Sunday, June 26, 2016

சுயம் பார்ப்போம், சுயம்பு ஆர்ப்போம் 4

*பார்ப்போம்* என்றே எம் *சுயம்* பார்த்தீர்
*ஆர்ப்போம்* என்றே *சுயம்பு*மை ஆர்த்தீர்
பாரா எம்சுயம் உம்பால் திருப்பினீர்
பேசா தார்த்தீர் உம்மெய் சுயம்பே

உம்மை அல்லது உம்மெய் இரண்டும் பொருந்தும்

மன்னை ராசர் வாயி லாகச்
சென்னை நாகின் வாயில் வைத்தீர்
*சுயம்பார்ப் போம்*தய வாய்யாம் இன்னே
*சுயம்பு ஆர்ப்போம்* சுயங்கள் உயவே

தன்னைப் பாரா முகமாய் இருக்குஞ் சுயம் நம்மைத்
தன்னைப் பார்க்க வைக்க *சுயம் பார்ப்போம்* எம் இருதய விழியால் தயவாய்

என்றும்

தன்னைப் பார்க்க வைத்த சுயம் நமக்குத் தன்னை முழுமையாய் அறிவித்துணர்த்த *சுயம்பு ஆர்ப்போம்* பேசா மறையாய்ப் பேசாவெழுத்தாய்ப் பேசாப் பெரிய ஓங்காரமாய்த் தம்மைத் தம்மெய் முழங்குவோம்

என்றும் பேருறுதி அளித்திருக்கிறார் இருதய நடுச் சுயம்பு வள்ளல் பிரான்

இது நம் இருதய நடுச் சுயம்பு ஏக தேவ குருவால் அளிக்கப்படும் இருதய நயன அக அனக தீக்கை. போற்றுவோம், ஏற்போம். சுயம்பின் இவ்வருள் வாக்கை நமக்கு வெளிப்படுத்தியிருக்கும் திருமிகு மன்னை ராசரை(ராஜா) வாழ்த்துவோம்

முன்னே நம் உறுதியாகப் பட்டது
இன்னே சுயம்பு நமக்குத் தரும் பேருறுதியாக நம்மைத் தொட்டது.

No comments:

Post a Comment