Saturday, June 25, 2016

சிந்தனைக்கு

கருவறைப் பிறப்பு, கல்லறை இறப்பு, இருட்டறைப் பிழைப்பு என்ற கருமச் சுழலிலிருந்து விடுபட, சுயம்புவின் தருமக் கழலைச் சரணடைய வேண்டும்

சிரம் ஜீவியாக இருதயப் பிளவில் அம்மையப்பர் சுயம்புவைக் காண். காணாயாயின் சிரம் மிதிபடும் மண்ணாகும்.

கட! உள்
வெளிப்படுஞ்
சுயம்புக் கடவுள்

உள்ளதென்று நீ கொண்டதெல்லாம் உளுத்துப் போனது
உள்ளதொன்று சுயம்பு மின்னி உன்னை வெளுத்துப் போட்டது

நவ கணச் சுழலில் சிக்கி
நால்யுகச் சிக்கல் அறுந்தது
"நான்" முகச் சுயம்பு எழுந்தது

No comments:

Post a Comment