அருள்மிகு திருமூலர் வாக்குப்படி,
எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை
எல்லாம் அறியும் அறிவு தன் 'ஐ' அதாவது தன் தலைமையான சுயம்பு, ஐ = அ+இ, அதாவது அகர சுத்த சிவத் தந்தையும், இகர அருட்சத்தித் தாயுமாகிய ஐ என்னும் சற்குரு மும்மூலத் தலைமை. அது அதுவாக இருத்தலையும் அது அறிகிறது, துச்சமான அற்பமான இதுவாம் நம்மையும் நம் உடலுயிரையும் தன் போல் சுயம்புவாக ஆக்கவும் அது அறிகிறது. ஏனென்றால் அது எல்லாம் அறியும் அறிவு.
எல்லாம் அறியும் அறிவுதனை "நான்"என்னில்
எல்லாம் அறிந்த "இறை"எனலாமே
அடுத்த இரு வரிகளில் சூத்திரந் தருகிறார்.
எல்லாம் அறியும் அறிவு = தன் ஐ = நான் = இறை
நான் என்றிருப்பதன்றி வேறொன்றறியேன் பராபரமே! இது திருமூலர் வாசகம்.
நான் = ஒன்று = சுயம்பு
நான் என்ற ஒன்றாய் சுயம்புவாய் இருப்பதையே அறிகிறேன், அவ்வொன்றன்றி வேறொன்றறியேன் பராபரமே!
அது = நான் = தன் ஐ = எல்லாம் அறிந்த இறை
நான் இருக்கிறேன்
நான் அறிகிறேன்
நான் என்னை அறிகிறேன்
நானே
I AM
I KNOW
I KNOW I AM
I AM THAT I AM
தன்னிருப்பாய், தன்னறிவாய், தன்னிருப்பின் தன்னறிவாய், தானேயாய் நிற்கும் சுயம்பு ஒன்றே குரு
குரு = க் + உரு = ககர மெய்யுரு. ககர மெய் ஏகத்தைக் குறிப்பதால், ஒன்றைக் குறிப்பதால், குரு = ஏக உரு = ஓருரு. இச்சூத்திரமே உருவங்கள் உபதேசிகள் ஏக உரு ஓருரு ஆகாமையால் சுயம்பு ஒன்றே ஏக உரு ஓருரு ஆவதால், சுயம்பு ஒன்றே குரு என்பதன் சத்தியப் பிரமாணம்.
புறவுரு நாட்டம்
அழித்தெனை யாண்ட
உட்குரு நாதா
சற்குரு சரணம்
அவ்வுரு இவ்வுரு
பல்லுரு வங்கட்
கப்பால் அருவம்
சற்குரு சரணம்
அவ்வுரு இவ்வுரு
எல்லாந் தாண்டிய
உவ்வுரு(உக்குரு) உண்மை
சற்குரு சரணம்
புறவுருச் செருகல்
பலவும் உருவும்
உட்குரு நாதா
சற்குரு சரணம்
புறவுரு மாயைப்
படலங் கரைக்கும்
உட்குரு நாதா
சற்குரு சரணம்
இந்த 5 சரணங்களையும் இருதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள், பரிபூரண மெய்ஞ்ஞானம் பெறுவதற்கான அடிப்படையை சுயம்பு இங்கே உணர்த்தியிருக்கிறார்
உருவை குருவென்பது உருப்படாமல் போவதற்கென்றே உருவாக்கப்பட்ட பொய் வழி
சுயம்புவாம் ஏகவுருவையே ஓருருவையே குருவென்பது, உருப்படுவதற்கு ஏற்ற மெய்வழி
அருவ நெறியுள்
உருவ ஆளவர்
உய்ந்திடும் மெய்வழி
சற்குரு சரணம்
அருவ குருவே
உருவ ஆளினும்
வல்லார் என்பார்
சற்குரு சரணம்
உருவ ஆட்களின்
பெருமை யாவும்
விஞ்சும் வித்தகர்
சற்குரு சரணம்
No comments:
Post a Comment