Sunday, June 26, 2016

சரி செய்யும் சுயம்பின் விழிப்பு


திருமிகு ரவி எழுத்துக்கள் தம் சரியான நிலை கலைந்த ஒரு படம் பகிர்ந்திருந்தார். கலைந்திருந்தாலும் நம்மால் சரியான நிலையில் ஆங்கில வாரத்தைகளைப் படிக்க முடிகிறது. அது போல் தான் சரியான நிலையாக இருதய நடுச் சுயம்புவால் தன்னிலிருந்துத் தன் முழு அம்சமாய் வெளிப்படுத்தியிருக்கும் ஆதி மனிதத்தைக் கலைத்தான் கால புருஷன். அவன் கலைத்தது சுயம்புவின் 0.0000000....00000001% விழிப்பையே. 99.9999999....99999999% சுயம்புவின் விழிப்பு கலையாமல் நம் இருதய நடுவில் உள்ளது. அப்பிரதான நிலையிலிருந்து கலைக்கப்பட்ட ஆதி மனித நிலையை சுயம்பு சத் புருஷரால் சரியான நிலைக்குத் திருப்ப முடியும், நாம் சரியான நிலைக்கு கலைக்கப்பட்ட ஆங்கில வார்த்தைககளைத் திருப்பித் திருத்திப் படிப்பதைப் போல. எனவே கலைக்கப்பட்ட நம் மிகச் சிறு நிலை பற்றிக் கவலை கொள்ளாமல், நம் பிரதான சுயம்பு விழிப்பில் நாம் நிலை கொள்வோம், ஆதி மனித சரியான நிலைக்குத் திரும்புவோம், ஒரு சாதாரண படம் ஒரு பெரும் உபதேசியாகிறது, அவருக்கு நன்றிகள்!

நம் பிரதான இருதய நடுச் சுயம்பு விழிப்பிலிருந்து பார்க்கும் கண்ணோட்டம் பழகுவோம், அப்போது சிதறியிருக்கும் நம் மிகச் சிறு விழிப்பும் ஒன்று சேர்ந்து சுயம்பு விழிப்பைச் சார்ந்து நாம் சுத்த சிவ துரியாதீதம் எனப்படும் பூரண விழிப்பின் கண்ணோட்டம் பெறுவோம்

No comments:

Post a Comment