அனைவராலும் முழு விழிப்படைய இயலும். இது நிச்சயம், சத்தியம், நித்தியம். அருந்தவம் பெருந்தவஞ் செய்வது சுயம்புவே, அது 99% சுத்த சிவ துரிய விழிப்பு நிலை, நனவு, கனவு, சொப்பனம் என்று சிதறிக் கிடக்கும் நம் 1% விழிப்பை அவ்வருந்தவ அப்பெருந்தவ விழிப்போடு தொற்ற வைப்பதுவே நம்மால் செய்ய இயன்ற நற்றவம், இதன் மூலம் நம்மையும் உடல் உயிரையும் தன்னையும்சுத்த சிவ துரியாதீத விழிப்பில் எழுப்பி விடும் சுயம்புவின் அருந்தந்திரம், பெருந்தந்திரம்
இந்த 1% இருப்பதுவே, 99% சுயம்புவின் தனிப்பெருங்கருணையினால்,அருட்பெருஞ்ஜோதியால், என்பதை அறிந்துணர்ந்து பேரடக்கத்துடன் நாம் இருந்தால் போதும், அடக்கம் அமர அருள் உய்க்கும், திருவள்ளுவர் வாய்மையைத் தன் உண்மையாக்கிப் பின் மெய்ம்மையாகி நிற்கும் வள்ளல் பிரானே நம்க்கு சத்தியப் பிரமாணம்
1% என்று நான்சொல்வதும் மரியாதைக்காகத் தான், உண்மையில் அது 0.000000000-------000001% தான், சுயம்பு 99.99999999-------99999%!!!
ஈயினும் இழிந்தேன் நாயினுங் கடையேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி
என்ற வள்ளல் பிரானின் வியத்தகு பேரடக்கம் இதற்கு மெய்ச்சாட்சியாகும்
100% சுத்த சிவ துரியாதீத விழிப்பில் அப்படி இருந்த நான், இப்படி அற்ப விழிப்பில் 0.0000000-----0000% ஆகி விட்டேனே என்ற விவேக் வசனந் தான்!
இப்படி இருந்த நான், எப்படி ஆகி விட்டேன் என்ற வியப்பு வசனமும் சுயம்புவின் விவேகம் நமக்கு சாத்தியமாக்கும்
No comments:
Post a Comment