புல்லிலும் உண்டு சுயம்பு
புழுவிலும் உண்டு சுயம்பு
கல்லிலும் உண்டு சுயம்பு
துரும்பிலும் உண்டு சுயம்பு
ஒவ்வொன்றிலும் உண்டு சுயம்பு
உன்னிலும் உண்டு சுயம்பு
என்னிலும் உண்டு சுயம்பு
எனவே ஒவ்வொன்றும் திருமிகு கிருஷ்ணசாமி பதியும் இருதய வணக்கத்திற்குரியது. ஒவ்வொன்றிலும் சரி சமமாய் சுத்த சமரசமாய்ப் பெரிதுமில்லா சிறிதுமில்லா ஒன்றாய் சுயம்பு உள்ளது, நினைவில் வைப்போம், மிதிப்பதையும் மதிப்போம், குப்பையையும் மரியாதையுடன் உரிய இடத்தில் சேர்ப்போம்
இருதய வணக்கமே மெய்யான வணக்கம். கூனிக் குறுகி உருக்களைக் கும்பிடுவதும், உருக்களின் காலில் விழுவதும் அல்லவே அல்ல.
உயிர்கள் அனைத்துமாகிய நாம் யாவரும் ஒரே குலம், சற்குரு குலம், ஆதி மூல சுயம்பு ஒன்றே தேவம்
வேறெதுவும் வேறெவரும் இல்லை இருதய நடுச் சுயம்பு ஒன்றேயன்றி
வரையவொணா வரையரைகளற்ற இருதய நடுச் சுயம்பு ஒன்றே (சற்)குரு
நினைவில் வைப்போம்
No comments:
Post a Comment