகள் யாவும் அடங்கிய சத்திய நிலையாம், ஈரெண்ணிலையெனும் நடுநிலை ஷோடசி, நீ வாழி!

நடு நிற்கும் மனிதம் எட்டின் அடிக்கீழ் ஏழும், முடி மேல் ஏழும் உலகங்கள் நிற்க வைத்தாய், நீ வாழி!

மன இதம் தந்து, மனிதத்தின் இருதய வாய் திறந்தாய், நீ வாழி!

நடு நிற்கும் மனிதம் எட்டுள் பொதிந்த பதினாறாம் அருளாதாரச் சத்தியப் பேருலகத்தை, இருளற, மருளற, வெருளற, பூரணத் தெருளுற, ஞான மெயப்பொருளுற உணர்த்தும் பரிபூரண மெய்ஞ்ஞான முதல்வி, நீ வாழி!

எவ்வுயிர்க்கும் பரிபூரண மெய்ஞ்ஞானம் ஜீவாதார உரிமையென, ஐயந்திரிபற உணர்த்தி, எம்முயிர்க்குள் சுயம்புவாய் விழித்துள தன்னொடு, எம்மையும் விழிப்பிக்கும் சுத்த சிவ துரியத்தி, சுத்த சிவ துரியாதீதத்தி, நீ வாழி!

உலகங்கள் கடந்து. உருவங்கள் கடந்து, உருவகங்கள் கடந்து, எவ்வுயிர்மெய்க்குள்ளும் சுயம்புவாய் விழித்துள, உயிர்க்குயிராம், மெய்க்கு மெய்யாம், உலக உருவ உருவக ஆதார, சத்புருஷர் சமேத சத்தியவதி சமேத சற்குரு மா காரணி, நீ வாழி!
[12:05, 5/27/2016] iamnaagaraa: மூலாதாரி, தூய சூக்குமி, நீ வாழி!

சுவாதிட்டானி, தூய தூலி, நீ வாழி!

மணிபூரகி, தூய உணர்வி, நீ வாழி!

உதரவிதானி, தூய எண்ணத்தி, நீ வாழி!

அனாகதி, தூய அகத்தி, நீ வாழி!

அமிழ்த கலசி, தூய உள்ளுணர்வி, நீ வாழி!

விசுத்தினி, தூய உண்டாக்கி, நீ வாழி!

அண்ணாக்கி, தூய மனோன்மணி, நீ வாழி!
உண்ணாக்கி, வாலை மனோன்மணி, நீ வாழி!

ஆக்கினி, தூய செந்தூரி, நீ வாழி!
ஆக்கினி, தூய குங்குமி, நீ வாழி!
ஆக்கினி, தூய மீதூலி, நீ வாழி!

சகஸ்ராரி, தூய மீசூக்குமி, நீ வாழி!

ஓம்.

வாலை வாழ்த்து சுயம்புத் தாய்மையின் அரும்பெரும் அருட் தீக்கை, சற்குரு மந்திர அக-அனக தீக்கை, இவ்வாழ்த்து உம் ஒவ்வொருவரின் குரலிலும் உரக்க இசைக்கப் பெறட்டும்! உம் குரலில் இவ்வாழ்த்து ஒலிப்பது மிகவும் அத்தியாவசியம், அப்போது தான் இவ்வருந்தீக்கை உம் உயிரிலும் உடலிலும் விழிப்பிலும் செயல்படத் தொடங்கும், இடக்கைத் தந்திரம் மற்றும் வலக்கைத் தந்திரம் இரண்டுந் தாண்டிய நடுநிலைத் தந்திரம் இது. முத்தேக சித்தி பெற வைக்கும் சுயம்புத் தாய்மையின் மந்திர வாக்கு இது, உம்மை மனித மிருக ஈன நிலையிலிருந்து ஆதி மனித அருநிலைக்கு உயர்த்தும் தாய்மையின் திருச் சக்கர யந்திரம் இது.