Saturday, June 25, 2016

திறந்த மூடிய அமைப்புகள்

உன் உடம்பும் உன் உயிரும் கால புருஷனால் படைக்கப்பட்ட அநித்தியம், அசத்தியம். அநித்திய உயிரையும் அசத்திய உடம்பையும் நித்திய சத்தியமாக்க வல்லதே சுயம்பு எனுஞ் சத்தியம்

சத்திய நிலை என்று வள்ளல் பிரான் இதைச் சொல்கிறார். சித்திகளனையத்தையுந் தெளிவித்தெனக்கே சத்திய நிலை தனை தயவினில் தந்தனை அகவல் வரிகள்

மாயையினுள்ளே விழித்திருக்கும் சுயம்புவே சத்தியம்

கால புருஷனும் சுயம்புவின் அம்சமாக புருஷோத்தமனாக இருந்தவன்தான். 16 உலகங்களையும் தன் ஆளுமைக்குள் அடக்க வேண்டும் என்ற விபரீத ஆசையால் அவன் தன் சுயம்புத்தன்மை மறைந்து மறந்து, 15 உலகங்களைத் தன்னொடு வீழ வைத்தான். வீழாத 16ம் உலகம் 8ம் மனிதத்தின் மார் நடு இருதயத்தில் பரம இரகசியமாக ஒளிக்கப்பட்டது. பரம இரகசிய பகிரங்கம் அனுமனின் மார் நடுப் பிளவில் உணர்த்தப் படுகிறது. அங்கே தான் அம்மையப்பர் சுயம்பு 15 உலகங்களையும் மீட்க விழித்திருக்கிறது.

மாயை என்பது மூடிய அமைப்பு(closed system)
சுயம்பு சத்தியம் திறந்த அமைப்பு(open system)

மூடிய அமைப்பு கருந்துளையாக முடியும்(black hole)
திறந்த அமைப்பு மலர்வெடியாக விடியும்(supernova)

நீ தீர்மானிக்க வேண்டியது கால புருஷனின் மூடிய அமைப்பில் முடியப் போகிறாயா அல்லது சுயம்பு சத்தியத்தின் திறந்த அமைப்பில் விடியப் போகிறாயா என்று

நான் சொல்வது meta science. மூடிய அமைப்பில் அடங்கா இயக்கம் அதிகமாகி chaos அது இயங்கா முடக்கத்தில் inertia முடிந்து போகும்

திறந்த அமைப்பில் ஒழுங்கு order அதிகமாகி சத்திய நிலையில் அனகமாய் அகண்டு விரியும், விடியும்.

In a closed system, entropy or disorder or chaos will forever increase until the system will collapse upon itself

In a open system, order or syntropy will forever increase until the sysyem will expand and self sustain itself forever

the first is 2nd law of thermodynamics

the second is suyambu law of divine dynamics

திறந்த அமைப்பை மறந்து போனதால் வந்ததே மூடிய அமைப்பு

சுயம்பு சத்தியத்தோடு விழித்திரு

தவம் புரியும் சுயம்புவொடு சேர்ந்திரு, சார்ந்திரு

இதுவே உன் கடைசிப் பிறவி

நம் கடைசிப் பிறவி

திறந்த அமைப்பில் நம்மை ஈர்க்க சுயம்பு சத்தியம் செயல் படத் தொடங்கி விட்டது

நீ அதன் செயல்பாட்டுக்குத் தடை செய்யாமல் சும்மா இருந்தால் போதும். அது உன்னை ஈர்த்துக் கொள்ளும்

உன்னில் உள்ள சுயம்புவைப் பக்தி செய்
புத்தி கிட்டும்
முத்தி கிட்டும்
சித்தி கிட்டும்
சத்திய நிலை கிட்டும்

புறத் தெய்வங்களின் மீதுசெலுத்திய பக்தியை அக அனகக் கடவுளாம் சுயம்புவின் பக்கம் திருப்பினால் போதும்

புறச் சடங்குகள் செய்யப் பயன்படுத்திய புத்தியை அக அனகக் கடவுளாம் சுயம்புவை வழிபடத் திருப்பினால் போதும்

தலைக்கு மேலுள்ள கங்கா தர அமிழ்த நீர் வளையம் தலைக்குள் இறங்கும்

No comments:

Post a Comment