Saturday, June 25, 2016

மறைப்பும் மறப்பும் மறுப்பும் வெறுப்பும்

மறைப்பும் மறப்பும் இல்லையென்றால் பிறப்பெனும் பேதைமை இல்லை, இறப்பெனும் வேதனை இல்லை, இடையே ஊசலாடும் பிழைப்பெனும் சோதனையும் இல்லை

மறைப்பால் மறப்பால் புறத் தெய்வங்களைக் கும்பிடும் ஆத்திகமும், அதன் மறுப்பால் பின் வெறுப்பால் நாத்திகமும் தோன்றியதும் யாம் அறிவோம்

ஆதியில் கடவுளைப் பற்றிய உண்மையை மறைத்தவன் ஓர் வல்லவன், அவன்பூட்டிய பூட்டுக்குச் சாவி இது வரை காணப்படவில்லை என்று வள்ளல் பிரான் கால புருஷனை சூசகமாகச் சுட்டுவதும், தானே கால புருஷனின் பூட்டை உடைக்கும் கால கால புருஷனான சுயம்புவின் அம்சம் என்பதையும் சமரச சுத்த சன்மார்க்கம் தன் வருகைக்குப் பின் வந்ததையும் பேருபதேசத்தில் உரைப்பதை நாம் கவனங் கொள்ள வேண்டும்

சுயம்புவின் 99% துரிய விழிப்பில் மறைப்பும் மறப்பும் மறுப்பும் வெறுப்பும் அறவே இல்லை

மனிதத்தின் 1%  நனவு கனவு உறக்கம் என்று சிதறிய விழிப்பில் அந்நான்கும் நிச்சயம் உண்டு

கவனம்! பாம்பைப் போல் தந்திர புத்தி உள்ளவராகவும் இருப்போம், புறாவைப் போல் வன்பில்லாதவராக இருக்கும் போதும், இயேசு பிரானின் வாசகம் படி

ஆனால் ஆதி மனிதம் இப்படி இருந்ததில்லை, சுயம்புவின் முழு அம்சமாக சுத்த சிவ துரியாதீத விழிப்பில் நாம் ஆதி மனிதமாய் இருந்திருக்கிறோம், பிறகுப் பெரு வீழ்ச்சியான devolution/evolution எனப்படும் பரிணாமச் சுழலில் கால புருஷனால் சிக்க வைக்கப் பட்டோம்

வள்ளல் பிரான் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் ஷோடச சித்தி எனப்படும் சத்திய நிலை அடைந்த பின் சுத்த சிவ துரியாதீதத்தை மனிதத்துள் கொணர்ந்தார்

அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் நாம், அவர் அடைந்த அதே பெரு வாழ்வை சத்தியநிலையை அடைவதே கடனைத் திருப்பித் தரும் ஒரே வழி

முச்சுயம்புவான அவரே நம்மை அந்நிலை பெற வழி நடத்திச் செல்வார்

சிறப்பெனும் செம்பொருளான சுயம்புவைக் காண்பதன் மூலமே பிறப்பெனும் பேதைமை நீங்கும் என்ற திருவள்ளுவரின் அருள் வாக்கையும் நினைவில் வைப்போம்

No comments:

Post a Comment