Saturday, June 25, 2016

விழிப்பு

பரிபூரண மெய்ஞ்ஞானத்தைப் பெறுவதில் மனிதத்துக்கு எந்த சிக்கலும் இல்லை.
பரிபூரண மெய்ஞ்ஞானத்தைப் பெற்று 15 உலகங்களயும்  16ம் சத்தியப் பேருலகில்  மீட்பதற்கென்றே மனிதம் ஆதியில் அமைக்கப்பட்டுள்ளது

நடுவாம் மனித செங்குத்து நடுவில் மார் நடு இருதய வாயில் 16ம் பேருலகில் சுயம்பு வீரியமாய் தீர்க்கமாய் மாகாரணியாய் விழித்திருக்கிறது

மனித விழிப்பு சுயம்பு விழிப்பைச் சாரும் சகச நிலைச் சமாதியில் கால புருஷனுக்குக் காலனாகும் கால கால புருஷனாக சத் புருஷர் சமேத சத்தியவதி சமேத சற்குரு சுயம்பு எழும் சுத்த சிவ துரியாதீதம் மனிதத்துக்கு சாத்தியமாகவே உள்ளது

நனவு+கனவு+உறக்கம்+துரியம் = துரியாதீதம்

1%+99%=100%

மனித விழிப்பு 1%, சுயம்புவின் துரிய விழிப்பு 99%, மனிதம் சுயம்புவோடு கூடிய துரியாதீத விழிப்பு 100%

15 உலக சிக்கல் சிறு நெறிகளைப் பழகிப் பழகி, 16ம் பேருலகின் சிக்கலற்ற பெரு நெறி நமக்கு நம்ப முடியா எளிமையாயிருக்கிறது

சுயம்பு முழுப் பூசணிக் காயைப் புளுகுச் சோற்றில் மறைப்பதான மாயங்கள் நனி மிக உண்டே என்றாலும், மறைப்பும் மறப்பும் மறுப்பும் வெறுப்புந் தாண்டியே சுயம்பு உள்ளது

இருக்கும் அவலங்களை இல்லையென்று தள்ள முடியாது, அதன் மூலப் புளுகுகளைத் தள்ளிவிட, ஆதி மூல சுயம்புவில் உறுதியாய்த் தொற்றி விட, அவலங்கள் நீங்கும் தவலயம் கை வசம்

கால புருஷனின் ஆளுமையில் பிறப்பும் இறப்பும் பிழைப்பும் விதியாகிறது. விதியை மதியால் வெல்லாம் என்றுஞ் சொல்லப்பட்டிருக்கிறது. மதி சந்திரன் 16 கலை, 16ம் சத்தியப் பேருலகை அறியும் மதியால் புத்தியால், கால கால புருஷனாம் சுயம்புவின் உத்தியால் விதியை வெல்லலாம்

No comments:

Post a Comment