எல்லாம் வல்லார்
வள்ளல் நல்லார்
நெஞ்சகத் துள்ளார்
சற்குரு சரணம்
உள்ளார் நிச்சயம்
உயிரார் நித்தியம்
மெய்யார் சத்தியம்
சற்குரு சரணம்
எளியர் அளியர்
வெளியர் ஒளியர்
உள்ளக அனகர்
சற்குரு சரணம்
ஆதி காரணர்
ஜோதி பூரணர்
போதி தாரகர்
வாலறி வானவர்
நேசக வாழ்நர்
போதகர் சரணம்
சுயம்பு யோகினித் தாயு மானவர்
விழிப்பின் மேடாம் உட்குரு வானவர்
தனித்திருத் தந்தை கருணை வள்ளல்
இனித்திருக் கும்நம் இருதயர் சரணம்
சரணஞ் சொல்லவும் சட்டென எழும்பிக்
கரணச் சுத்தம் பட்டெனச் செய்து
உயிருக் குயிராய் சிக்கெனத் தழுவி
உயர்மெய் யாய்மெய் யுள்ளகர் சரணம்
No comments:
Post a Comment